Monday, January 16, 2012

ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?!


Costa Concordia

அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்களும் சமமாகவே இவ்வாறான இடங்களில் நடத்தப்பட்டிருக்க.. அல்லது நடத்தப்பட்ட வேண்டும். முதியோருக்கும்.. குழந்தைகளுக்கும்.. சிறுவர்களுக்கும்.. மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுதல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

ஆனால்.. இயலக் கூடிய பெண்களுக்கு ஏன்.. முன்னுரிமை..???!  ஒருவேளை கப்பலில் இருந்து பெண்களும் குழந்தைகளும் அகற்றப்பட்ட பின் கப்பல் மூழ்கி இருப்பின்.. அத்தனை ஆண்களையும் பலியிடுதல் எந்த வகை மனிதாபிமானம் ஆகும்..???!

அதுமட்டுமன்றி இந்த நெருக்கடிச் சூழலில்.. பெண்கள்.. குழந்தைகளுக்கு முன்னுரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்தது யார்..??!

இப்படி 1852 இல் ஒரு போர்க் கப்பல் விபத்தில்.. 29 பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றப் போய் பல நூறு ஆண்களை பலியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் அந்தக் கப்பலில் இருந்த 500 ஆண்களில் பலர் உயிர் விட்டுள்ளனர். அதுவே பெண்கள்.. குழந்தைகளுக்கு முன்னுரிமை என்ற பதம் தோன்றக் காரணமாக சம்பவமாம். அப்போ.. ஆண்களை பலியிட்டுத்தான்.. பெண்களுக்கு முன்னுரிமை என்ற கற்பிதம் பிறந்ததா..??! என்ற கேள்வியும் எழுகிறது.

போர்களிலும் ஆண்களின் உயிர்கள் தொடர்ந்தும்.. இரண்டாம் தரமாக கருதப்பட்டு.. மனிதர்களின் இன்னொரு பிரிவினர் இயற்றியுள்ள நடைமுறைகளால்.. ஆண்கள் படைவீரர்களாக..  அழிக்கப்படுவதும் பொருந்தொகையில் இந்த 21ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்து வருகிறது..!

தொடர்புபட்ட செய்தி:

Costa Concordia: The rules of evacuating a ship


It's been suggested women and children were not given priority for lifeboats when the Costa Concordia capsized. But are there rules governing who leaves a sinking ship first?

மேலும் தகவல்களுக்கு:

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:27 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க