Sunday, April 22, 2012

மனதை மயக்கும் சுவாத்தியம் மிக்க வீட்டுத் தோட்டம்.. ஆயுளை நீட்டும்.

பொதுவான வீட்டுத்தோட்ட வடிவமைப்புக்களைப் பார்ப்போம்.. வீட்டுத்தோட்டத்தின் இருப்பும் அமைப்பும் பசுமையும் எம் மன ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமானவை..! அவையே எம் ஆயுளையும் நீட்டிக்கும்..!

Posted Image

பாம் மரங்களை (palm tree) நாட்டும் போது நெருக்கமாக நாட்டாதீர்கள். இவ்வாறு இடவெளிவிட்டு நாட்டுவதோ அல்லது ஓரளவு பெரிய பூச்சாடியில் வளர்க்கக் கூடியவற்றை அவற்றில் நாட்டி வளர்ப்பதோ நல்லது. பூச்சாடியில் நாட்டுவதால் அவற்றை இலகுவாக தேவைக்கு ஏற்ப நகர்த்திக் கொள்ள முடியும்..!

Posted Image

கோடைகால பூக்கும் தாரவங்களை இப்படி வரிசைக்கு வரிசை வகைவகையாக நாட்டுதல்.. அழகுக்கு அழகு சேர்க்கும்..!

Posted Image

வீட்டுத் தோட்டம் செய்ய போதிய விசாலமான இடமில்லாதவர்கள் இவ்வாறு அமைந்த மரப்பெட்டிகளில் அவற்றை நாட்டலாம்..! இதன் மூலம் பல வகை தாவரங்களையும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காணச் செய்யலாம்.

Posted Image

Posted Image

சிறிய வீட்டுத்தோட்டம் உள்ளவர்களும் பலவகை கண்கவர் தாவரங்களை வளர்க்க முடியும்..!

Posted Image

சுவர்களைப் பாதிக்காத ஆனால் சுவர்களில்..பெரிய மரங்களில் படர்ந்து வளரக்கூடிய தாவரங்கள்.. பூந்தோட்டத்திற்கு அழகிற்கு அழகு சேர்க்கும். பசுமைக்கு பசுமை சேர்க்கும்..!

Posted Image

வீட்டுத்தோட்டம் என்றால் வெறுமனவே பூமரங்கள் தான் நாட்ட வேண்டும் என்றில்லை. பயனுள்ள மரக்கறி வகைகளையும் நாட்டி.. பயனும் அழகும் சேர்க்கலாம்..!

Posted Image

உங்களின் தோட்ட வீட்டையும் அழகாகப் பராமரியுங்கள். அது உங்கள் வீட்டுத்தோட்டத்தின் அழகை அதிகரிக்கும்..! உங்களுக்கு மன நிறைவான ஓய்வுக்கு அது உதவும்..!

Posted Image

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள்.. பறவைகள் வந்துபோக உணவருந்த வசதி செய்யுங்கள்..அதேபோல்.. உங்கள் செல்லக் குழந்தைகள்.. தமது விருப்பத்திற்கு இல்லம் அமைக்க.. பூமரங்களை நாட்டவும் வசதி செய்து கொடுங்கள். அவர்கள் விருப்பமும் உங்கள் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை என்பதால்.. இதில் அவர்களின் விருப்புக்கும் இடமளியுங்கள். அதுவே அவர்களின் மன மகிழ்ச்சிக்கு அவசியம்..!

Posted Image

விசாலமான வீட்டுத்தோட்டம் கொண்டவர்கள்.. இப்படி விசாலமான புற்தரைகளை பேணிக்கொள்வது அழகு...!

Posted Image

சிறிய ஆனால் பன்முகத் தன்மை கொண்ட ஒரு வீட்டுத்தோட்டம்.

Posted Image

Posted Image

விசாலமான வீட்டுத்தோட்டம் உள்ளவர்கள்.. பயன் தரு தாவரங்களை இப்படி வகைக்கு வகை பாத்திகளில் நாட்டுவது பராமரிப்புக்கும் சுலபம். அழகும் சேர்க்கும்..!

Posted Image

அதிக தாவரங்கள் இல்லாமல் அமைக்கப்படும் கண்கவர் வீட்டுத்தோட்டம்.

Posted Image

வீட்டுத்தோட்டத்தில் குட்டைகள்.. நீரோடைகள் வைத்திருப்போர் அவற்றை அழகாகவும் மாசுபடாமலும் பராமரிக்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

Posted Image

என்றும் பசுமை விரும்புவர்கள்.. அவ்வாறான தாவரங்களையும் புற்களையும் கொண்டு இவ்வாறான தோட்டங்கள் அமைக்கலாம்.

Posted Image

Posted Image

வீட்டுத்தோட்டத்தில் பந்தல் போடும் முறைகள்..!

Posted Image

Posted Image

விசாலமான வீடு மற்றும் வீட்டுத்தோட்டம் வைத்துள்ளோருக்கான ஒரு பசுமை இல்லம் பேணும் முறை. தாவரங்களையும் அழகுற வெட்டி.. பராமரிக்கலாம்.

Posted Image

வகை வகையான தாவரங்களை வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா.. இங்கு போய் படியுங்கள் அல்லது.. உங்கள் வீட்டுத்தோட்ட பராமரிப்பு பொருட்கள் விற்கும் இடங்களில்.. நூல் நிலையங்களில்.. புத்தகக் கடைகளில் அதற்கென நூல்கள் விற்கிறார்கள்.. வாங்கிப் படியுங்கள்..!

இதோ... http://sundaygardene...ur_own_veg.html

http://www.gardendes...gnonline/books/ 

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:34 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க