Friday, February 24, 2012

ஏன் ஆண்கள் மனைவிமாருக்கு அஞ்சுகிறார்கள்..?!

எனக்கு பெண்கள் என் மீது ஆதிக்கம் செய்வது பிடிப்பதில்லை. பெண்கள் மட்டுமல்ல.. எவராக இருந்தாலும்.. என் மீது எனது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பது அதைச் செய்.. இதைச் செய் என்பது எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. புத்திமதி சொல்லக் கேட்பது வேறு.. ஒன்றை தயவோடு.. அன்போடு செய்யச் சொல்வது வேறு...! ஆனால் ஒன்றை அதிகார தொனியில் அல்லது மேலாதிக்க நோக்கில்.. அல்லது கட்டாயக் கடமை என்ற போர்வையில்.. செய் என்று பணிப்பது வேறு.. எனக்கு இந்த கடைசியில் சொன்ன செயல்கள் செய்பவர்களைப் பொதுவாகப் பிடிப்பதில்லை..! அப்படிச் சொல்லப்படும் விடயங்களை தெரிந்து கொண்டே செய்யாமல் புறக்கணித்தும் விடுவேன். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை..!

இதில் உங்கள் நிலைப்பாடு என்ன..???! பெண்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடப்பதுவா.. அவர்களுக்கு ஆண்கள் மீது மரியாதையை உண்டு பண்ணும்..??! இந்த வெட்டி மரியாதை நமக்கு அவசியம் தானா..??!

ஆண் மேலாதிக்கம் என்பது போல.. பெண் மேலாதிக்க நிலையும் இருக்கிறது. இதுவா ஆண்கள் (பொதுவாக) வீட்டில் பெண்களுக்கு அஞ்சக் காரணம்.. அல்லது வேறேதாவது உண்டா..???!

அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு அண்ணா.. பாவம்.. விடுமுறையைக் கழிக்க மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தார். கொண்டு வரும் லக்கேஜ் காவுவதில் இருந்து மனைவியின் சேலைகள் அடுக்குவது வரை.. ஏன் அவை எந்த லக்கேஜில் இருக்குது என்று சொல்லி எடுத்துக் கொடுப்பது வரை.. அவர் செய்து கொண்டிருந்தார். அதுக்கும் மேலதிகமாக.. முன்னர் எல்லாம் (திருமணத்திற்கு முன் ) சுயமா சிந்திச்சவர்.. முடிவெடுத்தவர்.. இப்ப ஒரு முடிவெடுக்க.. மனைவியை கூப்பிட்டு வைச்சுக் கதைக்கிறார். எதற்கு எடுத்தற்கும்.. எங்களுக்கு குடும்பம் இருக்கு.. நான் குடும்பகாரன் என்று விடயங்களை.. தன் குடும்பம் சாராத பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முனைகிறார். எனக்கென்றால் தலைக்கில்லால போச்சுது. இடத்தை விட்டுக் காலி செய்துவிட்டேன்..! ஏன் இப்படி ஆகிறார்கள்.. எங்கள் தமிழ் ஆண்கள்..???!

இவர்களுக்கு மட்டும் தானா இந்தப் பூமிப் பந்தில் குடும்பம் இருக்குது..??! ஏன் குடும்பகாரன் என்றால் பிற விடயங்களை தட்டிக்கழிக்க வேணும் என்றது இவர்களின் மனைவியரின் கட்டாயச் சட்டமா..???! ஒன்னுமா புரியல்ல..???! உங்களுக்காவது இவற்றின் பின்னால் உள்ள காரணங்கள் ஏதாவது புரியுது..??! :lol: :icon_idea: 

இத்தலைப்பில் கருத்துக்கள் இங்கும் பகிரப்படுகின்றன.

Psychology of Men & Masculinity 2001, Vol. 2, No. 2, p. 75-85

Psychological Effects of Partner Abuse Against Men: A Neglected Research Area.

Denise A. Hines and Kathleen Malley-Morrison
Boston University



Pakistani Lawmaker Jam Tamachi Unar: Women 'Mentally Torture' Men

External link 2

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:39 PM

1 மறுமொழி:

Blogger Robin செப்பியவை...

ஆண்கள் மனைவிமாருக்கு பயப்படுவதற்குக் காரணம், அவர்கள் கொடுக்கும் mental toruture தான்!

Fri Feb 24, 01:23:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க