Wednesday, August 17, 2011

ராஜீவ் காந்தி கொலை என்ற நாகாஸ்திரம் மீண்டும் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். அது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு.

அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. ராஜீவ் போன்ற போர்க்குற்றவாளிகளை.. நீதியின் முன் நிறுத்தி தண்டித்ததும் இல்லை. ஏன் இது என்று எனக்குப் புரியவில்லை.. இந்த உலகில் அப்பாவிகள் மீதும்.. அதிகாரமற்றவர்கள் மீதும் தானா நீதி காட்டப்படுகிறது.

சரி அவற்றை வழமை போல "மறப்போம் மன்னிப்போம்"..( ராஜீவ் காந்தியை கொன்றால் அது குற்றம்.. அதை ஏற்றுக் கொள்வோம்.. ஆனால் ராஜீவ் காந்தி எங்களைக் கொன்றால் மறப்போம் மன்னிப்போம்... நல்ல கொள்கை....) அதன்படி நின்றால் கூட..

இந்தியாவால் ராஜீவ் கொலை தொடர்பில் பிரதான குற்றவாளிகளாகச் சொல்லப்பட்டு பிரபாகரனும்.. பொட்டு அம்மானும் இன்னும் 60,000 அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டு விட்டனர். (ஐநாவும்..இந்தியாவும் சிங்களமும் அறிவித்ததற்கு அமைய)

இந்தக் கொலையில் இந்திய அதிகார வர்க்கத்தின் விருப்பப்படி எல்லோரும் பழிவாங்கப்பட்டு விட்டனர். இந்தக் கொலையில் நேரடியாக பங்கேற்றதாகச் சொல்லப்பட்ட பலரும் (பிரபாகரன்.. பொட்டு அம்மான்.. ஒற்றைக்கண் சிவராசன்..) என்று எல்லோருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே கொல்லப்பட்டுள்ளனர்.. அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளனர்.

நளினி உட்பட்ட இந்த 4 பேரும்.. உண்மையில் இந்திய குற்றச்சாட்டின் பிரகாரம்... இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தப்படவர்கள் கிடையாது. கொலைக்கு ஏதோ ஒரு வழியில் தெரிந்தோ தெரியாமலோ உதவினர் என்று தான் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் உத்தரவுக்கு அமைய வாக்குமூலங்களைப் பெறுவதில் கில்லாடிகள். இதனை உலகமே அறியும். அந்த வகையில் இந்த மரண தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆக.. 1991 இல் இருந்து ராஜீவ் காந்தி கொலை என்பதனூடாக.. இந்திய பிராந்திய நலன் திட்டமிட்டு காக்கப்படும் நடவடிக்கைகளும்.. காங்கிரஸ் கட்சியினூடான.. நேரு குடும்ப ஆட்சி தொடர்வதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தக் கொலையை வைத்து இந்தியம் தனது அதி உச்ச பலனை அடைய முடிவு செய்திருக்கிறது. ஆனால்.. ராஜீவ் என்ற அந்தக் கொடூரனால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் இன்று வரை கிடைக்கவில்லை. அதேபோல் தான் இந்த 4 அப்பாவிகள் மீதும்.. நீதி செயற்படவில்லை. நளினிக்கு.. மன்னிப்பு அளிக்கப்பட்டும்.. தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளார். மாறாக மீண்டும் மீண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப இந்திய நீதித்துறை பயன்படுத்தப்படும் மிகக் கேவலமான தன்மையே காணப்படுகிறது. இது தெற்காசியாவில் ஒரு தீராத நோயும் கூட. இது முற்றுமுழுதான ஜனநாயக விரோதச் செயலும் கூட.

இந்த 3 பேருக்குமான மரண தண்டனை என்பதை தமிழக காங்கிரஸ் வாழ்த்தி இருப்பதோடு புலிகளே தங்கள் எதிரிகள் என்றும் கூறி இருக்கின்றனர். இது தான் காங்கிரஸின் நிலைப்பாடு என்றால்.. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை வீடு தேடி வந்து கொன்ற.. ராஜீவ்.. சோனியா உட்பட முழுக் காங்கிரசும் அவர்களின் எதிரிகள். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.

ஆனால் இப்போது உள்ள பிரச்சனை.. இந்த 3 அப்பாவிகளின் உயிர்களையும் காங்கிரஸ் தனது பழிவாங்கல் கொள்கைக்காக பலியிடுவதில் இருந்து பாதுகாப்பது தான்.

சோனியா காங்கிரஸ் மீண்டும்.. இந்த ராஜீவ் கொலையை வைத்து இன்னொரு நாடகத்தை ஆட தொடங்கி இருக்கிறது. அண்மைய தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியைக் கண்டது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் எழுச்சியும் சீமானின் துணிச்சலுமே காரணமாக இருந்தது.சீமானுக்கு இந்த 3 பேருடனும் சிறையில் தொடர்பிருந்தது. இதனை சீமானே வெளியில் சொன்ன போது காங்கிரஸ் அதனை பெரிதுபடுத்தவில்லை... ஆனால் உள்ளூர ரசித்தது.

மேலும் தமிழகத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் விருப்புக்கு மாறாக அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர் சார்ப்பு தீர்மானங்களை இயற்றி உள்ளமையும் சோனியா நட்புப் பாராட்டும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை போர்க்குற்ற விசாரணைகளை கோரியுள்ளமையும் சோனியாவுக்கு தான் இலங்கைத் தமிழர்களுக்காகவே செயற்படுகிறேன் என்ற போலிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிக்கல்களை தோற்றிவித்துள்ளன.

அதுமட்டுமன்றி.. இப்போ காங்கிரஸின் ஆயுள் தமிழகத்தில் மோசமாக உள்ள நிலையில்.. சீமானை விழுத்த வேண்டிய ஒரு தேவையும் சோனியாவுக்கு எழுந்துள்ளது. அதற்கு உள்ள ஒரே மாற்றீடு.. ராஜீவ் கொலை. மீண்டும் அந்தக் கொலையை கிளறி.. அதன் உச்ச இலாபத்தின் இன்னொரு பக்கத்தை உருசிக்க காத்திருக்கிறார்.. புற்றுநோயாளி சோனியா.

நிச்சயம் பேரறிவாளனை முன்னிறுத்தினால் சீமான் சீறுவார் என்று அறிந்து கொண்ட காங்கிரஸ்.. இந்திய ஜனாதிபதியாக இருக்கும் சோனியாவின் பொம்மையைக் கொண்டு.. இவ்வளவு காலமும் கிடப்பில் கிடந்த கருணை மனுவை நிராகரிக்கச் செய்ததாக ஒரு செய்தியை பரப்பி விட்டுள்ளனர். உண்மையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டமை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. அது தேவைக்கு ஏற்ப வெளி வரும்.

ஆனால் அதற்கிடையில் சீமானை தூக்கி உள்ள போடு என்று பொலிஸ் கமிசனுருக்கு மனுப் போயுள்ளது. ஆக.. இந்த 3 பேரையும்.. ராஜீவ் கொலையையும் வைத்து இன்னும் என்னென்னவெல்லாத்தையும் சம்பாதிக்க முடியுமோ அவற்றை சம்பாதிக்க சோனியா திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவே தெரிகிறது. இது அவருக்கே ஓவரா தெரிந்தாலும்.. தமிழ் மக்களின் பலவீனத்தை நன்கு பயன்படுத்தி அவர் உச்ச பலன்களை அனுபவிக்கிக்கத் துடிக்கிறார். இதற்கு தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளும் மறைமுகமாக.. தமது அரசியல் இலாபத்திற்காக ஆதரவளித்தே வந்துள்ளன... வருகின்றன.

ஆனாலும் எனியும் இதனை தொடர விடாது.. தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. உலகத் தமிழினத்துக்கு (தமிழகம் உட்பட) உண்டு. ராஜீவ் இந்தியர்களுக்கு அப்பாவியாக தலைவராக இருக்கலாம். ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரகடனப்படுத்தப்படாத போர்க்குற்றவாளி. அதற்கான ஆயிரம் சான்றுகள் அவர்களிடம் உண்டு. ராஜீவ் மேற்கொண்ட படுகொலைகளுக்காக சோனியாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்டிருக்க வேண்டிய தமிழர்கள் இன்று தங்கள் 3 பேரின் உயிரைக் காக்க.. சோனியாவின் காலில் விழுந்து கெஞ்சும் துர்ப்பாக்கியத்தைப் பார்க்கிறோம்.

தமிழர்களின் சாணக்கியமற்ற விவேகமற்ற "மறப்போம் மன்னிப்புக்களின்" பின்னால் உள்ள ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. நாளை இந்த 3 அப்பாவிகளும் தூக்கில் தொங்குவார்களாக இருந்தால்.. அவர்களுக்காக குரல் கொடுத்து சீமான் சிறைக்குள் வாடுவாராக இருந்தால்.. அதற்கு தமிழர்களின் செயல் திறனற்ற.. தூர நோக்கற்ற.. செயற்பாடுகளே காரணம். ராஜீவ் கொலை அல்ல..!

இதனை தமிழர்கள் இன்றே உணர்ந்து தகுந்த வழியில் செயற்படவில்லை என்றால் இந்த ராஜீவ் கொலை என்றும் தமிழர்களைப் பழிவாங்கும் இந்திய நாகாஸ்திரமாக நேரு குடும்ப காங்கிரஸ் கட்சிக்கு அமையப் போவது உறுதி..!

நன்றி: யாழ் இணையம்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:51 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க