Thursday, February 02, 2012

ஆட்டம் காணும் சோனி..!

SONY என்ற ஜப்பானிய நிறுவனம் இலத்திரனியல் உலகின் நம்பிக்கையின் நாயகனாக விளங்கிய காலம் போய்.. இன்று பெரிய நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோனி 2.9 பில்லியன் டாலர்கள் வருடாந்த வருமான இழப்பை சந்தித்து நிற்கிறது.

ஆப்பிளின் அபார புதுமைகள் நிறைந்த வளர்ச்சி மற்றும் தொலைக்காட்சி உலகில் சாம்சங்கின் வளர்ச்சி சோனியை குலைநடுங்கச் செய்துள்ளது.

இதற்கிடையே சோனியின் புதிய CEO வாக உருவாகி இருக்கும் 51 வயதான Kazuo Hirai சோனியை இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீட்க எந்த விதமான மனத்தாக்கமுள்ள முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளதோடு.. சந்தையில் போட்டியை சந்திக்க முடியாத பொருட்களை மீளப் பெறவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

சோனியின் சிறுவர் வீடியோ கேம்.. PS3.. PSP.. ஆப்பிளின் இலகுமயப்படுத்தப்பட்ட மற்றும் மைக்குரோசாவ்டின்.. Xbox இன் முன் தோல்வி கண்டுள்ளது. அதேபோல்.. இன்னொரு ஜப்பானிய உற்பத்தியான Nintendo வும் மோசமான நட்டத்தைச் சந்தித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சோனி எரிக்சனுடன் மொபைல் கான்ட் செட் கூட்டு வைத்திருந்துள்ளது. இப்போ அதனையும் பலப்படுத்தி உள்ளது. சாம்சங்குடன் தொலைக்காட்சிகளுக்கான எல் சி டி  திரைகளை மலிவு விலையில் பெறவும் சோனி கூட்டு வைத்துள்ளது. அது சோனி உற்பத்திச் செலவை குறைத்து போட்டியை சமாளிக்க உதவலாம்.

செய்தி ஆதாரம்:

மேலும் செய்திகள் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:43 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க