Saturday, January 14, 2012

இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு.

டைடானிக் பாணியில்.. கடலில் பாறைத் திட்டில் மோதி.. கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது சுமார் 4000 பேரைக் காவிக் கொண்டு உல்லாசம் வந்த ஆடம்பர பல அடக்கு பிரயாணக்  கப்பலான கொஸ்டா கொன்கோடியா (Costa Concordia) என்ற குரூஸ் (cruise ship ) வகை இத்தாலிய கப்பல்.!

இத்தாலியில் உள்ள  Giglio என்ற இடத்துக்கு அருகில் நடந்துள்ள இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள கப்பலுள் நீர் புகுந்து கப்பல் தற்போது பக்கவாட்டுக்கு சரிந்து மூழ்கியுள்ளது. இந்தக் கப்பல் விபத்தின் வேளையில் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

Costa Concordia seen from land (14 January 2011)  
 
The cruise operators thanked the authorities and citizens of the island of Giglio for rescuing those on board the Costa Concordia. (bbc)

மேலும்.. பயணிகள் மற்றும் பணியாளர்களை அப்புறுப்படுத்தி கப்பலை உடனடியாக வெறுமையாக்க கேட்கப்பட்டுள்ளதால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதுடன்.. உயிர் காப்புப் படகுகளையும் போதிய அளவிற்கு சேவையில் ஈடுபடுத்த முடியாமல் மீட்புப் படைகள் திண்டாடும் நிலையில் மக்கள் உயிரைக் காக்க அடுத்தவர் என்றும் பாராமல் போட்டா போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இது அப்படியே டைடானிக் கப்பலுக்குள் நேர்ந்த நிலையை நினைவூட்டுகிறது.

மீட்கப்பட்ட மக்கள் பத்திரமாக உலங்குவானூர்திகள் மற்றும் கடற்கலங்கள் மூலம் தரைக்கு கொண்டு வரப்பட்டு விடுதிகளில், பள்ளிகளில்.. தேவாலயங்களில் தங்க வைக்கப்படுகின்றனராம்.

இந்த விபத்தில் இதுவரை 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு காணொளிகளுக்கு:

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:00 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க