Monday, February 27, 2012

குழந்தைகளின் செயல்களும் எங்களின் துலங்களும்..!


Posted Image
குழந்தைகளுக்கு யாரும் பயிற்றுவிச்சதா தெரியல்ல. நீங்கள் கைகளை நீட்டினாலே போதும்.. ஓடி வந்து உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். அதேபோல்.. அவர்களுக்கும் ஏதாவது தேவைன்னா.. கையை நீட்டி.. உங்களின் மூளையை துண்டித் துலங்கச் செய்து விடுகின்றனர். உங்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றனர்.


Posted Image



உங்களுக்கு குழந்தைகளின் எச்செயல்கள் அவர்கள் மீது.. எல்லா வேலையையும் விட்டிட்டு.. கவனம் செலுத்தனும்.. அல்லது அவர்களின் செயலுக்கு நிச்சயம் ஏதாவது அவங்க மகிழும் படி செய்யனும் என்று தோன்றச் செய்யுது...?!

நான் நேற்றைய தினம்.. ஒரு உறவினரின் வீட்டுக்கு அவசர அலுவலா போயிருந்தன். அங்கு ஒரு 2/3 வயசு இருக்கும். சுட்டிப் பொண்ணு. அவங்க வீட்ட போனதில இருந்து அவா என்னைப் பார்த்துக் கொண்டே நிண்டா. ஆனால் நான் அவாவைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் அவர்களிடம் இருந்து விடைபெற்று வாசலுக்கு வந்து காலணி மாட்டத் தொடங்கியது முதல்.. பெற்றோர் உள்ளே போய் விட்ட போதும் அந்தக் குழந்தை எங்களையே பார்த்துக் கொண்டு நின்றா. அழகா... ஒரு காலை மடிச்சு மற்ற பாதத்தின் மேல் வைச்சுக் கொண்டு.. நின்று பார்த்துக் கொண்டிருந்தா. முகத்தைப் பார்க்கவே.. பாவமாக இருந்தது. பாய்.. ரா சொல்லிட்டு வந்தன் (அப்படிச் சொல்லாமல் வெளியேறவே மனசு வரல்ல.. இயல்பாகவே அது நடந்தது.). அந்தக் குழந்தையின் செயல் என் மனசை ரெம்பவுமே நெகிழச் செய்திருந்தது..!

Posted Image எனக்கு குழந்தைகளின் செயல்களைப் போல.. நாய்க் குட்டி.. பூனைக் குட்டி.. ஆட்டுக்குட்டி.. கன்றுக் குட்டி.. அணில் குஞ்சு.. கோழிக் குஞ்சு.. பறவைகளின் நடத்தைகளும் ரெம்பப் பிடிக்கும். நின்று நிதானமா கவனிப்பன்.. அது மனதில் ஒரு நெகிழ்வை தூண்டுவதை அவதானித்திருக்கிறேன். இதெல்லாம் இயற்கையாகவே நடக்குதே.. அதெப்படி..??! நமக்கும் அவைக்கும் என்ன தொடர்பு..??! :) :icon_idea:

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:48 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க