Wednesday, November 02, 2011

சோபா சுத்தியுடனான நேர்காணல்.

பேட்டியாளர்: வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்..

சோபா சுத்தி: கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..!

பேட்டியாளர்: மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்திப் போட்டன் போல இருக்குது. அது வெறும் வெளிக்காயம் தான்.. இருந்தாலும்.. தமிழச்சியை வேற நினைக்க வைச்சிட்டன்... உள் காயத்தையும் கிளறிவிட்டிட்டன் போல.. கோவிக்காதேங்கோ.

சோபா சுத்தி:: கோவமா.. அப்படின்னா என்ன...! (மவனே வெளில வருவா தானே.. சிறீலங்கா போவா தானே அப்ப.. கவனிச்சிக்கிறண்டா.. மனசுக்க திட்டுறார்.)

பேட்டியாளர்: நல்லா போய்க்கிட்டிருந்த உங்க வலைப்பூ இப்ப வாடி வதங்கி இருக்கே ஏன்..??!

சோபா சுத்தி: அது செழிச்சிருந்தது.. தமிழிச்சி காலத்தில.. யு நோ.. பிகர மடக்க.. எழுதித் தள்ளினது. இப்பதான் எல்லாம் புட்டுக்கிச்சே.

பேட்டியாளர்: போயும் போயும் தமிழிச்சி போன்ற கலியாணம் ஆன ஆன்ரிகளை மடக்க முயற்சிச்சு.. இருக்கீங்களே.. அதன் பின்னாடி ஏதேனும் விசேட நோக்கம் இருக்கா..??!

சோபா சுத்தி: முதலில்.. என் மாக்சியக் கண்களுக்கு தமிழிச்சி ஆன்ரியாக தெரியவில்லை. அப்பாவியாக தெரிந்தார். மடக்கக் கூடிய பிகர் என்பதை அவர் பெரியாரை வைத்து.. பெண்களின் நிர்வாணப் படங்களை போட்டு.. பெரியாரின் வீரதீர முழக்கங்களோடு.. பதிவிரதையாக பவனி வந்து.. பதிவுகளை வலைப்பூ உலகில் படரவிட்டு.. ஆண்களை எல்லாம் மிரட்டிய போதே கண்டிபிடிச்சிட்டன். மற்றும்படி வேற நோக்கம் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்லனுன்னா.. பட்சி.. தானா வந்து வலைல விழுந்துகிட்டுச்சு.

பேட்டியாளர்: இப்ப உங்க இருவரின் உறவு பற்றி ஓரிரு வரிகள்..

சோபா சுத்தி: மழை விட்டும்.. தூவானம் ஓயவில்லை.

பேட்டியாளர்: நீங்கள் ஈழத்தில் இருந்து ஓடி வந்தவர் என்ற அளவிலும்.. முன்னொரு காலத்தில் வலைப்பூவில்.. இணையவெளியில்.. வெட்டி விழுத்தினவர் என்ற அளவிலும்.. கார்ள் மார்க்ஸிற்கு பிறகு உலகமே வியந்து பார்க்கும் தாடி வைச்சிருக்கும் மாக்சியவாதி என்ற அளவிலும்.. நீங்கள் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீங்க..

சோபா சுத்தி: எனக்கு இவ்வளவு அடைமொழிகள் தந்ததற்கு நன்றி. இதற்கும் மேலவும் என் புகழ் பரவ வேண்டும் என்பது என் ஆசை. அது கிடக்க.. இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்லனும் என்றால்..

தம்பியில ஆரம்பிச்சு.. இப்ப தம்பில முடிஞ்சிருக்குது என்று சொல்லலாம்.

பேட்டியாளர்: உங்களுக்கு கலைஞரின் வாரிசு என்று அடைமொழியை வேணும் எண்டால் தாறன்.. அதை வாங்கி வைச்சுக் கொண்டு.. ஏன் பேஸ்புக்கில... போட்டுக் கொண்டு.. உங்களின் உந்த தம்பில ஆரம்பிச்சு.. தம்பில முடிஞ்சிருக்கு என்ற கிரந்தத்திற்கு விளக்கம் தர முடியுமா..??!

சோபா சுத்தி: தம்பி உமக்கு என்ன வயசோ தெரியல்ல. நாங்கள் எல்லாம் தோழர் சிவகுமாரனுக்கே குப்பி செய்த ஆக்கள். எங்கட வழிகாட்டலில தான் அவர் குப்பி கடிச்சவர். அப்படி எல்லாம் நாங்கள் போராடி வளர்த்த போராட்டம்.. மாக்சிய எழுச்சி பெற்று.. தோழர் பத்மநாபா.. தோழர்.. டக்கிளசு.. தோழர் சங்கரி.. தோழர் அமிர்தலிங்கம்.. தோழர் வரதராஜப் பெருமாள்.. தோழர் சித்தார்த்தன்.. என்பவர்களின் பேராதரவோடு வளர்ந்து கொண்டிருந்த வேளையில்.. ஏன் தமிழீழக் கனி.. அணில் கொத்திற பருவத்தில.. கனிஞ்சு தொங்கிக் கொண்டிருந்த சமயத்தில்.. தம்பி என்று ஒருத்தர் கிளம்பி வந்து.. எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் போட்டு முள்ளிவாய்க்களோட சமாதியாகிட்டார். அதை மகிந்த ராஜபக்சவின் தம்பி செய்து முடித்தார். சாதித்துக் காட்டினார். இதுதான் தம்பில ஆரம்பிச்சு.. தம்பில முடிஞ்ச கதையின்.. ரத்தினச் சுருக்கமும்.. அதன் பின்னால் உள்ள மாக்சியவாதமும்.

பேட்டியாளர்: உங்கள் மாக்சியவாதம்.. நல்லாத் தான் இருக்குது. அப்படியே தலித்தியம் பற்றி ஒரு நாலு வரி... முத்தாய் உதிர்த்தால் என்ன.

சோபா சுத்தி: என்னை கேள்வி கேட்க வாறவை எல்லாரும் உதுகளைக் கேட்கனும் என்று தான் நானே உதுகளைப் பற்றி பக்கம் பக்கமா.. எழுதி.. பேஸ் புக் சுவத்திலும்.. அப்பப்ப.. தீராத நதியிலும் மிதக்க விடுறனான். இப்ப அதைப் பின்பற்றி... நீங்களும் உந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மாக்சியமும்.. தலித்தியமும்.. மையவாதங்களும்.. மாமன் மச்சான் மச்சினி போன்றவை. வேறு பிரிக்க முடியாதவை. அந்த வகையில்.. தலித்தியத்தை தவிர்த்து தமிழீழம் என்பது பிரபாகரன் போன்றவர்களின் கனவே அன்றி அது நனவாக முடியாது. அது முள்ளிவாய்க்காலில் நிரூபணமாகியுள்ளது.

பேட்டியாளர்: நல்லது. கிறீஸ்பூதங்களும்.. தமிழர்களும் பற்றி என்ன நினைக்கிறீங்க..

சோபா சுத்தி: இதைப் பற்றி என் அருமை அக்கா லண்டன் ராஜேஸ்.. தீபம் தொலைக்காட்சியில் தெளிவாச் சொல்லிட்டா. அதற்குப் பிறகும்.. இதனை பெரிய விசயமாக்கிறது அவ்வளவு நல்லதில்ல. இருந்தாலும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புறன்.. நாங்கள் மாக்சியவாதிகள் இருக்கும் வரை கிறிஸ்பூதங்களை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைப்பது.. எமது செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க உதவும்.

பேட்டியாளர்: சும்மா வலைப்பூவில வெட்டியா எழுதிக்கிட்டு திரிஞ்ச உங்களுக்கு இன்று இணைய உலகில்.. உலகம் பூராவும்.. நிறைய பான்ஸ் இருக்கிறதா சொல்லினமே.. அதைப் பற்றி.

சோபா சுத்தி: நான் மாக்சியவாதி என்றாலும்.. கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ளுற ஒருத்தன். என்னுடைய கருத்துக்களைப் படிச்சிட்டு.. பெரியார் தாசன்களும்.. தமிழச்சிகளும்.. பிரியா தம்பிகளும்.. இன்னும் பலரும்.. என்று.. தங்களின் சொந்தப் பெருமையை அதிகரிக்க.. பெரிய நட்பு வட்டத்தையே ஏற்படுத்திக் கொண்டாங்க. அதிலும் தலித்தியம் பேசி தமிழ் சமூகம் வளர்க்கும்.. பெரிய தலைவர்கள் கூட எனக்கு நெருக்கமானாங்க. திராவிட உலகை ஆளுறவங்களும் இப்ப எனக்கு கூட்டாளிங்க. ஆனால் புலிச்சாயம் பூசிய சிலதுகள் மட்டும்.. இன்னும் என்னை சரியா அடையாளம் காண மாட்டேன்னு நிக்குதுங்க. அவர்கள்.. இன்னும் பிரபாகரன்.. உயிரொடு இருக்கிறார் என்ற மாயைக்குள்ள இருக்கிறதால.. இந்த கிரேட்.. மாக்சி லீடர் சோபா சுத்தியின்ர அருமையை இன்னும் உணரல்ல. மிக விரைவில அதை உணர வைக்க.. சிறீலங்கா அரசாங்கத்தோட பேசி.. ஒரு முடிவு செய்வன்.

பேட்டியாளர்: நீங்கள் புலிச் சாயம் என்றத்தான் ஞாபகம் வந்திச்சுது. முந்தி ஒரு காலத்தில.. வலை உலகில்.. உங்களை நல்லவனா தமிழீழ விரும்பியா.. இனங்காட்டிக் கொண்டிருந்த..நீங்கள்.. ஒரு காலக் கட்டத்தின் பின் தீவிர புலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் போல ஆகிட்டீங்களே ஏன்..

சோபா சுத்தி: இஞ்ச பாரும்.. உப்படிக் கேள்விகளைக் கேட்டீர்.. லண்டன் ராஜேஸ் அக்கா பிராவை கழற்றி எறிஞ்ச கணக்கா.. நான் உம்மைத் தூக்கி எறிஞ்சு போடுவன். சும்மா கோவத்தைக் கிளறாதையும். எது புலிக்காய்ச்சல்.. புலிகளின் பாசிசத்தைச் சொல்லுறது புலிக்காய்ச்சல் என்றால்.. அதை நீங்கள் அப்படியே அழைத்துக் கொள்ளுங்கள். எங்கள் மாக்சியக் கண்களுக்கு புலிகள் செய்ததெல்லாம்.. பாசிசமே. சரியே.

பேட்டியாளர்: சாறி.. உங்களின் சூடான பக்கத்தில கைவிச்சிட்டன் போல. மன்னிக்கனும். உங்களைக் கூலாக்க.. உங்களுக்கு எப்படி.. சோபா சுத்தின்னு ஒரு பெயரை நீங்களே பொறிக்கி எடுத்து வைச்சுக் கிட்டீங்க..

சோபா சுத்தி: அது ஒரு சுவாரசியமான விசயம். நாங்கள்.. மாக்சிய வழியில் வளர்ந்த.. பெரியாரின் புதல்வர்கள் இல்லையா. எங்களை வெளில யாரென்று.. பெயரில கூட இனங்காட்டிக்கக் கூடாத ஒரு சந்தர்ப்பத்தில.. இந்தப் பெயர் பெண் வாசகிகள் மத்தியில் சக தோழியாகவும்.. ஆண் வாசகர்களுக்கு ஜொள்ளு வழிய ஒரு வடிகாலாகவும் அமைந்திருந்தது. அதனால் தான்.. இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தான். அது தமிழச்சி போன்ற புரட்சிப் புதல்விகளைக் கூட கவர உதவி இருக்குது. அந்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட தமிழ் பெயர்.. சோபா சக்தி. ஆனால் அதையும் நீர்.. திரித்து.. சோபா சுத்தி என்று அழைக்கிறீர். கவனிச்சுக் கொள்ளும்.

பேட்டியாளர்: உங்களின் பெயர் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.. அண்மையில்..உங்களின் முன்னாள் நண்பிகளில் ஒருவரான பிரியாதம்பி பேஸ்புக்கில.. உங்களைப் பற்றி உங்களின் இன்னொரு முகம் பற்றி எழுதி இருக்காங்களே அது பற்றி..

சோபா சுத்தி: எனக்கு மட்டுமா இன்னொரு முகம். கண்ணதாசனுக்கு இல்லையா.. கலைஞருக்கு இல்லையா.. ஏன் பெரியாருக்கு இல்லையா. பிரியா தம்பி.. ஏதோ பொறாமையில் எழுதி இருக்கலாம். அதையெல்லாம் கண்டுக்கப்படாது. இன்னொரு முகம் என்பது மாக்ஸிய உலகில் சகஜம்.

பேட்டியாளர்: ஆ... கலைஞர்.. கண்ணதாசன் எண்டத்தான் நினைவு வந்திச்சு.. உங்களுக்கும்.. துக்ளக் சோவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்று சொல்லினமே.. அதைப் பற்றி..??!

சோபா சுத்தி: ஆம்.. உண்டு. அவர் தாடி.. மீசை.. வைக்காத.. ஐயங்கார் வர்க்கம் தந்த தங்கத்.. தலித்தியவாதி. நான் தாடி வைச்ச யாழ்ப்பாண தலித்தியவாதி. அவர் தான் சார்ந்த உயர் சாதிகளுக்காக வாதாடி.. புகழ் வளர்க்கிறார். நான் உயர் சாதியில் பிறந்தவன் என்று சொல்லிச் சொல்லி.. அந்தத் திமிரோடு.. யாழ்ப்பாண தலித்தியம் என்ற ஒன்றை வரைஞ்சு... அதற்கு வடிவம் கொடுத்து.. பேசி புகழ் வளர்க்கிறன். விளங்கிச்சே.. ஐ சே.

பேட்டியாளர்: இறுதியாக.. புலிச் சாயங்கள் விரும்புவது போல.. இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவது தமிழர்களுக்கு விடிவைத் தருமா..??!

சோபா சுத்தி: இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தும் அதேவேளை புலிகளையும் உட்படுத்த வேண்டும். முள்ளிவாய்க்கால் புலிகளின் தவறான கொள்கைகளால் வந்த ஒன்று. அதற்கு இலங்கை அரசையோ.. எம் போன்ற தோழர்களையோ குறை சொல்லக் கூடாது. பிரபாகரன் மாக்சிய சிந்தனையற்று.. ஆயுதங்கள் மீது காதல் கொண்டதால்.. தான் இத்தனையும் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசை இது தொடர்பில் ஏன் தமிழர்கள் தண்டிக்க வேண்டும். அது பகையை ஆழப்படுத்துமே அன்றி தமிழர்களுக்கு விமோசனம் தராது. இதையே தான் இன்று மாக்சியத்தின் உச்ச தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலும் சொல்லி இருப்பர். அதையே தான் நானும் சொல்கிறேன். ஒன்றைக் கவனியுங்கள்... புலிகளை அழிக்க.. நாங்கள் மட்டுமல்ல.. மாக்சியம் பிறந்த வீடான.. ரஷ்சியா.. மற்றும் சீனா.. கியூபா.. வியட்நாம்.. வடகொரியா.. எல்லாமே மகிந்தவிற்கு.. இறுதிப் போரில் தார்மீக உதவி அளித்து நின்றன. அதையே நாங்களும் செய்தோம்.

பேட்டியாளர்: கடும் பனிக்குளிருக்குள்ளும்.. வீட்டுக்குள் பதுங்கிக் கிடந்து கணணியில்.. மாக்சியம் பரப்பி வளர்ந்து வரும் தங்களின் வளர்ச்சி.. யாழ்ப்பாணப் பனை போல.. பெரு வளர்ச்சி காணவும்.. அது தமிழர்கள் மத்தியில் தலித்தியம்.. பைத்தியம்.. வைத்தியம்.. வளர்க்க வேண்டிக் கொண்டும்.. போறன் சொல்லி விடை பொறுறன். எனி உந்தப் பக்கம் வரவே மாட்டன். ஒரு பெரிய தாடி வைச்ச.. மாக்சியவாதியை கண்டு பேட்டி கண்ட அனுபத்தை இன்று பெற்றுக் கொண்டேன் நன்றி.

சோபா சுத்தி: நன்றி. என்னுடைய கருத்துக்கள் இன்று உலகத்தையே தமிழர்களின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்குது. இதைத்தான் நான் பிரபாகரனிடமும் வலியுறுத்தினேன். அவர் அதைக் கேட்கவில்லை. இறுதியில் என்ன நடந்து என்று தெரியும் தானே. அந்த வகையில்.. எனது பிறப்பும் இருப்பும்.. வலையில் என் வாழ்வும்.. தமிழர்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுத் தரும். அதற்காக நான் தமிழச்சி கூட சேர்ந்து என்றாலும் சமூகப் பணி புரியத் தயாராகவே இருக்கிறேன்.

நன்றி வணக்கம்.

பேட்டியாளர்: நன்றி. ( மனசுக்குள்ள.. எவண்டா இந்த தறுதலையை சந்திக்க என்னை அனுப்பினது.)

(யாவும் ஊரறிஞ்சது.)
நன்றி யாழ் இணையம்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:45 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க