Wednesday, February 08, 2012

21ம் நூற்றாண்டின் ஆடை அலங்காரம்..!

 மனித வரலாற்றில்.. உடை அணியும் நாகரிகம் பகுத்தறிவுள்ள மனிதனை வந்து சேர்ந்தது ஆச்சரியமல்ல.





ஆனால் அமெரிக்கா.. பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு உடை அணிவிக்கும் நாகரிகம் வெகு வேகமாக வளர்ந்து வருவதோடு அது பல மில்லியன் கணக்கான வருவாயையும் ஈட்டிக் கொடுக்கிறது.



அதேவேளை இந்தியா.. வங்காளதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் குழந்தைகளே உடை அணிய வசதி இன்றி வாழ்கின்றன.



அதுமட்டுமன்றி நடிகைகள்.. மாடல்கள்.. உடை இன்றி தெருக்களில்.. திரைகளில் தோன்றுவதையே நாகரிகம் என்று நினைக்கின்றனர்.



இப்படி பன்முகப்பட்ட வடிவில் வந்து நிற்கிறது 21ம் நூற்றாண்டின் ஆடை அலங்காரம்.

குளிர் பிரதேசங்களில் உள்ள பிராணிகளுக்கு குறிப்பாக ரோமம் இல்லாத பிராணிகளுக்கு ஆடை அணிவிப்பதில் தவறில்லை.. விழாக்களின் போது அதில் கலந்து கொள்ளும் பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அலங்கரிப்பது தவறில்லை. ஆனால்.. வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளுக்கு ஆடை அணிவிக்கும் நாகரிகத்தால் விளையப் போகும் நன்மை என்னவோ..??! என்று.. ஆராய்ச்சியாளர்களே மண்டையை குடைகின்றனராம்..! ஆனால் வியாபாரிகளுக்கோ கொண்டாட்டம் தான்.


 



மேலதிக விபரங்களோடு செய்தி இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:10 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க