Thursday, May 17, 2012

7000 பேரை கொன்றவர் விசாரணையில் 40,000 பேரைக் கொன்றவர் அரசி அரண்மனையில்..!



2009 மே, ஈழத்தில் வன்னி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததோ அதை விட கொஞ்சம் குறைவாகவே நடத்திருயிந்த முன்னாள் யுகோசொலவாக்கியாவின் பொஸ்னிய - சேர்பிய யுத்த கால சேர்பிய இராணுவத் தளபதியான Ratko Mladic சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் யுத்த காலத்தில் சரணடைந்த.. பிடிபட்ட.. சுமார் 7000 பொஸ்னிய முஸ்லீம் இளைஞர்களை மற்றும் சிறுவர்களை பொதுமக்களை கையைக் கட்டி.. சுட்டுக் கொன்று புதைகுழிகளில் புதைத்தவர்.

இதனை இவர் பொஸ்னிய - சேர்பிய யுத்தத்தின் போது 1992- 1995 காலப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். குறிப்பாக 1995 யூலையில் Srebrenica என்ற பொஸ்னிய முஸ்லீம்களின் இடத்தை ஆக்கிரமித்து மேற்கொண்ட படுகொலை முக்கியமானது..! களத்தில் நின்ற ஐ நா வின் பார்வையில் மண்ணைத் தூவிவிட்டு.. இதில் பல நூறு பொதுமக்கள்.. குறிப்பாக இளைஞர்கள் சரணடையச் செய்யப்பட்டு.. பின் தெரிந்தெடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இதுவே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான ஐரோப்பாவின் மோசமான இனப்படுகொலை.. அல்லது மனிதப் படுகொலை என்று வர்ணிக்கப்படுகிறது. இதற்கு Srebrenica massacre எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில் (1995- 1996) தான் சிறீலங்காவின் சந்திரிக்கா அம்மையாரும் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பான சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை கொன்று செம்மணி என்ற இடத்தில் புதைத்திருந்தார்.




அதை விட மோசமாக 2009 ம் மே யில் வன்னி இறுதிப் போரில் ஒரே வாரத்தில் சுமார் 40,000 மக்கள் கொல்லப்பட்டும்.. சரணடைந்த தமிழ் இளைஞர்கள் யுவதிகள்.. காயமடைந்த பொதுமக்கள் சகட்டு மேனிக்கு சுடப்பட்டும்.. உயிரோடு புதைக்கப்பட்டும் இருந்தனர்.

இவற்றைச் செய்தவர்கள் எவர் மீதும்.. மேற்கு நாடுகள் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல் அவர்களுக்கு இராஜ உபசாரம் அளித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

இது இப்படி இருக்க.. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள.. இந்த சேர்பிய இராணுவத் தளபதியை சேர்பியர்கள் தங்களைக் காத்த கீரோ என்கின்றனராம். அதுசரி மிக மோசமான இனப்படுகொலையாளர்களான மகிந்த ராஜபக்ச.. கோத்தபாய ராஜப்கச.. சரத் பொன்சேக்கா வும் சிங்களவர்களின் கீரோக்கள் தானே..!

அதை விட வேடிக்கை என்னவென்றால்.. இலங்கையில் இத்தனை பிரச்சனைக்கும் காரணமான பிரித்தானிய அரசியோ..  போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை அரசியின் முடிசூட்டு வைர விழாவிற்கு பிரித்தானியா வர அழைத்திருப்பது தான்..!



Mladic trial: Prosecution to focus on Srebrenica massacre.

A war crimes trial of former Bosnian Serb army commander Ratko Mladic is to resume, with the prosecution focusing on the Srebrenica massacre in 1995.

http://www.bbc.co.uk...europe-18099008

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:35 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க