Monday, March 26, 2012

கூடங்குளம் இன்னொரு செர்னபில் ஆனால்... தமிழங்க உலகத்தில வாழ்ந்த அடையாளமே இருக்காது.


காய் மார்க்ஸ்... கவ் ஆர் யூ..

ஐ அம் பைன் டானியல்.. எப்படிப் போய்க்கிட்டு இருக்கு ஆராய்ச்சி.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.. அணுக் கருச்சேர்க்கை தொழில்நுட்பம்.. நடைமுறை சாத்தியம் ஆகிட்டா.. ஆபத்தான அணுக் கருப்பிளவு தொழில்நுட்பத்தை உலகம் கைவிடலாம் இல்லையா. என்னுடைய ஆராய்ச்சி அதுக்கு கொஞ்சம் என்றாலும் உதவினா.. நிச்சயம் மகிழ்வன்..! அதுக்காததான் கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்கன்.

இதென்ன கையில.. சிலேட்டுக் கணணியோட..??!

லைவ் அப்டேட் பார்த்திக்கிட்டு இருக்கேன் மார்க்ஸ்..!

எங்க இருந்து வருகுது டானியல்..

கூடங்குளத்தில் இருந்து...!

என்ன சொல்லுறீங்க அதைப் பற்றி...

தமிழ்நாட்டை மிகப் பெரிய ஆபத்தில தள்ளிக்கிட்டிராங்க என்று நினைக்கிறன்.

ஏன் அப்படிச் சொல்லுறீங்க..??!

இப்ப பாருங்க.. தமிழ்நாட்டுக் கரையோரம் ஒன்றும் பாதுகாப்பான புவியியல் சூழலைக் கொண்டிருக்கல்ல. 2004 இல் எங்கிருந்தோ சுனாமி வந்து எங்களை தாக்கும் என்று யாரும் எதிர்வு கூறினதா தெரியல்ல. ஆனால் நடந்திட்டுது. அதுமட்டுமன்றி அடிக்கடி சிறு அளவிலான பூமி அதிர்வுகளும் இருக்கிற கரையோரமாத்தான் அது இருக்குது. பூமி அதிர்ந்து கொண்டிருக்கும் அந்தமானும் எங்களுக்குப் பக்கத்தில தான்.. இருக்குது. இப்படியான ஒரு கரையோரமா.. அணுக் கருப்பிளவு தொழில்நுட்பத்தில் அணு மின் நிலையம் அமைக்கிறது.. தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. அண்டையில் உள்ள ஈழத் தமிழங்களுக்கும் தான் தீமை.

அது எப்படி எல்லாருக்கும் தீமையாகும்..... அப்துல் கலாம் கூடவா இதனை விளங்கிக்காம இருப்பார்.. அவர் தான் இதனால ஆபத்தில்லை எங்கிறாரே...??!

இப்ப பாருங்க.. ஜப்பானில கடந்த ஆண்டு நடந்த பூகம்பம்.. சுனாமி தாக்கி.. ஒரு அணு நிலையம் பாதிக்கப்பட்டிச்சுது. அதனால உலகமே அணுக்கதிர்வீச்சு தொடர்பாக பயந்துகிட்டு இருந்திச்சு. ஜப்பானில நடந்த விபத்திற்கு கனடாவில எச்சரிக்கை வழங்கிற நிலைக்கு நிலைமை ஆபத்தா வந்திச்சு...! நினைச்சுப் பாருங்க.. தமிழ்நாட்டில ஏலவே உள்ள அணு உலைகளோட.. கூடங்குளமும் சேர்ந்துச்சுன்னா.. ஒரு விபத்தோ.. இயற்கை அனர்த்தமோ நடந்திச்சின்னா.. அதன் விளைவால வாற கதிரியக்கம்.. முழு தமிழ்நாட்டையும் மட்டுமல்ல.. ஈழத் தமிழர்களையும் செறிவாத் தாக்கும்.  இதனால உடனடி மரணங்கள் மட்டுமல்ல.. தமிழ் சந்ததியே மரபணுக்கள் விகாரம் அடைஞ்சு.. சிதைஞ்சு போக.. வழி இருக்குது. ஒன்று நடந்த பின் கலாமோ.. நியூட்டனோ ஒன்றும் செய்ய முடியாது. வருமுன் காக்கிறதுதான் நல்லது.

இதை எல்லாமா டானியல்.. கலாம் யோசிக்காமல் இருப்பார்..??!

இல்ல மார்க்ஸ். கலாம் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சித்திட்டதோட பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் சிலவற்றை வெளில சொல்லாமல் இருக்கலாம் இல்லையா. அதுமட்டுமில்லாம கலாம்.. ஒரேயடியா வெற்றி கண்ட விஞ்ஞானியும் அல்ல.  அவரின் கண்காணிப்பில ஏவின எத்தினை ஏவுகணைகள் கடலுக்க வீழ்ந்து போச்சுது. அது ஓரளவுக்கு சரிக்கட்டக் கூடிய இழப்புக்கள். ஆனால் இங்க ஒரு தவறு நடந்து.. ரஷ்சிய- உக்ரைன் - செர்னபில் (Chernobyl ) போல ஒரு அணு உலை விபத்து நடக்குமுன்னா.. தமிழங்க உலகில வாழ்ந்த அடையாளமே இல்லாமல் போக வாய்ப்பிருக்குது..!

நீங்க சொல்லுறது சரி போலத்தான் இருக்குது. அப்படின்னா எப்படித்தான் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைக்கு வழி பண்ணுறது டானியல்.. மக்கள் மின் வெட்டால ரெம்ப பாதிக்கப்படுறாங்களே.. பொருளாதாரம் கூட பாதிக்கப்படுகுதே..??!


அதற்கு பல வழிகள் இருக்குது மார்க்ஸ். இப்ப பாருங்க.. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில ஜேர்மனி பொருளாதாரத்தில முன்னணில நிற்கிற நாடு. அது அணு மின் நிலையங்களை மூடிவிட திட்டம் வகுத்திட்டுது. அதற்கு பதிலாக.. இயற்கையோடிணைந்த மின் உற்பத்தி வழிமுறைகளை அது அமுலாக்க நிற்குது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீண்ட கடற்கரை இருக்குது. கடல் நீரோட்டம் இருக்குது. இவற்றை வைச்சு.. காற்றாலை மின் பிறப்பாக்கிகளை உருவாக்கலாம்.. நீரோட்ட மின் பிறப்பாக்கிகள உருவாக்கலாம்.. கடலலை மின் பிறப்பாக்கம் செய்யலாம்.. அதுபோக.. ஆண்டுக்கு.. நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்குது.. சூரிய மின் கலத்தகடுகளை வீடுகளில உபயோகிச்சுக்கிட்டு.. மற்றைய சுவட்டு எரிபொருள் மின் நிலையங்கள் உற்பத்தி செய்யுற மின்சாரத்தை.. பொருண்மிய தேவைகளோட தொழிற்சாலைகளின் தேவைக்கு பாவிக்கலாம். உலகமே ஆபத்தில்லாத மற்றும்.. காபன் நடுநிலை அல்லது காபன் வெளியேற்றத்தை தடுக்கும் மின்சார உற்பத்தி பற்றி பேசிக்கிட்டு இருக்குது.. ஆனால் தமிழகம் மட்டும்.. ஆபத்தான திட்டங்களை ஏன் தான் நாடிப் போகுதே தெரியல்ல.

உங்கட பரிந்துரைகள் நிறைய சாத்தியப்பாடானவையாத் தானே இருக்குது டானியல். அப்ப ஏன் நம்ம தமிழ்நாட்டு விஞ்ஞானிங்க.. இதுகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெளிவாச் சொல்லுறாங்க இல்ல.

நம்ம நாட்டில உள்ள குறைபாடே இதுதான். அரசியல்வாதி.. அறிவியலாளன்ர பேச்சோ.. பரிந்துரையோ கேட்கிறதில்ல. தனக்கு இலஞ்சம் கிடைக்க எது சிறந்த வழின்னு அரசியல்வாதி பார்க்கிறான்.. தங்களை யாருமே கண்டுக்கிறாங்க இல்ல என்று அறிவியலாளன் நாட்டை விட்டு ஓடுறான். இப்படி இருக்கிறப்போ.. எப்படி மார்க்ஸ்.. நம்ம அரசுங்க நீடித்து நிலைக்கக் கூடிய இயற்கைக்கு மக்களுக்கு ஆபத்தில்லாத மாற்றீடுகள் மூலம் மின் உற்பத்தி என்பதை பரிசீலிக்கவும்.. கண்டறிஞ்சு அமுல் படுத்தும் முனைவாங்க.

அப்ப இதுக்கு என்ன தான் மாற்று வழி..??!

ஒரே வழிதான் இருக்குது. கிறீன் பீஸ் (Green-Peace) போன்ற சர்வதேச அமைப்புக்களோட சேர்ந்து மக்கள் தமக்கும் இயற்கைக்கும் ஆபத்து தரவல்ல.. திட்டங்களை அமுலாக்கிறதை எதிர்க்கனும். அரசுகளுக்கு சரியான அழுத்தத்தைக் கொடுத்து.. இதற்கு இன்னென்ன மாற்றீடுகள் இருக்குது.. இங்கங்க நடைமுறையில் இருக்குது.. அவற்றை அமுல் படுத்துங்க.. என்று சொல்லனும். மக்கள் போராடினால் தான் எனி அரசுகளின் செயற்பாடுகளை மாற்ற முடியும்.

அப்படின்னா.. ஒரு அறிவியலாளனா.. நீங்க கூடங்குளம் போராட்டத்தை ஆதரிக்கிறீங்களா டானியல்..??!

அறிவியலாளன் என்பதற்காக மட்டும் ஆதரிக்கல்ல.. எங்கட தமிழ் இனத்தின்ர எதிர்கால இருப்பு.. எங்க நிலத்தின்ர இயற்கைத் தன்மை ஆபத்தில்லாம அடுத்த பல சந்ததிகள் பாவிக்கப்படக் கூடியதாக இருக்கனும்.. எங்கட பூமிக்கு எங்களால ஆபத்து வரக்கூடாது.. இப்படி பல காரணங்களின் நிமித்தம்.. அதை ஆதரிக்கிறன் மார்க்ஸ். இதில.. உங்கட நிலைப்பாடு என்ன மார்க்ஸ்..

கொஞ்சம் குழம்பித்தான் போயிருந்தன். அதுவும் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளே சொல்லேக்க.. ஏன் கூடங்குளத்தில அந்த அணு மின் நிலையம் அமையக் கூடாது என்றும் யோசிச்சன். ஆனால் இப்ப நீங்க முன் வைச்சிருக்கிற நியாயங்களைப் பார்க்கிறப்போ.. கூடங்குளம்.. நம்ம குழந்தைகளின் பேரக்குழந்தைகளின் இருப்புக்கே ஆபத்தை கொண்டு வரலாம் என்று புரியுறப்போ.. எப்படி டானியல் அதை ஆதரிக்க முடியும் சொல்லுங்க.

உண்மை தான் மார்க்ஸ். என்னுடைய கருத்தை சரியா உள்வாங்கி இருக்கீங்க. இதையே உங்கட மீடியாக்களிலும் எடுத்துச் சொல்லுங்க. மக்களை ஒரு பெரும் சக்தியா திரண்டு நின்று போராடச் செய்யுங்க..! அப்பதான் அரசுகளை மாற்றி யோசிக்கச் செய்யச் செய்ய முடியும். மாற்றங்களை காலத்திற்கும் பூமிக்கும் இனத்திற்கும் உபயோகமான முறையில கொண்டு வரவும் அமுல்படுத்தவும் தூண்ட முடியும். சரி மார்க்ஸ்.. எனக்கு நேரம் ஆகுது.. லஞ்ச் எடுத்திட்டு.. மீண்டும் ஆய்வுகூடம் போகனும்..

நன்றி டானியல். உங்கட இந்த பிசி செடியுலிலும்.. என்னோடும்.. உங்கட கொஞ்ச நேரத்தையும்.. நல்ல பிரயோசனமான விசயங்ளையும் பகிர்ந்து கொண்டதற்கு. என் சார்பில.. என்ர மீடியாக்கள் கூடங்குளம் மக்களோட நின்று குரல் கொடுக்கும்.. இதனை நான் உங்களுக்கு உறுதியாச் சொல்லுவன். அப்ப நான் விடைபெறுறன்.

எங்கன்ர.. கருத்துக்களை பொறுமையா உள்வாங்கிக் கொண்ட  உங்களுக்கும் நன்றி மார்க்ஸ். அப்ப பிறகு சந்திப்பம். பாய்.

பாய் டானியல்..!

நெடுக்காலபோவன் (யாழில்)

Labels: , , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:24 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க