Thursday, January 12, 2012

அமெரிக்கப் படைகளின் மிலேச்சத்தனம் மீண்டும் அம்பலம்.

Posted Imageஆப்கானிஸ்தானில் சண்டையில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் உடல் மீது அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து.. கொண்டாடி இருப்பது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலவே 2004 இல் ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் கைதிகளை கண்ணைக் கட்டி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது மற்றும் கொன்றமை ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காணொளி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க படைத்துறை.. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து தாம் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்க படைத்துறை ஒரு விசாரணையை மேற்கொண்டு குறித்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த வீரர்களை தண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மிகுதிச் சம்பவங்கள் மூடி மறைக்கப்படிருந்தன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.(18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் இக்காணொளியை பார்வையிடலாம். This is an age restricted video and for 18 +)

1981 ஆம் ஆண்டு.. தொடங்கி சிறீலங்காவிற்கு கிரமமாக பயங்கரவாத எதிர்ப்பு அல்லது ஒழிப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க.. அமெரிக்க கிரீன்பரேட் போரியல் வழிகாட்டலை வழங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றும் சிறீலங்கா சிங்களப் படைகளும் இதுபோன்ற மற்றும் இதை விட மோசமான மனித குலம் வெட்கித் தலைகுனியத் தக்க மிலேச்சத்தனமான செயல்களை போரின் போது செய்துள்ளமையையும்.. அமெரிக்கா இதுவரை அவ்வாறான செயல்களுக்காக சிறீலங்காவை பகிரங்கமாக கண்டிக்காமல்.. தண்டிக்க முன் வராமல்.. சாக்குப் போக்கு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.சிங்களச் சிறீலங்கா இதுவரை இவ்வாறான மிலேச்சத்தனமான செயல்களுக்காக ஒரு ஆக்கபூர்வமான நீதி விசாரணையை மேற்கொண்டு அதன் வீரர்களை தண்டித்ததும் இல்லை..! மன்னிப்புக் கோரியதும் இல்லை. ஆனால் அமெரிக்கா சர்வதேசத்தில் தன் நற்பெயரை காக்கும் பொருட்டாவது வரும் குற்றச்சாட்டுகளின் தன்மைக்கு ஏற்ப விசாரணைகளை மேற்கொண்டு.. முழுமையாக இல்லை என்றாலும் ஒரு சாட்டுப் போக்கிற்காகவாவது அதன் சில வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த விடயத்தில் அமெரிக்கா சிறீலங்கா விட நல்ல நிலையில் உள்ளது.


தொடர்புபட்ட செய்தி கீழே..

Taliban denounce 'US Marines body desecration' video

Posted Image

The video has not been authenticated and it is not clear who posted it or what its origins are.
Afghanistan's Taliban has condemned a video that appears to show US Marines urinating on dead Taliban fighters.

A spokesman told the BBC: "It is not a human action, it's a wild action that is too shameful for us to talk about."

http://www.bbc.co.uk...d-asia-16524419

Posted Imageஇந்தக் காணொளி வெளியிடப்பட்டதன் காரணமாக சர்வதேச அளவில் அமெரிக்க படைகளுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போக்கும் வகையில் அமெரிக்க அரசும்.. படைத்துறையும் துரிதமாக செயற்பட்டு.. மேற்படி சம்பவத்தோடு சம்பந்தப்பட்டுள்ள குறைந்தது இரண்டு வீரர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளதுடன்.. இச் சம்பவத்திற்கு அமெரிக்க வெளி விவகார மந்திரி கிலாரி கிளிங்டன் தனது நாட்டின் கண்டனத்தை பதிவு
செய்துள்ளதுடன் மேற்படி சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த உடனடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இதனை விட ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில்.. தமிழ் மக்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்ட சிங்கள பேரின இனவெறி அரசு தனது பொறுப்புணர்ந்து செயற்பட அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் தூண்டாது மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதும் சிறந்தது அல்ல..! இதனை உலகத் தமிழினம்.. இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் முன் நிறுத்தி நியாயகம் கேட்பது எமக்கும் நீதி கிட்ட ஒரு வலுவான அத்திவாரத்தை இடும்..!

தொடர்புபட்ட செய்தி:

US Marines identify 'urination' troops.

At least two of four US Marines shown in a video appearing to urinate on Taliban corpses have been identified, a Marine Corps official has told the BBC.

http://www.bbc.co.uk.../world-16538159 

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:58 PM

1 மறுமொழி:

Anonymous அப்துல் ஹகீம் செப்பியவை...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

ஆகவே இவர்களை அல்லாஹ் காப்பாற்றவில்லை என்பதால் இவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்பதை உணரலாம்.

இவர்கள் நம்பிக்கை மோசம் செய்தவர்கள் ஆகையால் அல்லாஹ் இவர்களை நேசிக்கவில்லை.

உலகத்தில் இதுவரை ஒரு முஸ்லீம் கூட அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் கொல்லப்படவில்லை. அப்படி யாரேனும் கொல்லப்பட்டாலோ, சிறைப்பட்டாலோ அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறியலாம். ஆகவே இவர்களுக்காக முஸ்லீம்கள் வருந்தமாட்டார்கள்.

Thu Jan 12, 10:28:00 PM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க