Wednesday, February 08, 2012

மாறி வரும் பிரிட்டன்; துகில் உரிதல் கிளப்புகள் மூடும் நிலை..!

Posted Image

பிரிட்டனின் ஒரு வீதிக் கலாசாரமாக இருந்து வந்த குறிப்பாக பிரிட்டன் ஆண்களை நோக்கி குறிவைத்து வளர்ந்து வந்த அழகுப் பெண்களின் துகில் உரிதல் கிளப்புகள்.. தற்போது ஏறக் குறைய மூடும் நிலைகள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. இதற்கு காரணம்.. ஆண்களின் எண்ணத்தில் இருந்தான மாற்றம் என்பதைக் காட்டிலும்.. கடும் சட்டங்களும்.. இவ்வாறான Strip clubs போவது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என்ற உணர்தலும் எங்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

சரி... யாரை நோக்கி இந்த கிளப்புகள் திறக்கப்பட்டன என்றால்.. ஆண்களுக்கு உடலை காட்டி பணம் சம்பாதிக்க விளையும் பெண்களையும்.. அவர்களின் உடலைப் பார்த்து மன திருப்தி அடையும் ஆண்களையும் நோக்கியே..! அந்த வகையில்.. இந்த கிளப்புகளின் சமூகத் தாக்கம் என்பது குறித்து கல்வியாளர்கள் ஆராயமலும் இல்லை. அவர்களிடையேயும் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்தக் கிளப்புகளில் பணிபுரியும் பெண்களில் 25 சதவீதமானோர் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள்.

பிரிட்டனின் இந்த புதிய மாற்றம் குறித்து பெண் உரிமையாளர்கள்.. கருத்து வெளியிடுகையில்.. பெண்களைப் போகப் பொருளாக எண்ண வைக்கும் இப்படியான விடயங்கள் தவிர்க்கப்படுதலை வரவேற்கின்றனர். அதுமட்டுமன்றி.. பெண்களை இப்படியான கிளப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தள்ளி விடுகின்றனவாம். அதுமட்டுமன்றி இவ்வாறான கிளப்புகளுக்கு வரும் சில ஆண்கள் மட்டுமே அவர்கள் மீது அன்பு காட்டுவதாகவும் பிறர் அவர்கள் மீது தங்கள் வெறுப்புணர்வை உமிழ்ந்து செல்வதோடு வார்த்தைகளாலும்... பெளதீக ரீதிலும் காயப்படுத்துகின்றனராம்.

ஆனால் பாலியல் வியாபாரம் செய்பவர்களும்.. பாலியல் எழுத்தாளர்களும் வேறு வகையில் கருத்துரைக்கின்றனர். அவர்கள் இந்தக் கிளப்புகள் மூடப்படுவது தொடர்பில் வரவேற்க மறுக்கின்றனர்... மேலும் அப்படி பெரிசா எதுவும் மாறிவிடவில்லை என்கின்றனர்.

Posted Image

வெறுமனவே வீட்டில் இருந்து ஆண்கள்.. பெண்கள் porn இணையத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருப்பதிலும்.. இப்படி நேரே சென்று பெண்களோடு கூடிப் பழகுதல் சமூகத்துக்கு நன்மையே என்கிறார் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழக பேராசிரியர்..!

இந்த துகில் உரிதல் கிளப்புகள் தொடர்பில் ஆய்வுகளைச் செய்ய சில பல்கலைக்கழகங்களும் தாமே முன் வந்து செயற்படுவதோடு இவற்றின் விளைவுகள் குறித்து மூத்த கல்வியாளர்கள் ஆராய்ந்து கருத்தும் கூறி வருகின்றனர்.

எதுஎப்படியோ.. மாறி வரும் பிரிட்டனின் சட்டதிட்டங்களும்.. மக்களின் மனநிலையும் பிரிட்டனின் தெருக்களில் இருக்கும்.. இந்த துகில் உரிதல் கிளப்புகளுக்கு மூடு விழா செய்யப் போவது உறுதி என்றாகிவிட்டது..!

இந்த நிலையில்.. எமது தமிழர் தேசத்திலோ.. போரின் பின் விபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் சட்ட அங்கீகாரம் இல்லாத நிலையிலும் அரசுகளின் அரச படைகளின் ஆதரவோடு தேவைகளோடு.. பெருக்கெடுத்துச் செல்வதோடு.. அங்கு பாதிக்கப்படும் பெண்கள்.. மற்றும் சமூகம் குறித்து எந்தக் கல்வியாளர்களும் உருப்படியான ஆய்வுகளைச் செய்து சமூக.. சட்ட சீர்திருத்தம் குறித்து பரிந்துரைப்பதாகவும் இல்லை. ஏன் கல்வியாளர்களே பெண்களை சீரழிக்கும் நிலையில் இருக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிரதான கட்டுரை இங்கு:

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:20 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

PeNNiya vaadhigaL engE..... Aaha peN sudhandhiram pari poivittadhu.....endru koochal podalaiya.....

Wed Feb 08, 09:40:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க