Thursday, January 26, 2012

அப்துல் கலாமிற்கு எனி 3 நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காதீங்கப்பா.


இந்தியாவின் புகழ் பூத்த அணுகுண்டு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமிற்கு எனி 3 நாட்கள் சாப்பாடு (சோறு தண்ணி) கொடுத்திட்டு.. 3 நாட்கள் கொடுக்காமல் விட வேணும். 1 நாள்.. சமையல்காரர்களுக்கு.. சமையலுக்கு விடுதலை..! அப்போது தான் தெரியும்... கடல் வளத்தில் ஜீவனோபாயம் செய்யும் மக்களின் பசியும் வலியும்.

கலாம் அவர்கள் மன்னார் வளைகுடாவில் மீனவர் பிரச்சனைக்கு முன் வைத்துள்ள 3 நாள் ஈழப் பக்க மீனவர் மீன் பிடி.. 3 நாள் தமிழக பக்க மீனவர் மீன் பிடி.. 1 நாள் இரு பகுதிக்கும் மீன் பிடியில் இருந்து விடுதலை என்பது பற்றி இதனையே சொல்ல முடிகிறது.

தமிழக தமிழ் சொந்தங்களுக்கும்.. ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் இடையில் ஈழக்கடல் விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்தது வரை பெரிய பிரச்சனைகளே வந்ததில்லை. ஒரு சில சிங்கள - இந்திய அரசுகள் தூண்டி விட்ட சம்பவங்களைத் தவிர.


ஆனால் சிங்களப் படைகளின் கைகளால் இந்தியப் படைகளின்  மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவோடு.. ஈழத் தமிழர்கள் நிலங்கள் கடல்கள் ஆக்கிரமிக்கப்பட்டதில் இருந்து.. இரு பகுதி மீனவர்களிடையேயும் சிங்கள அரச படைகளால் அதன் கைக்கூலிகளால் பிரச்சனைகள் தூண்டிவிடப்படுகின்றன.


இரு பகுதி மீனவர்களுக்கும் மீன்பிடிதான் ஜீவனோபாயம். சம வளப் பயன்பாடு என்பதும் கூடிய வரையில் எல்லை தாண்டாத மீன் பிடி என்பதும்.. புரிந்துணர்வுடன் கூடிய வளப் பகிர்தல் என்பதும்.. மீன் பிடி முறைகளில்.. றோலர் முறை மீன் பிடித்தல்.. டைனமைட் வைத்து மீன்பிடித்தல் மற்றும் மீன் முகாமைத்துவத்தால் தடுக்கப்பட்டுள்ள வலைப் பயன்பாடுகள் போன்ற மீன் வளத்தின் sustainability ஐ பாதிக்கக் கூடிய முறைகளை கைவிட்டு.. மிகை மீன் பிடியை கட்டுப்படுத்தி.. சரியான மீன் வள முகாமைத்துவத்தோடு மீன் பிடிப்பதை உறுதி செய்வதே இதற்குப் பரிகாரம். இதுவே அப்பகுதியில் மீன் வளத்தின் இருப்பிற்கும் இருபகுதி மீனவர்களின் நீடித்த சுபீட்ச வாழ்விற்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்கும்.

அதற்கு முதல் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை ஈழத்தின் வடக்குக் கிழக்கு கடலுக்கு நகர்த்தும் சிங்கள பேரினவாத அரசின் செயலை கலாம் போன்றவர்கள் வெளிப்படையாக கண்டிப்பதோடு.. அதுவும் மீனவர்களிடையே பிரச்சனை தோன்ற ஒரு முக்கிய காரணி என்பதையும்.. ஏற்றுக் கொண்டு.. இந்திய - இலங்கை கடற்பகுதி.. இரு நாட்டுக் கடற்படைகளின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டு.. மீனவர்கள் அச்சமின்றி... சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதும் அவசியம்.

அதை விடுத்து அக்கினி பரிசோதனை போல..  அணு குண்டு பரிசோதனை போல அப்துல் கலாம்  சொல்லும் மீனவர்களுக்கான யோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அப்துல் கலாமின் அணு குண்டுகளால் அக்கினி ஏவுகணைகளால் மனித இனம் ஒரு பிடி சோறு சாப்பிட முடியாது. இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியாது. மாறாக மனிதப் பேரழிவுகளையே சந்திக்க முடியும்.
காந்தியின் அகிம்சையைப் பேசிக் கொண்டு அணு குண்டை தயாரிக்கும் கலாம் போன்ற முரண்பாட்டாளர்களுக்கு மனித உணர்வுகளின்.. மதிப்புப் புரிய வாய்ப்பில்லை.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முதல் கலாமை கூப்பிட்டு வைச்சு நாங்கள் அவருக்கு மனித உணர்வுகள் பற்றிய வகுப்பெடுக்க வேண்டும் போலுள்ளது. உணர்வுகள் செத்த.. படித்த மனிதர் இவர். அறிவியலில் உணர்வுகளை உணர்ந்தலும் கல்வியே. வெறும் அணு குண்டும்... அக்கினி ஏவுகணையும் அல்ல.. அறிவியல். அவை அழிவியல்..!!

இவருக்கு அறிவியலை விட அழிவியலில் தான் அதிக நாட்டம் உண்டு போல் தெரிகிறது. அதுதான் மகிந்த ராஜபக்சவின் தமிழர் அழிவியல் இவரைக் கவர்ந்துள்ளது. பேரழிவுக்கு மத்தியில் அசோகனுக்கு புத்தி பிறந்தது போல.. இவர் மகிந்தவிற்கு புத்தி புகட்ட வேண்டுமே தவிர.. ஈழத் தமிழர்களுக்கு இவரின் பல சொற்கள் உதவ வாய்ப்பில்லை..! ஒரு சில.. தோல்வியால் துவழும் மக்களுக்கு ஊக்கமூட்டும் கருத்துக்களைத் தவிர..!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:19 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க