Thursday, February 09, 2012

இந்தியா அழிவதால் பூமிக்கு ஆபத்தில்லை - சுப்பி.மணிய சுவாமி


பாரத மாதா வின்
கவட்டுக்குள்
ஒரு சாக்கடை
அங்கோர் அழுக்கு தின்னிக்
கெழுத்தி..
அதன் பெயர்
ஜனநாயகம்..!
கெழுத்தியின்
உடலுலோடு ஓர் ஒட்டுண்ணி
அதன் பெயர்
சுப்பிரமணியம் சுவாமி.


அந்த ஆசாமிக்கு
ஒரு கட்சி
அது தேர்தலில்
நின்றதில்லை
ஆனால்
வெற்றி முழக்கத்திற்கு
குறைவில்லை..!
மக்களோ
அந்த ஐயனின்
குசும்பில்
தினமும் சொல்லாமல்
செல்கின்றார்
கீழ்ப்பாக்கம்..!


சுவாமிக்கு
அடிக்கடி
நெஞ்சில் ஓர் வலி
உள்ளூரில்
ஓய்வின்றிய புறணிக்கு
அப்படி வருவது விசேடம் அல்ல..!
இருந்தாலும்
ஓய்வுக்கு ஊளையிட..
அப்பப்ப எட்டிப் பார்ப்பது
அண்டை அயலில் ஈழத்தை..!
கூவிற கூச்சலுக்கு
றோ போடும்
பிச்சையில்
மருத்துவம்..!
புலி என்றால்
ஐயாவுக்கு கிலி..!
தமிழ்ஈழம் என்றால்
சுவாமிக்கு
சாத்தான்..!


48 மணி நேரத்தில்
40,000 தமிழ் உயிர்கள்
பாரத மாதாவிற்கும்
கெளதம புத்தருக்கும்
ஆசி வேண்டி..
முள்ளிவாய்க்காலில்
களப்பலி..!
இதுதான் சுவாமியின்
சாமி பரிகாரம்..!


இப்ப
சுவாமி கனவினில்
சாமி..
உருக் கொண்டு சொல்லுது
தமிழரின் பலி
தோல்வி அல்ல
வெற்றி..!!!
ஆம்..
றோவின் வெற்றி..!


இந்த நிலையில்....
எனக்கோர்
கனவு...
இந்தியா அழிகிறது
கூட
சுவாமி உடலும் பிளக்கிறது...!
சாமி ஆவியாகி
உயரப் பறக்கிறது
சாத்தான்
அதை விரட்டுகிறது..!
பூமி மிளிர்கிறது...!
சொர்க்கமே
என் காலடியில்..!


சாத்தான் அல்ல
தரித்திரம்
சுவாமி தான்..!
சரித்திரம்
மாறுகிறது..!


மறுபிறவியில்..
சுவாமி வந்து
ரீவி பெட்டியில்
சொல்கிறது..
தமிழ் ஈழமே
என் கனவு..!


கனவும்
கலைகிறது..!
தமிழ் ஈழமும்
நிஜத்தில்
மலர்கிறது..!
தமிழரின்
வெற்றிக் களிப்பில்
பூமி திழைக்கிறது...!

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:06 AM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

கனவும்
கலைகிறது..!
தமிழ் ஈழமும்
நிஜத்தில்
மலர்கிறது..!
தமிழரின்
வெற்றிக் களிப்பில்
பூமி திழைக்கிறது...HOW MANY DAYS . PONGAYYA NENGALUM UNGA ELAMUM

Thu Feb 09, 08:53:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

when India undergoes USSR style break up, Historical Tamils' nation TamilEealm will be easily liberated along with other states in India..! :)

Thu Feb 09, 11:16:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

இந்தப் படைப்பு சுப்பிரமணிய சுவாமியின் ஈழத்தமிழர் மீதான போலிக் கரிசணை தொடர்பாக எழுதப்பட்டுள்ளதே அன்றி அவரின் தனிப்பட்ட வாழ்வை மையமாகக் கொண்டல்ல. சுப்பிரமணிய சுவாமி உள்ளூர் அரசியலில் எதையாவது சொல்லிட்டு கிடக்கட்டும்.. அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தால் தமிழர்கள் அடைக்கி ஆளப்படுவதை ரசித்துக் கொண்டு..இந்த சுப்பிரமணிய சுவாமிகள் விடும் போலி அறிக்கைகள் அதுவும் ஈழத்தமிழர் எம்மை நோக்கி இவர்கள் காட்டும் போலிக் கரிசணைகளை நிராகரிக்கும் வகையில் தான் இந்தப் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சுவாமியை நாங்கள் எவருமே எங்களுக்கு ஆதரவு தா... எங்களைப் பற்றி சொல்லு என்று கேட்பதில்லை. அவரா.. தனது சரிந்து வரும் கள செல்வாக்கை நிலைநிறுத்த உடனே ஈழத்தமிழர் விவகாரங்களை கையில் எடுத்துவிடுகிறார்.

இந்திய களத்தில் சுவாமி அண்மைய நீதிமன்றத் தீர்ப்பால் கடுப்பாகி உள்ள நிலையில்.. இப்போ ஈழத்தமிழர்கள் பற்றி கதையளக்கிறார். எமது மக்கள் 64 ஆண்டுகளாக திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை மறைத்து இந்த ஆசாமிகள்.. காந்தியாலையே கட்டிக்காக்க முடியாமல் போன.. ஹிந்திய தேசிய ஒருமைப்பாடு என்ற தங்கள் பலவீன சித்தாந்தத்தைக் காத்துக் கொள்ள எம்மைப் பலியிட்டு வருவதோடு.. அப்பப்ப எம்மில் அக்கறை உள்ளது போல நடித்து எம்மை கொலைக்கள பலியாடுகளாக்கி வருகின்றனர். அந்த வகையில் இவரின் ஈழத்தமிழர் மீதான கரிசணை ஈழத்தமிழர்களாலேயே வரவேற்கப்படாத நிலையில்.. இவர் பொத்திக்கிட்டு இருப்பது தான் சிறந்தது என்பதை சொல்வதே இந்தப் படைப்பின் நோக்கம்.

சுவாமி.. எமக்காக பரிந்தும் பேச வேண்டாம்.. கவலைப்படவும் வேண்டாம்.. உள்ளூரில் இருக்கும் குப்பைகளை அள்ளி தன் தலையில் கொட்டிக் கொண்டு கிடந்தாலே போதும்.. என்பதைச் சொல்வதே இந்த ஆக்கம். இவர் சொல்லி எமக்கு ஈழமோ.. விடிவே வரப்போறதில்லை... ஹிந்திய தேசியவாதிகளின் காதில் இவரின் குரலுக்கு மதிப்பும் இல்லை. இவர் அங்கு ஒரு அரசியல் கோமாளியாகவே சித்தரிக்கப்படுகிறார். ஆனால் இவர் றோ போன்ற மறைமுக கள நகர்வு செய்பவர்களுக்கே அதிகம் பயன்படுகிறார். அதனால் இவரின் ஈழத்தமிழர் மீதான கூற்றுக்கள் எமக்கு மேலதிக தொல்லைகளாக மட்டுமே இருக்க முடியும். எள்ளளவும் நன்மை பயக்காது..!

அந்த வகையில் அண்மையில் இவர் முள்ளிவாய்க்காலில் அழிந்தது அத்தனையும் புலி அதனால் தமிழர்களுக்கு தோல்வி இல்லை என்ற கணக்கில் விட்ட அறிக்கை.. மிகவும் மோசமான.. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத ஹிந்திய தேசிய வெறியன் ஒருவனின் கருத்தாகவே அமைகிறது.

உலகமே ஒரு மனிதப் பேரழிவு நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலையில்.. சுவாமி போன்ற... மனித சிந்தனையற்ற ஜந்துகள் எம்மை நோக்கி அறிக்கை விட நாம் என்ன இவர்களை எமது அரசியல்... அல்லது இனப் பிரதிநிதிகளாக வரைந்து அங்கீகாரம் அளித்திருக்கிறோமா..??! இல்லையே. அப்படி இருக்கையில் இவருக்கேன் எமது விடயங்கள் தொடர்பில் அக்கறை. பொத்திக்கிட்டு இருந்து ஹிந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தியாவை காப்பாற்ற முயற்சிக்கட்டும்..!

ஹிந்தியாவைச் சுற்றி பின்னப்படும் சர்வதேச பிராந்திய சதி வலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் படாத இந்த சுவாமி.. புலிகள்.. ஈழத்தமிழர்.. தமிழீழம் பற்றி கவலைப்பட என்ன அருகதையைக் கொண்டிருக்கிறார். இவரின் கரிசணையையோ.. கருத்தையோ ஈழத்தமிழர்கள் கோரவும் இல்லை.. கேட்கவும் இல்லை. அந்த வகையில்.. இவர் எனி மேல் ஈழத்தமிழர் விவகாரங்களில் தலையீடு செய்யாமல் ஒதுங்கி இருக்கக் கற்றுக் கொள்ளட்டும்..! அதுவே இவருக்கு சிறந்ததாக இருக்கும்..!

(nedukks - yarl.com)

Fri Feb 10, 09:00:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க