Friday, November 02, 2012

ஈழத்துத் தமிழ் சுதந்திரப் பெண் போராளிகளின் பாலியல் பற்றிய விவாதங்கள்..!

ஈழத்தில் பிரித்தானிய காலனித்துவம் விலக்கிக் கொள்ளப்பட்ட நாள் முதல் இருந்து வரும் முக்கிய பிரச்சனை  சிங்களர் - தமிழர் இனப்பிரச்சனை. இதற்குத் தீர்வாக தமிழர்கள் கோருவதோ தமக்கான பூர்வீக நிலத்தில் தம்மைத் தாமே நிர்வகிக்கும் அரசியல் மற்றும் வாழ்வுரிமை. அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. உலகில் இயற்கையாக எல்லா உயிரினங்களும் உள்ள உரிமை தான் அது. ஆனால் ஈழத்தில் தமிழர்களுக்கு மட்டும் சிங்களவர்களால் அது தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறது.

இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்து விடுதலையான நாள் கொண்டு.. 30 வருட சாத்வீகப் போராட்ட வழியிலும் கிட்டத்தட்ட 35 வருட ஆயுதப் போராட்ட வழியிலும் தமது உரிமைக்காகப் போராடிய தமிழர்களுக்கு எந்த ஒரு உருப்படியான தீர்வையும்.. சிங்களவர்களும் சரி பிராந்திய வல்லரசான இந்தியாவும் சரி.. பிற பிராந்திய சர்வதேச சக்திகளும் உண்மையான கருசணை கொண்டு பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.


மாறாக தமிழர்களின் உரிமைக் கோரிக்கையை அல்லது  விருப்பை தமது பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ நலனுக்காகவே இப்போதும் போல எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.


இதனால் தமிழர்களின் உரிமைப்போராட்ட வடிவங்கள் சிதைந்தும்.. உருமாறியும்.. பொருண்மிய ரீதியில் தமிழர்கள் பலவீனப்பட்டும்.. உள்ள நிலையில்.. அவர்களின் சமூகக் கட்டமைப்புக்கள் போரால் எதிரிகளால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ள நிலையில்.. ஒரு அடிமைப்பட்ட இனமாக இராணுவ மயமாக்களின் கீழ் திட்டமிட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் ஆக்கிரமிப்புக்களுக்குள் அவர்கள் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த அடிமை வாழ்வுக்கான காரண காரியங்கள் வெறுமனவே தமிழர்களுக்கு வெளியில் மட்டும் உள்காரணிகள் இல்லை. அவை தமிழர்களுக்குள்ளும் உள்ளன. இதில் தமிழர்களை ஆட்டிப்படைக்கும் முக்கிய காரணி தமது அரசியல் சமூகத் தேவையின் பால் ஒன்றுபடாத தன்மையே..!


ஒரு காகம் கூட ஆபத்து என்றால் கரைந்து ஒரு காக்கா கூட்டத்தையே கூட்டி தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும். அதனிடம் உள்ள சமூக உணர்திறன் கூட அற்ற நிலையில் தான் இன்று ஈழத்தமிழினம்.. உலகம் பூராவும் பரம்பி உள்ள நிலையிலும் அகதி மற்றும் அடிமை வாழ்விலும் சுய திமிர் எடுத்து அலைகிறார்கள். தவிர.. தமது சமூத் தேவை உணர்பவர்களாக அவர்கள் இல்லை.


குறிப்பாக பெண்கள் விடயத்தில்..இன்றைய நாகரிக உலகிலும் மனித இனம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டே உள்ளது.


இஸ்லாமியர்கள் பெண்களை மத அடிப்படையில் அடக்குமுறைக்குள்ளாக்குவது போல..  அடக்குமுறையாளர்கள்.. ஆக்கிரமிப்பாளர்கள் பெண்களை இலக்காக்கி தமது அடக்குமுறைக் கொள்கைகளை மக்களிடம் திணித்து விடுகின்றனர்.


ஈழ விடுதலைப் போராட்டத்தில்.. தமிழ் சமூகத்தின் மத்தியில் நிலவிய பெண் அடிமைத்தனத்தை இரண்டு பெரும் பிரிவுகள் தமக்கு சாதமாக்கிக் கொண்டன. 


ஒன்று.. பெண்களுக்கு ஆசை காட்டி வாக்குச் சீட்டுப் பெறும் சனநாயகம் பேசிக் கழுத்தறுக்கும் கும்பல் அரசியல்வாதிகள்.

இரண்டாவது பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று புரட்சிகர உணர்ச்சியை கிளப்பி அவர்களை தங்கள் அடிமைகளாக்கிய முன்னாள் போராளிகளும் இன்னாள் ஒட்டுக்குழுக்களும்.


ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கம் என்ற பெயரில் உருவான புளொட் அமைப்பு  சமூகத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த பெண் அடிமைத்தனத்தைக் கையில் எடுத்து உணர்ச்சி பொங்க துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு ஈழப் பெண்களிடம் சமூக விடுதலைக்கான தேவை உணர்தலைத் செய்யத் தூண்டி. ஆனால் பின்னர் அந்தப் பெண்களை அந்த அமைப்பின் சுய தேவைகளுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தும் விட்டனர். கொன்றும் புதைத்துள்ளனர். இதில் பாலியல் குற்றங்கள் உள்ளடங்க பல அடங்கி இருந்தன. விடுலைப் போராட்டம் நடத்திறம் என்பதன் கீழ் அவை செய்யப்பட்டதால் இன்று வரை அந்த அநியாயங்கள் குறித்த நீதி விசாரணைகள் நடக்கவே இல்லை. உண்மைகளும் கேள்விக்கு பதிலுக்கு இடமின்றி குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன.


அதன் பின்னர் புளொட்டின் பாணியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணி (ஈபி ஆர் எல் எவ்) என்ற அமைப்பும் பெண்களை குறிவைத்து.. பெண்ணடிமைத் தனத்தை முதன்மைப்படுத்தி.. பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டி.. அவர்களையும் தமது சொந்த பாலியல் தேவைகள் உட்பட பலவற்றிற்கு இரையாக்கி மகிழ்ந்தனர். பின்னர் 1987 - 90 களில் இந்தியப் படைகளின் இச்சைக்கு அவர்களைக் கையளித்துவிட்டு ஓடி மறைந்து விட்டனர்.


இந்த நிலையில் இவர்களாலும் சமூகத்தாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண்களை நோக்கி அவர்களின் பாதுகாப்பை.. சமூக விடுதலையை அவர்ளே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நற்துணிவோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசிய தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெண்கள் அமைப்புக்களை தனது போராட்ட அமைப்புக்குள் உருவாக்கி அவர்களை சமூக.. இராணுவ.. அரசியல்.. பொருண்மிய அறிவூட்டலுடன் வளர்த்தெடுத்தார். அதன் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஊட்டினார்.


நடுநிசியில் கூட தட்டந் தனியே விறகு கட்டி வியாபாரம் செய்யும் நிலையில் இருந்து நிர்வாகக் கட்டமைப்பு உயர் அதிகாரிகள் நிலை வரை ஈழத்தில் குறிப்பாக புலிகளின் நிர்வாகப் பகுதியில் பெண்கள் எந்த சமூக அச்சுறுத்தலும் இன்றி இயங்க அவர் வழி சமைத்திருந்ததோடு விடுதலைப்புலிகளின் நிர்வாக காலமாகிய 1990 - 95 வரையான காலப்பகுதியில் பெண்கள் மீதான சமூக வன்முறை என்பது 10% க்கும் கீழாக இருந்தது. இதற்கான ஆதாரங்களாக அன்றைய காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வந்த புரன்லைன்.. இந்தியா ரூடே.. பத்திரிகையாளர்களும் மற்றவர்களும் எழுதிய குறிப்புகளை மக்கள் இதற்கு உதாமாநோக்கலாம்.


அதுமட்டுமன்றி பெண்களுக்கென்றே தனித்துவமான அமைப்புக்களை அவர் உருவாக்கி இருந்தார்.  சுதந்திரப்பறவைகள் என்ற செய்தி ஊடகமும் பெண்கள் சம்பந்தப்பட் சமூக ஆய்வுகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆக்கங்களை உள்ளடக்கி வெளி வந்து கொண்டிருந்தது. அதில் ஆச்சரியப்பட வைத்த அம்சம்.. விடுதலைப்புலிகளின் பெண் பிரிவினர் மேற்கொண்டிருந்த சமூக ஆய்வுகள் பற்றிய முடிவுகள் தான். சரியான சமூக அறிவியல் ஆய்வுப் பின்னணியோடு.. தரவு சேகரிப்போடு அவை வெளியிடப்பட்டிருந்தமை அன்றைய நெருக்கடியான காலக்கட்டத்திலும் அவர்கள் காட்டிய அந்த ஆய்வுத் திறன் இன்றும் வியக்க வைக்கிறது.


இப்படி சமூகத்திலும் சரி.. போர் முனையிலும் சரி பல்துறை திறமைசாலிகளாக.. தாமே தம் காலில் நின்று செயற்படக் கூடியதாக பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஊட்டி அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வளர்ந்தவர் பிரபாகரன்.


ஆனால்.. ஈழத்தில் 2009 இல் நடந்த ஈழப் பெருந்துயர்.. சிங்களம் கட்விழ்த்துவிட்மிழி அழிப்புக்குப் பின்னர்.. மீண்டும் தமிழ் பெண்கள் மீது அடக்குமுறையாளர்களும்.. ஆக்கிரமிப்பாளர்களும் தமது பாசிசக் கரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இவர்களோடு தமிழ் பேசும் காடையர்களும்.. முன்னாள் போராளி அமைப்புக்களாகிய இன்னாள் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து கொண்டு முன்னாள் தமிழீழ் விடுதலைக்காக.. தமிழரின் விடிவுக்காக உழைத்த பெண் போராளிகளை அச்சுறுத்தி அவர்களை தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கி வருவதோடு.. பிரதேசவாதம் கிளப்பி தமிழ் மக்களிடையே பிரிவினையூடு அவர்ளை இன அழிவுப் பாதைக்கு கொண்டு சென் கருணா என்கின்ற முரளிதரன் போன்றவர்கள் தங்கள் தப்பிப்பிற்கும்.. சுயலாப அரசியலுக்காகவும் உருவாக்கிய போலி அமைப்புக்களைச் சார்ந்த ஆயுததாரிகளும் தமிழ் பெண்களை சிங்களவர்கள் மத்தியில்.. சிங்களப் படைகள் மத்தியில் பாலியல் வியாபாரத்தின் மூலப்பொருளாக்கி ருகின்னர்.


இன்று.. இந்தக் கொடுமைகள் தாயக மண்ணில் உள்வர்ளால் மட்டும் தான் நிகழ்த்தப்டுகிறது என்று கூமுடியாத அவிற்கு.. இவற்றின் இன்னொரு பரிமானத்தை நாம் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களிடம் இருந்தும் காண நேரிடுகிறது. அது சற்று மாறுபாடானது.


துன்பத்தில் இருக்கும் அல்லது போரில் கணவரை.. குடும்பத்தை இழந்திருக்கும் பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளை நோக்கி உதவிக் கரம் நீட்டுகிறோம் என்ற போர்வையில் அவர்களை தமது நிதி வருவாயில் தங்க வைத்து.. தமது தேவைகளுக்கு ஏற்ப பாவிக்க முற்படுகின்றனர் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தனிநபர்களும்.


இவர்களின் செயற்பாடுகள் உள்ளூர் சுயலாப அரசியல் சக்திளுடன் மற்றும் சிங்கள இராணுவத்தினுடன் கூட்டுச் சேர்ந்து ஒன்றிணைந்து இருப்பதையும் இங்கு காண முடிகிறது. இப்படி ஒரு நிலை இந்திய அமைதிப்படை என்று நுழைந்த இந்தியப் படைகளின் ஈழ ஆக்கிரமிப்பின் போதும் இருந்தது. தமிழ் பெண்கள் திட்டமிட்ட இராணுவ வன்முறைக்கும் இராணுவத்தினரின் தேவைக்கும் பாவிக்கப்படும் நிலை அன்றும் இருந்தது. இந்தியப் படைகளால் நேரடியாகவும் அவர்களோடு இயங்கிய முன்னாள் போராளி அமைப்புக்களான ஒட்டுக்குழுக்களாலும் இன்னும் இராணுவத்திடம் தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்க விரும்பியவர்களாலும் தமிழ் பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.


ஆனால் 1987 - 90 இந்திய ஆக்கிரமிப்புப் காலப்பகுதி என்பது 2009 மேக்குப் பின்னரான நிலையில் இருந்தும் சிறிது மாறுபட்டது. அன்று விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மட்டுப்பட்டிருந்தனவே தவிர அதன் தலைமை பாதுகாக்கப்பட்டிருந்தது. அதனால் சமூக விரோதிகள் மத்தியிலும் ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறை இருந்தது. அது பின்னைய நாட்களில் உண்மையும் ஆனாது. விடுதலைப்புலிகள் மீளெழுச்சி அடைந்த போது இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்குள் சமூக விரோத மற்றும் குற்றச்செயல்களைச் செய்துவிட்டு.. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு ஒற்றுத் தகவல் வழங்கி அல்லது கொலைச் சேவகம் செய்து நீதியின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்களை புலிகள் தேடி அறிந்து தண்டனை வழங்கும் நிலை இருந்தது. அதனால் பெண்கள் மீதான குற்றச் செயல்களும் சரி.. இதர சமூக விரோதச் செயல்களும் சரி ஒரு எல்லைக்கு மேல் உயர்ந்து செல்ல முடியவில்லை.


ஆனால் 2009 க்குப் பின்னான நிலை அப்படியல்ல. தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவோ அங்கு நிகழும் ஆக்கிரமிப்புக்களை ஆக்கிரமிப்பாளனின் செயல்களை தட்டிக்கேட்கவோ.. நீதி மறுக்கப்பட்டு அவன் செய்து ரும் எல்லாம் நியாயம் என்று சொல்லப்படும் நிலையில்.. அவனுக்கு தண்டனை வழங்க யாருமற்ற நிலையில் தமிழ் சமூத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பது ஈழத்தீவில் கேள்விக்குறியாகியுள்ளது.


இந்த நிலையில் தான்.. தமிழ் பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் வெறியாட்டங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. இப்போ அவை பாலியல் வியாபாரமாகப் பெருகும் நிலையை எதிரியும் அவனோடு சேர்ந்து இயங்குபவர்களும் செய்ய விளைகின்றனர். அவர்களின் இந்த செயல்களால் ஆதாயம் பெற புலம்பெயர் தமிழர்களும் சிலர் முனைகின்றனர். அதில் இரண்டு விதமான ஆதாயங்களை அவர்கள் ஈட்ட விளைகின்றனர்.


1. நேரடியாக போர் உருவாக்கிய அந்தப் அபலைப் பெண்களை தாமும் தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது.


2. அந்தப் பெண்களின் துயரை வைத்து தமது போராட்ட விரோத கருத்தியலை அல்லது தமிழ் இன இருப்பைச் சொல்லும் தமிழ் தேசிய கருத்துக்ளுக்கு எதிர்ப்பை வலுப்படுத்திக் கொள்வது.


இந்த இரண்டையும் ஆக்கிரமிப்பாளனும் தான் செய்கிறான். அவனுக்கும் இதே தேவைகள் தான் உள்ளன.


மிழர்ளுக்குள் உள்ள இந்தீசக்திகள்.. பாதிக்கப்படுவது தமது சொந்த உடன்பிறப்புக்கள் என்ற தற்துணிவின்றி.. எதிர்காளாலும் துரோகிகளாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ளை.. மக்ளை பாதுகாக்க எழும் சாதாரண அடிப்படை மனித உணர்வின்றிக் கூட செயற்பட்டு வருகின்றனர்.


ந்தப் புலம்பெயர் மிழர்கள் மத்தியில் இன்னொரு விசித்திரமானவர்களையும் காண முடிகிறது. அவர்கள் நேரடியாக எதிலும் பங்களிக்காமல் போராட்ட சுமையில் இருந்தும் தம்மை புத்திசாலித்தனமாக விடுவித்துக் கொண்டு வெளிநாடுளில் தமது வாழ்க்கையை சீர்படுத்திக் கொண்டு.. சுய விளம்பரத்திற்கும்.. சுய புகழுக்கும்.. சுய முன்னிலைப்படுத்தலுக்கு இந்தப் பிரச்சனைகளை கையில் எடுப்பது.


இவர்களிடம் எந்த உருப்படியான செயற்திட்டங்களும் ஈழத்தில் பாதிக்கப்படும் அல்லது படப் போறவங்களை பாதுகாக்க இல்லை. இருந்தாலும் அப்படி இருப்பதாக ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொண்டு கருத்தியலை.. அறிக்கைகளை இணையத்திலும் ஊடகங்களிலும் அள்ளி வீசுவது. பின்னர் தமக்குள் தாமே அதை பாராட்டி மகிழ்ந்து கொள்வது அல்லது முன்னிலைப்படுத்திக் கொள்வது. இதனைத் தவிர இவர்கள் இதுவரை களத்தில் சாதித்தது எதுவும் இல்லை. இவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டமும் உள்ளது. அந்வாபிடிக்கும் கூட்த்திது நோக்குமும் இவர்களினதை ஒத்ததே.


நாமும்.. இதனை எழுதுவதன் மூலம் அதையே செய்கிறோம் என்ற நிலை வரலாம்.. ஆனால் இந்தப் பிரச்சனையில் இருந்தும் தாயகப் பெண்களை குறிப்பாக  ஈழ விடுதலைக்காகப் போராடிய முன்னாள் பெண்களை.. போராளிகளை.. ஒட்டுமொத்த தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு தெளிவான திட்டமிடலுக்கு உண்மையில் அவர்கள் மீது அக்கறை உள்ள அனைவரையும் அழைக்க விரும்புகிறோம்.


தனிநபர்களாக.. அல்லது சிறு குழுக்களாக நாம் பெரும் ஆக்கிரமிப்பாளனையும்.. அவனுக்கு அடிவருடி நிற்கும் கூலிகளையும் சமாளிக்க முடியாது. குறிப்பாக ஈழ மண்ணில் விடுதலைப்புலிகளின்... நீதியான செயற்பாட்டுக்கான நிகழ்தகவு அற்ற ஒரு நிலையில் அதற்கான சாத்தியம் குறைவு.


அந்த வகையில் இந்தப் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தலினூடு தான் அணுக வேண்டும். அப்படி அணுகி தீர்வு கிட்டுவதற்கிடையில் பாதி தமிழ் பெண்களின் வாழ்வும் போராளிகள் வாழ்வும் சீரழிக்கப்பட்டிருக்கும்.


எனவே இதற்கு உள்ளூர்.. வெளியூர் விழிப்புணர்வுடன் அமைந்த சமூக அக்கறையுள்ள மக்களின் குறிப்பாக மாணவ சமூகத்தின் பங்களிப்போடு ஒரு மீட்சித்திட்டம் அமுல்படுத்தப்படுவதோடு.. அவல நிலைக்கு உள்ளாகி உள்ள பெண்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சரியான சமூக மற்று உள வள ஆலோசனைகளும் உறுதிகளும் வழங்கி சாதாரண சமூக வாழ்வில் இணைய விடுதல் அவசியம் அல்லது பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு அவர்களை நகர்த்தி வந்து அவர்களே அவர்களின் பாதுகாப்பையும் வாழ்வையும் உறுதி செய்யத்தக்க பிரதேசங்களில் சரியான பாதுக்காப்பு ஒழுங்குகளின் கீழ் சுய மீட்சிக்கு உதவக் கூடிய நல்ல பொருண்மிய திட்டங்களை கொண்டு சென்று.. அல்லது பெண்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ள நாடுகளுக்கு அவர்களை நகர்த்தி.. வாழ வைக்க உதவ வேண்டும்.


இதில் பெண் உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் பெண்கள் அமைப்புக்களும் பெண்களும் இணைந்து கொள்வதோடு சர்வதேசப் பெண்கள் அமைப்புக்களுக்கும் இந்த நடவடிக்கையில் பங்கெடுக்க அழைப்பு விடுக்க வேண்டும். இதனை துரிதமாக ஒரு கட்டுமைப்புப்படுத்தி செயற்படுத்த புலம்பெயர் பெண்களும்.. தமிழக மற்றும் ஈழத்தமிழ் பெண்கள் அமைப்புக்களும் தாமே முன் வருதல் அவசியம். செய்வார்களா..???????????!


இதில் துரிதமாகச் செயற்பட்டால் மட்டுமே பல தமிழ்ப் பெண்களை சிங்கள ஆக்கிரமிப்பாளரிடம் இருந்தும் அவனுக்கு அடிவருடுபவர்களிடம் இருந்தும் காப்பாற்ற முடியும். இன்றேல்.. முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்களை சீரழித்துக் கொன்று ரசித்த கூட்டம்.. உயிரோட அவர்களை நிர்வாணப்படுத்தி சீரழித்து  அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களை அணுவணுவாகக் கொல்லும் நிலையையே பார்க்க நேரிடும். அதுமட்டுமன்றி பாலியல் வக்கிரம் பிடித்த சில தனிநபர்களின் ஆபாச எழுத்துக்களும் நடவடிக்கைகளுக்கும் அந்தப் பெண்கள் இலக்காக நேரிடலாம். அது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையே பாதிக்கும். அதன் பின்னர் வெட்டிக்கு ஆளையாள் திட்டி கட்டுரை.. கவிதை.. மற்றும் மாநாடு போட்டு எந்தப் பிரயோசனமும் இல்லை.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:07 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க