Saturday, April 21, 2012

வீட்டின் இருப்பும் உங்கள் மகிழ்ச்சியும்.. ஜப்பானியர் கற்றுத்தரும் பாடம்.



ஜப்பானியர்கள் தங்கள் இல்லங்களை பிரத்தியேக வடிவங்களில் அமைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவற்றின் கூரையின்.. சுவரின்.. தளத்தின்.. நிறங்களை வரவேற்பறை.. ஓய்வு அறை.. படுக்கை அறை.. உணவு அருந்தும் அறை என்று தனித்துவமாக அமைப்பார்களாம். அதற்கு காரணம்.. நிறங்கள் எம் மனதில் செய்யும் ஆதிக்கம் தானாம்.

Posted Image

அதுமட்டுமன்றி இல்லத்தில் வரவேற்பறையில் அதிக பொருட்களை அடுக்கி வைக்கமாட்டார்களாம். அதிலும் மரத்திலான இயற்கையிலான பொருட்களையே அதிகம் பாவிப்பார்களாம். மேலும்.. கூடிய சுவாத்தியமாக நல்ல காற்றோட்ட வசதிவிட்டு வீட்டை சுத்தம் சுகாதாரமாகப் பேணிக் கொள்வார்களாம்.

Posted Image

Posted Image

மேலும்.. வரவேற்பறைகள் தனித்துவமான அமைப்புக்களோடு இருக்குமாம். அதேபோல்.. உணவருந்தும் அறைகளும். அவற்றின் நிறங்களும்.. அமைப்புமே.. உணவு அருந்தும் மன நிலையையும்.. அளவையும்.. மகிழ்ச்சியையும்... தீர்மானிப்பதாக ஜப்பானியர்கள் நம்புகின்றனராம்.

Posted Image

பிரகாசமான இல்ல விளக்குகளை பாவிப்பதை தவிர்த்து.. கூடிய அளவு மனதிற்கு இதமான அளவில்.. மங்களான.. கண்ணைப் பாதிக்காத நிறங்களில்... மனதைக் கவரக் கூடிய மன அமைதியை தரக் கூடிய.. நிறங்களில்... மின் விளக்குகளைப் பொருத்தி வைப்பார்களாம்.

Posted Image

அதுமட்டுமன்றி வீட்டுத்தோட்டம்.. வீட்டுச் சுற்றயலை மிகவும் மன ரம்மியமாகப் பேணிக் கொள்வார்களாம். ஓய்வுநேரத்தை அந்த ரம்மியமான சூழலோடு இயற்கையோடு ஒட்டிக் கழிப்பார்களாம். இதுவே அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஜப்பானின் புகழ்பூத்த ஒரு எழுத்தாளர் தனது நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Posted Image

அந்த நாவலின் சுருக்கத்தினை சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஞாபகம். அதன் இரத்தினச் சுருக்கமே இது. அதன் அடிப்படையில்.. உங்கள் வீட்டை.. வீட்டுத் தோட்டத்தை எப்படி.. வைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நிறைவளிக்கும் என்பதற்கான ஒரு வழிகாட்டலுக்காக.. இப்பதிவை இங்கு தருகிறோம். இதில் உங்கள் கருத்துக்களையும் படங்களையும் ஆக்கங்களையும் நீங்கள் விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்...!

Posted Image

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:01 PM

6 மறுமொழி:

Blogger சிவக்குமார் செப்பியவை...

நல்ல ரசனையானவர்கள் போல, ஆனால் ஆடம்பரமாகத் தெரிகிறது, ரொம்ப செலவாகுமோ ?

Sun Apr 22, 02:31:00 AM GMT+1  
Blogger Jaleela Kamal செப்பியவை...

மிக அருமையாக இருக்கு

Sun Apr 22, 12:46:00 PM GMT+1  
Blogger Yaathoramani.blogspot.com செப்பியவை...

நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள்
வீட்டைப் பார்க்கும் போதே நமக்குள்ளும் மகிழ்ச்சி பரவுகிறதே
மனம் கவர்ந்தது தொடர வாழ்த்துக்கள்

Sun Apr 22, 03:06:00 PM GMT+1  
Blogger அன்புடன் அருணா செப்பியவை...

Nice!

Sun Apr 22, 03:41:00 PM GMT+1  
Blogger சாந்தி மாரியப்பன் செப்பியவை...

பார்க்கறதுக்கே ரம்மியமா இருக்குது,..

Sat Apr 28, 03:09:00 AM GMT+1  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) செப்பியவை...

மிக அழகான வீடுகள், ஜப்பானியரின் செய் நேர்த்தி, ரசனையின் அடையாளங்கள் இவை! ஆனால் இவை மாத்திரம் மகிழ்வான வாழ்வைத் தருமா?
அழகிய விலைகூடிய கட்டிலெல்றதும் நித்திரை வந்து விடுமா? நித்திரைக்கு அவை தான் முக்கியமா?
இவை ஆடம்பரத்தின் அடையாளங்கள், உலகின் முக்கால் வாசி மக்களால் பெறமுடியாதவை? பெறும் முயற்சியிலே வாழ்நாளை வீண் நாளாக்கியோர் பலர்.
இங்கு மாடியில் மெத்தையில் வரா நித்திரை, இலங்கையில் ஓலைக்குடிசையில் பாயில் வந்ததே!
உலகில் தற்கொலை செய்வோர் தொகை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பானும் ஒன்று!!!
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஒவ் மைன்ட்- எனும் கண்ணதாசன் வரி நினைவு வருகிறது.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை!!!

Fri May 25, 09:46:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க