Sunday, January 15, 2012

நண்பனும்.. கலவியும்.. கொங்கையும்.. காஸும் நகைச்சுவையா..??!

மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும்.

அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்..  ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..!

ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது.

ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று தான் படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் அந்தக் கொடூரத்தை நகைச்சுவை போல.. படம் முழுக்க ஏன் படத்தின் இறுதிவரை சங்கர் தொடர்ந்து செய்திருப்பது கல்லூரிகளில் ராக்கிங்கில் செய்வதை விட கொடுமையானதாக உள்ளது. சிலர் அதனை நகைச்சுவை என்கின்றனர். அப்போ அதையே ராக்கிங்கில் செய்யும் போது அதையேன் கொடுமை என்கிறார்கள்..???!

இன்னொரு காட்சியில் சத்யன் ஆசிரியர் தினத்தை ஒட்டி தனது கல்லூரி முதல்வரான சத்தியராஜை வாழ்த்தி பேசுவார். அதற்கு என்று தயாரிக்கப்பட்ட பேச்சில்.. சத்யனை.. வைரஸ் கிருமி என்று அழைக்கப்படும் சத்யராஜை பழிவாங்க என்று விஜயும் நண்பர்களும்.. அந்தப் பேச்சை கணணியின் உதவியோடு மாற்றி எழுதி வைப்பார்கள். சத்யன் அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு நல்ல இலக்கணத் தமிழ் வராது. அந்த வகையில்.. இவர்கள் சத்யனின் பேச்சில் எழுதி வைத்திருந்த ஆபாச வார்த்தைகளை சத்யன் புரிந்து கொள்ளாமல் அதை விழா மேடையில் மனப்பாடம் செய்து பேசுவார்.

அதில்.. கல்விக்கு.. கலவி என்றும்.. கொள்கைக்கு.. கொங்கை என்றும்..கற்பிப்பிற்கு.. கற்பழிப்பு என்றும்.. மாற்றி எழுதி வைக்க.. பேச்சு படு ஆபாசமாக அமைந்து விடுகிறது. கேள்வி என்னவென்றால்.. கலவியும்.. கொங்கையும்.. ரவுசரை கழற்றிறதும்.. தானா நமக்கு.. நகைச்சுவை...??!

கலவியும்.. கொங்கையும் நகைச்சுவைக்குரிய அம்சங்களா..???!

சரி அதுபோக.. படத்தில்.. சத்யன் ஞாபக சக்தியை அதிகரிக்க என்று லேகியம் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக.. அந்த லேகியம் தந்த விளைவால்.. அவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். அவர் காஸ் விட்டால் அது அந்தச் சூழலையே நாறடிச்சு விடும். ஆனால் அதுவே.. படம் முழுக்க.. சத்யனை பற்றிய நகைச்சுவை வசனமாக அமைந்து விடுகிறது. அதில் அப்படி என்ன நகைச்சுவை உள்ளது. காஸ் விடுறது.. நகைச்சுவையா..???!

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று வரைவிலக்கணம் வகுக்க வேண்டாம்.. ஒரு தராதரம் அமைக்க வேண்டாமோ..??! பெண்களின் அந்தரங்க உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதும்.. பாலியல் சார்ந்த விடயங்களை கலந்து பேசுவதும்.. அந்தரங்க உடைகளை காண்பிப்பதும்.. காஸ் போன்ற இயற்கையான உடல் சார்ந்த கழிவகற்றல்களை.. வாயு வெளியேற்றங்களை கதைப்பதுமே.. நகைச்சுவை என்று ஏற்று நகைக்கும் நிலையிலா தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர்..??!

எனக்கென்றால்.. அவற்றில் நகைச்சுவையை விட.. தவறான வழிகாட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக.. உணர முடிந்தது. நகைச்சுவை என்பது எது என்ற உணர்தலை தவறாக இனங்காட்டுவதாகவே அது இருக்கிறது.

எதிர்காலத்திலாவது.. தமிழ் சினிமா இது குறித்து சிந்திக்குமா.. உருப்படியான சமூகப் பயன்மிக்க நகைச்சுவைகளை புதிய தலைமுறைக்கான சரியான வழிகாட்டலோடு முன் வைக்குமா..??!

இந்தப் படத்தில் நல்ல அம்சங்கள் என்று சொன்னால்.. All is well என்று மனதை சாந்தப்படுத்திக் கொள்வது.. மற்றும் கல்வி சார்ந்த தற்கொலைகள் பற்றிய அறிவூட்டல்.. தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவும் போட்டி கற்கைச் சூழலில் ஏற்படும்.. மன அழுத்தங்கள்.. திறமைக்கு முன்னுரிமை அளிக்காது.. குடும்ப தேவைகளுக்காக பிள்ளைகள் மீது அவர்கள் விரும்பாத படிப்பை திணிப்பது.. ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக பாரத்தை சுமத்தி.. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில்  மனப் பயம் மூலம் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுவது.. புத்தகத்தில் உள்ளதை வெறும் பாடமாக பாவனைக்கு உதவாது மனப்பாடம் செய்து படிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது.. ஒருவரின் மன ஓட்டத்தை கண்டறியும்.. Demo.. விளக்கம்.. போன்றவற்றை இனங்காட்டாமலும்  இருக்கக் கூடாது.

நகைச்சுவையிலும் இந்த தரத்தை வெளிப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை நகைச்சுவைக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும்.

நன்றி.

பார்த்ததில் உணர்ந்ததைச் சொல்வது... 

நண்பன் படம் பார்த்தவன்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:38 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

சரியான ஒரு விமர்சனம்.
படம் சங்கர் எடுத்த வாந்தி தான்.

Sun Jan 15, 08:14:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க