Wednesday, January 11, 2012

யாழ்ப்பாணக் கிணறுகளும் தமிழர்களின் புதைகுழிகளாக மாறும் நிலை.


தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு பகுதி.. இந்து சமுத்திரத்தை அண்டிய படிவுப் பாறைகளால் ஆன நிலப்பரப்பைக் கொண்டது. அங்கு கடல் நீரின் உவர்ப்புத் தன்மை கலந்த நீரே அதிகம். அது உயிர் வாழவும் பயிர் செய்கைக்கும் உகந்ததல்ல. அது மட்டுமன்றி யாழ்ப்பாணம்.. சம தரை கொண்ட பூமி ஆதலால்.. கார் காலம் தவிர ஓடக் கூடிய ஆறுகள் கிடையாது. பெரிய நீர்த்தேக்கங்களும் இல்லை.

இந்த நிலையில் யாழ்ப்பாண பண்டைத் தமிழன்.. பல அடி ஆளத்தில் நிலத்தை அகழ்ந்து.. நிலத்தடி நன்னீரை பெற்று உயிர் வாழ்ந்தும்.. விவசாயம் செய்தும் அந்தப் பூமியை செழிப்பித்தான்.

ஆனால் கடந்த காலணித்துவ.. அடிமைத்தனத்தை தொடர்ந்த சிங்கள ஆக்கிரமிப்பு என்பது.. தமிழர்களின் சொந்த நிலத்தில் அவர்களின் வாழ்வியலை புரட்டிப் போட்டுள்ளது. அதிலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசு கடந்த 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை மேற்கொண்டதில் இருந்து யாழ்ப்பாணக் கிணறுகள்.. போரின் போது சொந்த முயற்சியால்.. தப்பிப்பிழைத்து.. சரணடைந்து விடுவிக்கப்பட்ட வன்னி மக்களிற்கும்.. போராளிகளிற்கும் புதைகுழியாக மாறி இருப்பது உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு தொடர்ந்தும் தமிழினம் அங்கு அழிக்கப்படுவதை தெளிவாகவே அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ச்சியாக கண்காணிப்போர் அறிய முடிகிறது.

இருந்தாலும் சிங்கள அரசுக்கு அடிவருடி அரசியல் செய்யும் உள்ளூர் அரசியல்வாதிகளும் வெளியூர் அரசியல்வாதிகளும் இந்த அவலங்கள் குறித்துப் பேசுவதில்லை.

மூச்சுக்கு முந்நூறு தடவை இலங்கைத் தீவில்... போர் ஓய்ந்து.. சமாதானம் பிறந்துள்ளதாக அறிக்கை விடும் கிறிஸ்தவ மதத் தலைமைகள்.. மற்றும் இன ஐக்கியம்.. ஒருமைப்பாடுள்ள சிறீலங்காவிற்கு உழைக்கும் சர்வதேச சமூகம்.. என்பன இந்த மர்ம மரணங்கள் தொடர்பில்.. அவை சாதாரண மரணங்கள் என்பனவாக காண்பித்துக் கொண்டு.. சிறுகச் சிறுக தொடரும் இன அழிப்பை அங்கீகரித்து நிற்பதோடு.. சிறுகச் சிறுக இருந்த அரசியல் குழப்பங்களை குண்டுகள் வீசி அழிக்கும் பேரவலங்களாக மாற்றி மத்திய கிழக்கில் மனித அழிவுகளில் இருந்து அரசியல்.. பொருண்மிய.. பூகோள ஆக்கிரமிப்புக்கான ஆதாயம் தேடிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் எம் கண் முன்னே யாழ்ப்பாண கிணறுகளில் மிதக்கும் தமிழர்களின் பிணங்கள் வந்து போகின்றன. கடந்த 2009 மே மாதத்தின் பின்னர் யாழ்ப்பாணம்.. மற்றும் வன்னிக் கிணறுகள்.. ஆண்.. பெண் இருபாலாரினதும்.. வயது வேறுபாடில்லாத பிணங்களை சுமக்கும் புதைகுழிகளாக மாறி உள்ளதுடன்.. இந்த மரணங்களின் பின்னால் உள்ள மர்மங்கள் துலக்கப்படுவதில்லை. அவற்றிற்கு நீதியோ.. நீதி விசாரணையோ நடப்பதில்லை. யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நின்று கொண்டு சிங்கள அரசு.. அதன் சிங்கள பயங்கரவாத ஆயுதப்படைகளை வைத்துச் செய்யும் சிவில் நிர்வாகம் என்பது.. இந்தப் பிணங்களை அழுகிய நிலையில் மீட்டு.. மக்களுக்கு அவற்றை காட்டி ஒரு பய பீதியை ஏற்படுத்திக் கொண்டு.. அதன் கீழ் சமாதானமும் சகவாழ்வும் அங்கு நிகழ்வதாக வெளி உலகிற்கு..  பீற்றிக் கொண்டிருக்கிறது.

பெரும் மனித உரிமை அமைப்புக்களும் ஆயிரம் ஆயிரமாக மனித உயிர்கள் பலியானால் மட்டுமே தீர்வின்றிய அறிக்கை விடுவார்கள் என்ற நிலையில்.. இந்த யாழ்ப்பாணக் கிணறுகளை சுற்றி நிகழும் மர்ம மரணங்கள் தொடர்பில்.. நீதியும் இல்லை.. மனித உரிமைகளும் கிடையாது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இப்படி கிணற்றில் பிணமாக மிதந்த தமிழர்களின் எண்ணிக்கை சில நூறை எட்டும். 2012 டானா.. இவ்வாண்டும் அது தொடகிறது.

இது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பல ஆயிரம் தமிழர்களின் மரணத்தின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.

அந்த வகையில்.. இது குறித்த விளிப்புணர்வை உலகத் தமிழினம் பெற வேண்டும்.

இந்த அநாவசிய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டின்.. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும்.. சிங்களப் படைகளும்.. அதனோடு கூட்டிணைந்து இயங்கும் ஈபிடிபி போன்ற மனிதப் படுகொலைகளுக்கு உதவும் தமிழ் ஆயுதக் கும்பல்களும்... அங்கிருந்து வெளியேற்றப்படுவதோடு.. சர்வதேச கண்காணிப்போடு.. ஐநா மேற்பார்வையில் ஒரு பாதுகாப்பு தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள.. சரணடைந்துள்ள.. மக்களுக்கும் போராளிகளுக்கும் சரியான பொருண்மிய..சமூக..  உள நல வழிகாட்டல்களும் வசதிகளும் தொடர்ச்சியாக செய்து கொடுக்கப்படுவதோடு.. அவர்களின் உயிர் வாழ்விற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

இதனை உலகத் தமிழினம் சர்வதேசத்தை நோக்கி வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியம். இன்றேல்.. இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழர்கள்.. தமிழர்கள் என்ற அடையாளம் இழக்கச் செய்யப்பட்டு.. ஒன்றில் அழிக்கப்படுவார்கள் அல்லது சிங்கள இனத்தவராக இன்னும் சில தசாப்தங்களில் மாற்றம் செய்யப்படுவார்கள்.

இது அண்டையில் உள்ள தமிழகத்திற்கும்.. அதன் இருப்பிற்கும்.. பாதுகாப்பிற்கும் நல்லது அல்ல..! இதனை ஹிந்திய ஆளும் வர்க்கம் தமிழின எதிர்ப்புணர்வோடு.. அங்கீகரித்து நின்றாலும்.. ஆச்சரியப்படுவதற்கில்லை..!

எனவே இது தொடர்பில் உலகத் தமிழினம்.. சர்வதேசத்தையும்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களையும் தட்டிக் கேட்டு.. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமையை அவர்களின் பூர்வீக மண்ணில் நிம்மதியாக பாதுகாப்பொடு வாழ பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும்.

இது யாழ்ப்பாண கிணறுகளைச் சுற்றி தொடரும் தமிழ் இன அழிப்பு அவலங்கள் தொடர்பில் ஒரு தமிழனின் குரல்.

News Reference:

Teen-age girl recovered dead from well in Jaffna. 

 

The body of a 17-year-old girl student of Jaffna Hindu Ladies’ College was recovered from a well near her home in Chemma’ni in Nalloor Monday. She had gone missing Saturday night. Meanwhile, the woman whose body was found in I’lavaalai Sunday had been sexually assaulted before being killed, according I’lavaalai police. Mysterious killings and persons going missing have increased in Jaffna peninsula in recent times causing its residents to be gripped in fear and anxiety, sources in Jaffna said.

The teen-age student dead was identified as R. Jamesala, a resident of Naayanmaarkaddu road in Chemma’ni.

The woman killed in I’lavaalai was identified as Kunaratnam Inthumathi, 44, a resident of I’lavaalai.

Unidentified persons broke into her house where she had been alone and sexually assaulted before knifing her to death with sharp bladed weapons, the police said.

The killers had robbed cash and valuable things from her house.

Il’avaalai police handed over the body to Jaffna Teaching Hospital mortuary where Jamesala’s body was also handed over.

செய்தி ஆதாரத்திற்கு:

படம்: தமிழ்நெட்

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:02 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க