Friday, January 27, 2012

அணுகுண்டு விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரியப்பட்டுள்ளது.

மே 2009 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு இன அழிவுக்கான அடையாள மாதம் என்றால் மிகையாகாது. இந்திய இராணுவ.. மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் 25 நாடுகளின் இராணுவ.. மற்றும் புலனாய்வு உதவிகளுடன்  சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாதம் அது.

இந்தப் படுகொலைகளை இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கண்டித்ததில்லை. ஏன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து போன இந்திய அழிவியல் விஞ்ஞானி.. அணுகுண்டு விஞ்ஞானி.. அப்துல் கலாம் கூட ஒரு வார்த்தை போரால் உறவுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாகக் கூறவில்லை. போர் இழப்புக்கள் பற்றிய பேச்சையே அவர் பேசவில்லை. மாறாக.. தமிழ் - சிங்கள - ஆங்கில.. மும்மொழி இணைப்பு.. ஐக்கிய சிறீலங்கா... என்று சாத்தான் வேதம் மட்டும் ஓதிச் சென்றுள்ளார்.

ஆனால் தென்னமரிக்க நாடான ஆர்ஜென்ரீனாவில் ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை பற்றிய கட்டுரை ஒன்று சுமார் 22 மில்லியன் மக்களால் படிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் மன்னார் மறைமாவட்ட ஆண்டகை அருட் தந்தை இராஜப்பு ஜோசப் அவர்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் சுமார் 150, 000 தமிழ் மக்கள் 2008 - 2009 காலப்பகுதில் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன்.. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது மட்டும் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும் வெளி உலகிற்கு ஆதாரங்களோடு கொணரப்பட்டுள்ளது.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவையினரை அடுத்து இந்த ஆர்ஜென்ரீன ஸ்பானிய மொழி ஊடகமே அதிக அக்கறையுடன் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத இனவெறி அரசின் இனப்படுகொலையை சர்வதேச மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் உண்மையை திரித்து மக்களுக்கு பொய் முகம் காட்டி போலியாக ஒற்றுமை பற்றி பறைசாற்றிப் புகழ் வளர்க்கும் அப்துல் கலாம் போன்ற சிற்றறிவாளர்களை விட.. உண்மையை உள்ளபடி உலகிற்குச் சொன்ன இந்தப் பத்திரிகைக்கு மனமார்ந்த நன்றிகளை மானுடம் சார்ந்து தெரிவித்துக் கொள்கின்றோம்.

Sri Lanka genocide story draws 22m visitors, says Argentine paper.

 

[TamilNet, Friday, 27 January 2012, 03:33 GMT]

The Spanish Language Diario La Tarde, an evening journal published by independent journalists in West Argentina said the recent web publication of the story "Genocidio: (Primera entrega) - La masacre de los Tamils en Sri Lanka," [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka] drew 22 million visits in two days. The story appearing in Spanish covers history to the conflict, the slaughter at Mu'l'livaaykkaal, and asserts the post-conflict miliary aggression in Tamil areas as a form of structural genocide. 

இணைப்பு 1 

Genocidio: (Primera entrega) - La masacre de los Tamils en Sri Lanka," [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka]

இணைப்பு 2

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:04 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க