Saturday, February 02, 2013

வீட்டுப் பெயர் என்ன..?!

70954-13672-650-431-houses-for-sale-in-j

ஈழதேசத்தில் எங்கள்.. ஊரில.. எங்கள் மக்கள் கடின உழைப்பால்.. வீடு கட்டி.. குடிபுகுந்து.....மதில் கட்டி.. இல்ல சுற்று வேலி போட்டு.. அழகாக முற்றம் பெருக்கி.. பலவகை பூமரங்கள் நாட்டி.. அதற்கு காலையும் மாலையும் தண்ணி  பாய்ச்சி.. செழிப்புற.. வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடையில்.. சிங்கள பேரினவாத.. மேலாதிக்க வெறி எங்கள் தேசத்தையும் தானே பரிபாலிக்கனும் என்று விரும்ப.. நடந்த விரும்பத்தகாத திணிக்கப்பட்ட போர் விளைவுகளால்.. வீடிழந்து.. ஊரிழந்து.. நாடிழந்து.. இன்று நாடோடிகளாக உலகம் பூரா பரவி நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

இன்று எம் வாழ்க்கை அதன் பாரம்பரியம் இழந்து.. போக்கிடம் திணித்தவை மென்று..விழுங்கி.. ஏதோ நாங்களும்.. வாழிறம் என்று போய்க் கொண்டிருக்கிறது.

இப்ப எல்லாம் நாம்.. அதிகம்.. வீடு கட்டிறதில்ல.. பேய் குடியிருந்த வீடாகினும்.. நிலமாகினும்.. இலட்சக்கணக்கில் வங்கிக்கு கடனாய் கொட்டி வாங்கிறது தான் அதிகம். அதனால் வீடு கட்டும் அனுபவமும் அங்கில்ல.. அதில் சிந்திய வேர்வைத் துளிகளுக்கும்.. அடையாளம் இல்லை.

ஊரிலும்.. முந்தி போல இல்லை. இப்ப எல்லாம் ரெடிமேட். கல்லில இருந்து.. கதவு வரை எல்லாம் களவெடுத்தும் விக்கிறாங்களாம்.. தென்னிலங்கையில் இருந்து.. சிங்களவங்கள் கொண்டு வந்தும் விக்கிறாங்களாம்... நம்ம முதலாளிகள் இறக்குமதி செய்தும் விற்கிறீனமாம்.

இப்ப காசிருந்தால் போதும்.. 3 மாதத்தில வீடு கட்டிடலாமாம்.

ஆனால் முந்திக்காலத்தில்.. கல்லரிந்து.. தண்ணி ஊற்றி.. பல நாள் இறுக வைச்சு.. மரமரிந்து.. முதிரை.. தேக்கு..என்று.. யன்னல் செய்து... கதவு செய்து.. ஒரு வீடு கட்டி முடிய சில ஆண்டுகள் ஆகும் என்பார்கள். அப்படிக் கட்டிய வீடுகளுக்கு வாணிஸ்.. அழகு வர்ணங்கள் பூசி.. நல்ல நல்ல திரைச்சீலைகள் போட்டு.. அலங்கரித்து..சுற்றிவர பூமரங்கள் நாட்டி.. ஏன்.. அதற்கு பெயர் வைத்து எமது மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

வீடு கட்டியவரின் நினைவாக... அத்திவாரத்தில் கால் தடம்.. இல்ல கைத் தடம் வேற பதிப்பிப்பார்களாம். அத்திவாரம் போட்ட ஆண்டு.. திகதி..  வீடு கட்டி முடிந்த ஆண்டு திகதி.. என்றெல்லாம் பதிப்பிப்பார்களாம். அவையெல்லாம்  ஓர் நொடியில் குண்டுகளுக்கு நொருங்கிப் போன வரலாறுகளும் உண்டு.

சரி பழையதை மீட்டது போகட்டும்.. இப்ப விசயத்துக்கு வரும்.. உங்கள் வீட்டுப் பெயர் என்ன...??!

உங்கள் வீட்டின் பெயர் என்ன.. அப்படி என்றால்..... உங்கட சொந்தப் பெயரின்.. வீட்டுப் பெயரை கேட்கல்ல.. (அதையும் விரும்பினால் சொல்லலாம்) நீங்கள் பரம்பரை பரம்பரையாக அல்லது கஸ்டப்பட்டு.. வீடு கட்டிக்.. குடியிருந்த வீட்டின் பெயர் என்ன.. அல்லது கஸ்டப்பட்டு உழைச்சு வங்கிக்கு வட்டி வட்டியாக் கட்டி அல்லது.. எந்தக் கஸ்டமும் இல்லாம நேரடியாக் காசு கொடுத்து வாங்கின வீடு என்றாலும் பறுவாயில்ல.. அல்லது சீதனம் என்ற பெயரில் ஓசில வந்ததோ என்னவோ.. நீங்கள்.. வாழ்ந்த.. வாழும் வீடுகளுக்கு பெயர் இருந்தால் சொல்லுங்களேன்... கேட்பம்...இது தான் கேள்வி..!

எங்கட பரம்பரை வீட்டின் பெயர் (வேற வீடுகளும் இருந்தது.. பரம்பரை வீடு என்பது எங்கட அம்மம்மாட அம்மா ஆக்கள் எல்லாரும் வாழ்ந்த நிலத்தில் இருந்த வீடு.. மூன்று நாலு பரம்பரை வாழ்ந்த இடத்தில் இருந்த வீடு..) .. பூங்குழல்... 90 களில்..  குண்டுகள் வைத்து சிங்களப் படைகளால் தகர்க்கப்பட்டுவிட்டது. நாங்கள் விடுமுறைக்கு போய் விளையாடிய முற்றங்கள் அண்மையில் தானாம் மிதிவெடி.. free ஆக்கப்பட்டிருக்குது..!:icon_idea:

jaffna_house_bombed.jpg

உலக ஆதரவில்.. சிங்களப் போர் விட்ட வடுக்களாக எம் மூத்தோரின் உழைப்பும் வியர்வையும்..!

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:21 AM

3 மறுமொழி:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) செப்பியவை...

எங்கள் வீட்டுப் பெயர் "முருகனகம்".
சுவர் தான் மிகுதியாக உள்ளதாம்.

Sat Feb 02, 11:53:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

மறுபடியும் எழுவோம் என்ற வைராக்கியத்துடன் தலை குனிந்து இன்று அவமானங்களைச் சுமந்து வாழ்கின்றோம். உழைத்தவை ஆக்கிரமிப்பாளன் அபகரித்தான். அதனால் என்ன இன்னும் உழைக்கும் திரண் தமிழரிடம். வீறு கொண்டு எழும் திடம் தமிழரிடம். எனினும் ஒன்றைத் தவிர அது ஒற்றுமை.....!

Sat Feb 02, 02:57:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி உறவுகளே உங்கள் கருத்திற்கு. :)

Sat Feb 02, 09:27:00 PM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க