Thursday, April 12, 2012

சித்திரைப் பெண்ணோடு விவாகரத்து வேணும்.. ஆனால் வீட்டை விட்டு மட்டும் போயிடாத தாயீ..!



WWW... இதை ஒன்றும்.. வெப் சைட் முகவரி தாறத்துக்காக எழுதல்லைங்க. இதுக்குப் பின்னாடி ஒரு சமாச்சாரமே இருக்குதுங்க. அதாவது வந்துங்க.. இந்த மூன்று WWW களை நம்ப முடியாது என்று சொல்லுறாங்க பிரிட்டிஷ் வெள்ளைக்காரங்க. அவை தாங்க.. இவை. முதலாவது.. W வுக்கு சொந்தக்காரிகளான.. women.. இராண்டாவது weather.. மூன்றாவது work...!

இவற்றை மட்டுமில்லைங்க.. இன்னொன்றையும் நம்ப முடியாதுங்க. அதுதாங்க தமிழ்நாட்டில இருந்து செய்மதிகளூடாக பரவி.. ஆழ் கடல் ஆழிகள் பல கடந்து.. தொலைதூரம் தாண்டி.. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எல்லாம்.. அவங்க பின்னாடி ஓடி வருகுதே... மானாட மயிலாட புகழ்.. நம்மட கலைஞர் கருணாநிதியின் சொந்தக்காரங்க நடத்திற.. கலைஞர் தொலைக்காட்சி தாங்க அது..!

அப்படி என்ன அதில நம்ப முடியாமல்.. இருக்குது என்று கேட்கிறீங்களா....

சட்டசபையில்.. தமிழ் சான்றோர் வழிமொழிந்ததற்கு அமைய.... தமிழர் புத்தாண்டாக தைப்பொங்கல் தினத்தை அறிவிச்சாலும் அறிவிச்சார் கலைஞர்..! அதைக் கேட்டு.. தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும்.. பலரும்... அதை ஒரு முற்போக்கான முடிவு என்று எல்லாம் சொல்லி வரவேற்றாங்க..! ஏன் பாராட்டி நடிகைகளை உட்கார வைச்சு.. கலைஞருக்கு பொன்னாடை.. கேடயம்.. பட்டயம்.. என்று எல்லாம்.. வழங்கி.. கெளரவமும் அளிச்சாங்க..!

இப்படி.. பெரும் விளம்பரத்தோட..அறிவிச்சு.. ஒரு 5 வருசம் கூட ஆகல்லைங்க..! இன்று கலைஞர் ரீவியை திறந்தால்.. ஒரு விதமான விளம்பரம்.. போகுதுங்க. சித்திரைத் திங்கள் முதலாம் நாள் விசேட நிகழ்ச்சிகலாம். லியோனி பட்டிமன்றமாம். நடிகர் கார்த்தி கலந்து கொள்ளும் விசேட நிகழ்ச்சியாம். அதாம்.. இதாம். நாள் பூரா விசேட நிகழ்ச்சிகளாம்.. இதெல்லாம் எப்ப என்று கேட்கிறீங்களா.. நாளைக்கு (13-04-2012) தாங்க..! அன்று தான் தமிழர்கள்.. ஆண்டு தோறும்.. சூரியன்.. மாரியில் இருந்து கோடைக்குள் நுழையும்.. இளவேனில் காலத்தில் கொண்டாடும்.. தமிழர் புத்தாண்டு தினமுங்க..! அது வழமையா சித்திரை 14 இல் வாறதுங்க. இந்த வருடம் லீப் வருடம் எண்டதாலையோ.. என்னமோ.. அது 13 இல வருகுதுங்க..!

கலைஞர் ரீவி சித்திரை திங்கள் முதலாம் நாள் போல.. பங்குனித் திங்கள் முதலாம் நாளையோ.. வைக்காசித் திங்கள் முதலாம் நாளையோ.. ஏன் விசேட நாளாகக் கொண்டாடுறதில்ல.. என்ற கேள்வியை மட்டும் ஏன் தமிழ் சான்றோர்கள்.. கலைஞர் கருணாநிதியிடமும் கலைஞர் ரீவியிடமும்.. கேட்கிறாங்கல்லையோ தெரியல்ல. அவங்க.. அதை மரியாதை நிமித்தமோ என்னமோ..கேட்க மறந்தாலும்.. மக்கள் மனசுக்க கேட்கிறாங்களுங்க..!

அதுமட்டுமாங்க.. மக்கள் செய்யுறாங்க.. இப்படியும் பேசிக்கிறாங்களுங்க..

என்னையா இது.. மானம் கெட்ட பிழைப்பா கிடக்குது..! சட்டமன்றில் சட்டம் இயற்றி விவாகரத்தும் வாங்கிக் கொடுத்திட்டு.. இப்ப என்னடான்னா.. சித்திரைப் பெண்ணே.. நான் விவாகரத்து தான் வாங்கினேனடி.. வீட்டை விட்டு மட்டும் போகாத.. மானம் மரியாதை.. (கலைஞர் ரீவிக்கு அது வியாபாரமுங்க...) போயிடுண்டி.. என்று இப்ப என்னடான்னா.. பெயரை மாத்திட்டி.. அதே பெண்ணைப் பிடிச்சு.. சேலைத் தலைப்பை வேட்டி முனையில முடிஞ்சு.. இழுத்து.. வீட்டோட வைச்சிருக்கிறாப் போல இருக்குது என்றும் பேசிக்கிறாங்களுங்க.

மற்ற ரீவிக்காரங்க எல்லாம்.. தமிழ் புத்தாண்டு என்று சொல்லி.. தமிழ் நாட்காட்டியின் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிச்சு.. விசேட நிகழ்ச்சிகள் நடத்திறாங்க. அதில ஒரு துணிவு.. நேர்த்தியாவது இருக்குதுங்க. ஆனால்.. கலைஞர் மட்டும்.. சித்திரப் பெண்ணை சட்டசபையில் வைத்து துகில் உரிந்துவிட்டு..இப்ப என்னடான்னா.. புதுப் பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்து.. புதுப் பெயரோட.. அவளை தன்னோட வைச்சிருக்க விரும்பிறாருங்க.! இது எதுக்கு.. அவளை வைச்சு விபச்சாரம்.. சா வியாபாரம் பண்ணத்தானுங்க.

கடைசியில.. கலைஞர் அரைச்ச மிளகாய் வழிய.. எரிவில.. எரிஞ்சு.. விழுந்து கொண்டிருப்பவர்கள்.. யாரென்று.. நினைக்கிறீங்க. அவங்க வேறு யாருமில்லைங்க.... கலைஞருக்காக முடிவெட்டி.. சா.. முடிவெடுத்த தமிழ் சான்றோரும்.. அவருக்கு முற்போக்குவாதின்னு.. பெயர் வழங்கி கெளவர நிகழ்ச்சி நடந்தியவங்களும் தானுங்க. கலைஞரோ.. எந்தக் கவலையும் இல்லாம வழமை போலவே.. தானும் தன் பிழைப்பும் என்றிருக்கிறாருங்க..!

பாவம் மக்கள்... இந்த உண்மையை வெளில உரத்துச் சொல்லவும் முடியாம... நிற்க வைச்சு நாலு கேள்வி கேட்கவும் முடியாம... தமக்குள்ளேயே..மெல்லப் பேசி.. மென்று விழுங்கிக் கொண்டிருந்தாலும்.. சித்திரைப் பெண் என்னவோ அவர்களோடு.. எந்தக் கோபமும் இல்லாம.. என்றும் போலவே.. தேவதையாக வந்து வாழ்த்திட்டுத் தான் இருக்கிறாளுங்க. தமிழ் புத்தாண்டும் சிறப்பாத் தான் கொண்டாடப்பட்டுக்கிட்டு இருக்குதுங்க. இது தாங்க கலைஞர் வீட்டிலும் நிலை.

கலைஞர் வீட்டிலும்.. கூட..கலைஞர் மட்டுமே செய்து கொண்ட.. விவாகரத்துக்கு.. மக்கள் ஏன்.. அவளை புறந்தள்ளனும்.. புறக்கணிக்கனும். அப்புறம் எதுக்கு அவஸ்தைப்பட்டு.. பெயரை மாற்றி.. கெஞ்சிக் கூத்தாடி.. அவளையே.. அள்ளி அணைக்கனும்.. கொஞ்சி மகிழனும்..! அதெல்லாம் கலைஞருக்கே தெரிந்த கை வந்த கலைகளும்..வித்தைகளும் போல..! பாவம் மக்கள்.. அவர்களுக்கு ஊரையும் ஏமாற்றத் தெரியாது. தமிழரையும் ஏய்கத் தெரியாது. தமிழை வைச்சு பிழைப்பை ஓட்டவும் வராது. ஆனால்.. கலைஞர் தொலைகாட்சிக்கோ..???!

எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்.. உனக்கில்லையடி.. என்ற கணக்கா இருக்கு தமிழ்நாட்டு நடப்பும்..!

(இது கலைஞர் தொலைக்காட்சிக்கு.. சன் தொலைக்காட்சி.. மற்றும் சன் குழுமத்தினருக்கோ.. எதிரான ஆக்கம் அல்ல. இது நியாயத்தை கேட்க விளையும் மக்களின் குரல்..!)

நன்றி: யாழில் நெடுக்காலபோவான்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:25 PM

2 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

அகதி நாயே உன்னை யாருடா கலைஞர் டிவி பார்க்க சொன்னது? நீ தான் பொட்டை பிரபாகரன் ஆதரவாளர்தானே உனக்கும் தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு

நீ என்றைக்காவது இந்தியாவிற்காவது இல்லை இலங்கைக்கு வருவாய்

அன்று இருக்கு உனக்கு ஆப்பு

என்ன எமக்கு உன் பெயர் கோத்திரம் எல்லாம் தெரியாது என்ற நினைப்பா?

Sun Apr 15, 07:20:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நல்லது இப்படியே திட்டிக்கொண்டிருக்கக் கடவ..! :)

இந்தத் திண்டுக்கள் நெடுக்காலபோவனைப் போய் சேரட்டும்..! :)

Sun Apr 15, 08:02:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க