Monday, February 20, 2012

ஏன் குமரிகளை.. Babe என்று அழைக்கிறார்கள்..?!

Babe என்றால் குழந்தை என்று தானே அர்த்தம். ஆனால் பல இடங்களிலும்.. குமரிகளை எல்லாம் ஆண்கள்.. அது கலியாணம் ஆகாத இளந்தாரிகள் ஆனாலும் சரி.. கலியாணம் ஆகி ஜொள்ளு விடும் ஆண்கள் ஆனாலும் சரி.. Hi.. Babe என்றீனமே... எதுக்கு..??! குமரிகளும்.. பதிலுக்கு.. பல்லை இளிச்சுக் கொண்டு அப்படி அழைப்பவர்களிடம் சரணாகதி அடைந்து விடுகிறார்கள்..! :lol:

குறிப்பாக.. வெள்ளை இன நண்பன் ஒருவன்.. அடிக்கடி அவன் கேர்ள் பிரண்டை.. பேபி பேபி என்பான். ஆனால் ஏன் அப்படி கூப்பிடுறா என்று கேட்டால்.. அது ஒரு லூசு... அதை அப்படி கூப்பிட்டாத்தான்... கூலா.. அடங்கி இருக்கும் என்று காரணத்தை வேறு சொல்லுறான்..!

எனக்கென்னா.. ஒன்னுமா விளங்கேல்ல..!

ஏன்.. குமரிகளை.. பேப்.. Babe.. Baby என்று அழைக்கினம்.. அவை என்ன குழந்தைகளா.. ராட்சதக் கூட்டமா எல்லோ இருக்குதுங்க..! குழந்தைகள் அல்லாத குமரிகளையும்.. பெண்களையும் பேபி என்று அழைப்பது அவர்களுக்கு பிடிக்குமோ..???! எனக்கென்றால்.. அப்படி கூப்பிடுறதை காதால் கேட்கவே அருவருப்பா இருக்குது..! இதை எல்லாமா பெண்கள் ரசிப்பார்கள்..??! :lol:

இது தொடர்பான பதில்களாக நம் தமிழ் சொந்தங்கள் தரும் பதில்கள் இங்கு....

நன்றி யாழ். இணையம்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:22 PM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

Nice one babe..-:)

Mon Feb 20, 06:49:00 PM GMT  
Blogger Robin செப்பியவை...

வயதான பெண்கள்கூட தங்கள் பேரப்பிள்ளைகள் பாட்டி என்று அழைப்பதை விரும்புவதில்லை. அம்மம்மா என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

Tue Feb 21, 03:34:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

oru baby kudukathan

Tue Feb 21, 02:36:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க