Wednesday, March 14, 2012

சனல் 4 (Channel 4) Vs அசாசின்'ஸ் கிரிட் (Assassin's Creed)


அன்ரி எங்க சேன்ஸ்பரில இருந்தோ வாறீங்கள். என்ன ஒபர் (Offer) போட்டிருக்காங்கள்...?!

என்ன வழமை போல.. வாழைப்பழமும்.. ஒரேஜ்சும்.. அப்பிள் பையும் தான்.. பை வன் கெட் வன் பிறி என்று போட்டிருக்கிறாங்கள்.

அவ்வளவு தானா. அது சரி அன்ரி.. இன்றைக்கு இரவு சனல் 4 இல ஊரைப் பற்றி வீடியோ காட்டப் போகினமாம்.. பார்க்கல்லையோ..??!

பார்த்து என்னத்த தம்பி ஆகப் போகுது. அவங்களும் காட்டிறதை காட்டிறாங்கள்.. உலகம் ஒன்றும் உருப்படியா செய்யுதுல்லையே. இப்படியே இவன் காட்ட பதிலுக்கு அவன் தான் ஒன்றைக் காட்ட..எண்டு எங்கட பிரச்சனை இழுபட்டுக் கொண்டெல்லோ போகுது.

நாங்கள் அவசரப்படுறது போல.. உலகம் ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவுத்தன் என்று ஒன்றும் செய்யேலாது தானே அன்ரி. இந்தியா.. சீனா.. ரஷ்சியா என்று உலகம் பூராவும் ஓடி ஓடி.. சிங்களவங்களும் கால் காலா விழுந்து எழும்புறாங்களே அன்ரி.

எனக்கும் ஒன்றுமா புரியல்ல...தம்பி. தமிழங்கள் சீனாக்கு என்ன அநியாயம் செய்தாங்கள் என்று சீனா தமிழங்களுக்கு எதிரா நிற்குது. ரஷ்சியாவிற்கு என்ன செய்தம். கியூபாவிற்கு என்ன செய்தம். இப்பவும் எங்கட ஆக்கள்.. மா சேதுங்.. லெனின்..கார்ல்மார்க்ஸ்.. பிடல் காஸ்ரோ என்று பேசுறதை பெருமையா நினைக்கினம். ஆனால் அவையள் பிறந்த நாடுகள் எல்லாம்.. எங்கட சனத்தை அழிக்கிறதை நியாயப்படுத்திக் கொண்டு நிற்குதுகள். அது தான் கவலை.

என்ன செய்யுறது அன்ரி. இப்பவும் பஞ்ச சீலம் வகுத்த நேரு மாமா.. அகிம்சை வளர்த்த காந்தி தாத்தா என்று எங்கட சந்ததிகளுக்கு பாடம் எடுக்கிறாங்கள். அங்க பார்த்தால் நேரு மாமாட பேரன் படையனுப்பி தமிழனைக் கொல்லுறான்.. பேத்தி.. பூட்டன்.. சிங்களவனோட சேர்ந்து நின்று கொல்லுறாங்கள். சொந்த நாட்டில தமிழகத் தமிழங்களையும் விட்டு வைக்கல்ல.. அவங்களையும் தானே கடலில கூட்டு வைச்சுக் கொல்லுறாங்கள்.

ஓம் ஓம்.. நீர் சொல்லுறதும் சரி தான். என்ன செய்யுறது. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்ல என்ற நிலை. அதுதான் இந்தக் கதி.

அதுசரி அன்ரி.. நீங்கள் இரவைக்கு பிள்ளைகளுக்கும் உதைக் காட்டுங்கோ. அப்ப தான் அதுகள் பள்ளிக்கூடத்தில போய் உந்த வீடியோவப் பார்க்காத நாலு வெள்ளையளுக்கும் வேற மற்ற நாட்டுப் பிள்ளைகளுக்கும் உதுகளைச் சொல்லுங்கள். எங்கட சனத்துக்கு நடந்த அநியாயத்தை உலகம் நல்லா அறிய வேணும்... அப்ப தான் உலகம் எங்களுக்கு உதவ முன் வரும்.

என்ன சொல்லுறீர்.. பிள்ளைகள் பார்க்க வேண்டாம் என்று தானே அவங்கள்.. இரவு 10.55 போடுறாங்கள். உமக்கென்ன விசரே. அதுகள் உதைப் பார்த்து பயந்து போயிடுங்கள். பிறகு நான் சிறீலங்காவுக்கு கொலிடேக்கு கூப்பிட்டாலும் வராதுகள். நீர் சும்மா கிடவும்.

என்ன அன்ரி.. இப்ப கொஞ்சம் முன்னம் தான்.. மா சேதுங்.. லெனின்.. கார்மார்க்ஸ்.. பிடல் என்று கொண்டாடுற எங்கட சனத்தைப் பேசினீங்கள். இப்ப என்னடான்னா.. உங்கட பிள்ளைகளுக்கு எங்கட அநியாயம் தெரியப்படாது என்று சொல்லுறீங்கள். அதுகள் அசாசின்'ஸ் கிரிட்.. ( Assassin's creed), மொடேன் கொம்பட் (Modern combat) என்று விளையாடிற கேமுகளில இல்லாத பயங்கரத்தையா அன்ரி காட்டிடப் போறாங்கள். 18+ கேம் எல்லாம் 10+ விளையாடுதுகள்.. அதுகளை விட்டிட்டு இருப்பீங்கள்.. இதை...??!

அது கேம். இது அப்படியே. சும்மா கிடவும். நானே பார்க்கிறனோ தெரியாது..! நான் பார்த்தா பிள்ளைகளும் நித்திரை முழிச்சு எழும்பி இருந்து பார்க்குங்கள். புதன் கிழமை இரவு போடுறாங்கள். வியாழக்கிழமை ஸ்கூல் வேற. நீர் தனியாள் உமக்கு உந்தப் பிரச்சனைகள் விளங்காது பேசமல் இரும்.

எதுக்கன்ரி என் மேல எரிஞ்சு விழுகிறியள். இது உங்கட வீட்டுப் பிரச்சனை போல. உங்கட வீட்டில யாரும் செத்தா.. அதைப் பார்க்கக் கூடாதென்று.. உங்கட பிள்ளையள என்ன.. ஒளிச்சா வைப்பீங்கள். சரி அன்ரி.. ஏதோ உங்கட விருப்பம் போல செய்யுங்கோ. நான் கட்டாயப்படுத்தல்ல.

எனக்கு.. ரெஸ்கோவுக்கும் போக வேண்டி இருக்கு. உம்மோட நின்று மிணக்கட ஏலாது. பிறகு சந்திப்பம் என்ன.

ஓ கே அன்ரி. பாய்..!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:09 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

என்ன அகதி, பெயர் கூட வெளியே சொல்ல முடியாத ஆள் நீ உனக்கு எதற்க்கு இந்த வேலை ? பெரிய வீரன் போல வசன நடை வேறு. ஆனால் நிஜத்தில் வேறு. குருவிகளாக இருந்த நீரே ஒரு காலத்தில் புலிகளை திட்டி யாழ்களத்தில் இருந்து தடைபட்டு பின் நெடுக்காலபோவான் என்று அலைகிறாய். போய் வேலையை பாருடா பாடு. தமிழ் ஈழம் எல்லாம் கிடைக்காது. உன்னால நீ நினைத்தால் கூட இலங்கைக்கு போய் வர முடியாது. அது தான் உன் நிலை.

Wed Mar 14, 04:42:00 PM GMT  
Blogger அருள் செப்பியவை...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

Wed Mar 14, 05:16:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

உண்மை சுடுகிறது.எமக்காய் உலகெல்லாம் ஆர்ப்பாட்டம். ஆனால் எங்கள் வீட்டில் டிவி சீரியலில் என் குடும்பம் கண்ணீர் சொரிகிறது. கேடுகெட்ட தமிழினம்.

Thu Mar 15, 04:34:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

ஐயா/அம்மணி அனானி 1. உங்கள் கற்பனை தவறு. குருவிகள் = நெடுக்காலபோவான் சமன்பாடும் தவறு. குருவிகள் யாழ் இணையத்தில் தடை என்பதும் தவறு. குருவிகள் ஆகிய நாங்கள் யாழில் எழுதுவதற்கான நேரத்தைப் பெற முடியாமையில் எழுதுவதில்லையே தவிர.. குருவிகளுக்கும் யாழிற்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை. சிறீலங்கா என்ன உலகம் பூராவும் குருவிகளுக்கு பறக்கவும் தடையில்லை..! இத்தோடு உங்கள் கற்பனைக்கு முடிவு கட்டுங்கள்..! மேலும் நாங்கள் அகதிகளும் கிடையாது. நாங்கள் எங்கள் நிலத்தில் சுதந்திரமான வாழ்வுரிமையைக் கேட்கும் தமிழ் மக்கள்.

Thu Mar 15, 07:22:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க