Friday, April 12, 2013

உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள்.


 40th-Ilakkiyach-Chanthippu-London-6th-7t

அண்மையில் இங்கிலாந்தின் தலைநகரில்.. லண்டனில் வழமை போல.. ஒரு சில பத்துப் பேர் கூடி 40 வது தமிழ் இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்தி முடித்துள்ளார்கள்.

இவர்கள் வழமையாகப் பேசும் விடயம்.. புலி எதிர்ப்பும்.. புலி வசைபாடலும்.. புலிக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் வகுப்பெடுப்பதுமாகும். ஆனால் இம்முறை அது இவற்றிற்கு மேலதிகமாக பேசிய விடயங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன.

அங்கு பேசிய.. புலி இலக்கியத்திற்கு அப்பால் சென்று... மற்றைய விடயங்கள் என்று பார்த்தால்..

1. சிறீலங்காவில் சிங்களத்தின் போர் வெற்றிக்குப் பின்னான மூவின நல்லிணக்கம். (இதனை போருக்கு முந்தி எத்தனையோ தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போனது வேறு கதை.)

2. சிறீலங்காவில் தமிழ் இன அழிப்புச் செய்யும்.. சிங்களவர்களோடு தமிழ் இலக்கியம்.. எப்படி சேர்ந்து வாழ்வது. 

(கடும்போக்கு மதவாத முஸ்லீம்களால் அரபு மயமாக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதிகள். இன்று தமிழீழத்தின் தென்பகுதியான.. இலங்கையின் கிழக்குப் பகுதியில்  இது முக்கிய சவாலாக எழுந்துள்ளது. இதனை வடக்கு நோக்கியும் பரப்பும் நடவடிக்கைகள் முள்ளிவாய்க்காலின் பின் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிங்களப் பேரினவாத குடியேற்றங்களுக்கு ஈடாக இவையும் தமிழர் நிலப்பறிப்பை மேற்கொள்கின்றன.)


3. சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் மதக் கடும்போக்கு அரசியல்.. மற்றும் தமிழர் நிலப்பறிப்பு சக்திகளோடு எப்படி "அஜெஸ்ட்" பண்ணி வாழ்வது.

4. இயன்றவரை முள்ளிவாய்க்கால் மற்றும் அதனைத் தொடர்ந்தான இனப்படுகொலைகளை புலி அழிப்பு என்ற கோசத்துக்குள் செருகி.. மன்னிப்பது மறப்பது.

5. சிறீலங்காவின் தற்போதைய சிங்கள அதிபரின் மகிந்த சிந்தனைக்கு.. தமிழ் மக்களை இன அழிப்புச் செய்யும் கொள்கைக்கு.. தமிழால் ஊக்கமும்... விருதும் வழங்குவது.

6. தமிழ் மக்களை வேரறுக்கும் தமிழ் ஒட்டுக்குழு ( காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களோடு சேர்ந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை அடகு வைத்து.. ஆயுத மற்றும் பாசிச அரசியல் கொள்கைகளோடு தமிழினப் படுகொலையில் பங்கெடுப்பதே இந்த தமிழ் ஒட்டுக்குழுக்களின் முக்கிய நோக்கம். இதன் மூலம் கிடைக்கப் பெறும் எதிரி வழங்கும் கூலியில்... அதில் சிலருக்கு அமைச்சுப் பதவிகளும் சிலருக்கு மாகாண சபைகளும்.. சிலருக்கு உள்ளூராட்சி சபைகளில் அதிகாரமும் பலருக்கு வியாபார அனுமதிகளும்.. இன்னும் சிலருக்கு சமூக விரோதச் செயல்களுக்கும் சட்டத்திற்குப் பிறம்பான செயல்களும் செய்ய வழங்கப்படும் அனுமதி.) பாசிச நிலைப்பாடுகளுக்கு எதிர்ப்பிலக்கியம் என்ற சுய அந்தஸ்தை வழங்குவதோடு தமக்குத் தாமே இலக்கியவாதிகள் என்று முடிசூட்டிக் கொள்வது.

7. தமிழர்களின் வாழ்வுரிமைக்கான இருப்புக்கான தப்பிப்பிழைப்புக்கான அவலக்  குரல்களையும் உரிமைக் குரல்களையும் இனவாதம் என்று முழங்கித் தள்ளி பேரினவாதத்தின் நோக்கங்களிற்கு ஏற்ப தமிழர்களின் உரிமைக் குரலை.. நலிவடையச் செய்கின்றமை.

இந்த ஆபத்தான.. ஒட்டுமொத்த எதிர்கால.. தமிழ் இலக்கியத்தையே கேள்விக்குறியாக்கக் கூடிய..  நிலைப்பாடுகள் குறித்து ஒரு சிறு கண்ணோட்டத்தை செலுத்துவது தமிழ் இலக்கிய உலகிற்கு நன்று என்று நினைக்கிறோம்...

யாழ்ப்பாணம் அல்ல. வடக்கு முஸ்லீம்களின் அன்றைய வெளியேற்றம் நியாயத்தின் அடிப்படையில் அவர்களுக்குப் பாதகம் அல்ல... என்பதை அந்த மண்ணில் வாழ்ந்த எந்த ஒரு பொதுமகனின் பார்வையிலும் இருந்து தவிர்க்க முடியாது. முஸ்லீம்களிற்கும் இது புரியும்.

மூதூரிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரச ஆதரவோடு..முஸ்லீம் குழுக்கள் அவிழ்த்துவிட்ட வன்முறைகளின் பெருக்கத்தை தடுக்கவும்.. இரு இனங்களையும் மோதவிட்டு சிங்கள அரசு ஆதாயம் தேடுவதை தடுக்கவும் அந்த நடவடிக்கை பெரிதும் உதவி இருந்தது.

முஸ்லீம் கடும்போக்கு மதவாதிகளால் அது திரிக்கப்பட்டு புலிகள் மீதான மோசமான விமர்சனமாக அது முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் செய்ய வழி இன்றி இருந்த அஸ்ரப் போன்றவர்களிற்கு அதைப் பாசிசமாகக் காட்டி ஒரு கட்சி வளர்க்கும் நோக்கம் இருந்தது. அந்த அடிப்படையில் பிறந்ததே முஸ்லீம் காங்கிரஸ். இன்று கூட அது தமிழ் மக்களின் அரசியலோடு ஒட்டிப் போகும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. வெளிக்காட்டியதும் இல்லை. இதே தான் அன்று யாழ்ப்பாணத்திலும் இருந்தது.

ஈழத்தில் முஸ்லீம்கள் தங்களை தனி ஒரு துருவமாக்கி வைத்துக் கொண்டு மற்றைய இனங்கள் நடுவே ஒட்டுண்ணி வாழ்க்கை வாழலாம் என்று தொடர்ந்து செயற்பட முடியாது. மற்றைய இனங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதும்.. முஸ்லீம்கள் ஆதாயம் பெறக் கூடியதுமான ஒரு கூட்டு சமூக வாழ்விற்கு அவர்கள் தங்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லீம்களுக்காக கூவும் ஒட்ழுக்குழுக்கள்.. அவர்களின் வரலாற்று நெடுகிலும் அவர்களின் அமைப்பில் முஸ்லீம்களுக்கு இடமளித்ததில்லை. புலிகள் முஸ்லீம்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை எந்த ஒரு அமைப்பும் அளித்தது கிடையாது. ஆனால் இன்று நன்றி கெட்டதனமாக புலிகளைச் சார்ந்த சிலரே.. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஒரு ஆராய்ந்தலும் அற்ற கட்டுரைகள் வரைந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியப் படைகள் காலத்தில்.. முஸ்லீம் இளைஞர்களை விரட்டி விரட்டி துன்புறுத்தியவர்கள் இன்று..  முஸ்லீம்களுக்காக.. யாழ்ப்பாண வெளியேற்றம் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் என்ன நினைத்துக் கொண்டார்கள். இலக்கியம் என்ற போர்வையில் தங்களின் சுத்த பித்தலாட்டங்களை எல்லாம்.. மக்கள் மதிப்பற்ற அரசியலாக தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்றா..! இவற்றை ஏற்றுக் கொள்ள மக்கள் தயார் நிலை.

இந்த போலி இலக்கியவாதிகள் ஒன்றில் வெளிப்படையாக ஒட்டுக்குழு அரசியல் செய்ய வேண்டும் இன்றேல்.. தமிழ் கூறும் உலகின் நடைமுறையில் இருந்தும் விலகி தமக்கான ஒற்றையடிப் பாதையில் பயணிக்க வேண்டும். நிச்சயம் இவர்களை மக்கள் ஒருபோதும் இலக்கியவாதிகள் என்று கருதமாட்டார்கள் என்பதற்கு இவர்களின் நிகழ்வுகளிற்கு வரும் மக்களின் பங்களிப்பே சான்று..!

முஸ்லீம்களின் வடக்கு இடம்பெயர்வு இப்போ 23 வருடங்களாக பேசு பொருளாக உள்ளது. ஆனால் இதே முஸ்லீம்களால் தமிழ் மக்கள் 1986 இல் இருந்து தொடர்ச்சியாக இடம்பெயரச் செய்யப்படுவதோடு.. தமிழ் மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து எந்த முஸ்லீமும் பேசியதில்லை. ஒட்டுக்குழு இலக்கியவாதிகளும் அதனை முன்னிறுத்தியதில்லை. இன்று சிங்களத்தில் ஒரு பொதுபல சேனை தோன்றக் காரணம்.. முஸ்லீம்களின் கடும்போக்கு மதவாதம் என்றால் அது மிகையல்ல. இப்படியான நிலைப்பாடுகளை எவரும் எதிர்ப்பிலக்கியம் என்று படைப்பதில்லை. கல்முனையில் 250 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தக குடும்பங்களை சார்ந்த மக்கள்.. வெட்டியும் எரித்தும் கொல்லபட்டபோது.. அதை மறைக்கத் தெரிந்த முஸ்லீம்கள் காத்தான்குடிப் படுகொலையை மட்டும் முன்னிறுத்துவது மட்டும் நீதியான செயலா..???!தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மூதூர்.. கிண்ணியா.. போன்ற இடங்கள் இன்று முழு  முஸ்லீம் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன. அதே நிலை வடக்கு மன்னாரிலும்.. இன்று முல்லை முள்ளியவளையிலும் தோற்றிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடாவடி முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் அணுகுமுறையோடு. இதை எவர் தட்டிக் கேட்கிறார்கள்..???!கூட்டுச் சமூக முறை இருந்த காத்தான்குடி இன்று தனி முஸ்லீம் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. ஏன் ஒரு அரபுப் பிரதேசம் போல உள்ளது.

சனத்தொகை அடர்த்தி நிறைந்த வடக்கில் ஒரு பல்கலைக்கழகத்துள் மூவின மக்களும் உள்வாங்கப்படும் வேளை.. கிழக்கில்.. இரண்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் கூடிய அளவு முஸ்லீம்கள் உள்வாங்கப்படுகின்றனர். இந்த.. சமநிலைகளற்ற வளப் பாகுபாடு பற்றி எவர் பேசுகிறார்கள்..??! யாரும் இல்லை. கதைப்பது எல்லாம்.. யாழ்ப்பாண இடம்பெயர்வும்.. காத்தான்குடி படுகொலையும்..??!


[மத அடிப்படையில்.. பச்சை மயமாகி உள்ள முஸ்லீம் மாணவர்களை அதிகம் உள்வாங்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம். கிழக்குப் பல்கலைக்கழகம் வடக்கு யாழ் பல்கலைக்கழகத்திலும் கணிசமானவர்கள் முஸ்லீம்களாவர். சிங்களவர்களும் உளர். இலங்கையில்..தமிழர் மாணவர்கள் போதிய அளவிற்கு கல்வி கற்க என்று ஒரு பல்கலைக்கழகம் கிடையாது.]

முள்ளிவாய்க்காலை வெறும் புலி அழிப்பாக காட்ட நினைக்கும்.. சிங்களத்தின் நிலைப்பாட்டை அடியொற்றி நிற்கும்.. ஒழுக்குழு.. மற்றும் முஸ்லீம் பாசிசவாதத்திற்கு தமிழ் மக்களின்.. இன இருப்புக்கான நிலைப்பாடுகள்.. இனவாதமாக தெரிவதில்.. ஆச்சரியமில்லை.

மேலும்.... இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லீம் இலக்கியவாதிகள் என்போரும் சரி.. எவருமே சரி... கல்முனையில் கூட வாழ்ந்த தமிழ் மக்களை கூட்டுப் படுகொலை செய்ததை இன்று வரை இலக்கியமாகப் பதிவு செய்ததில்லை. லங்கைத் தீவின் வரலாற்றில் ஒரு நகரில் இருந்து ஒரு இன மக்கள் மிகக் குறுகிய காலத்தில் துடைத்தழித்த சம்பவமாக அது பார்க்கப்படுகிறது. அதில் சிங்கள இராணுவத்தோடு முஸ்லீம் வர்த்தக ரவுடிக் கும்பல்களும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

The town of Kalmunai was allegedly subjected to intense shelling by the Army. As a result, the LTTE had to withdraw from the town. Subsequently, the massacre began on June 20, 1990.[2] An account of one part of the alleged massacre claimed that Sri Lankan Army personnel took position at Kalmunai Rest House junction where Tamil civilians were allegedly kidnapped. The abducted were then allegedly burned behind the shops of Muslim businessmen. While the death toll is disputed, a member of Sri Lanka's parliament alleged that more than 160 people were killed.[1] However, the UTHR alleged that the number of people who died or disappeared was in excess 1000 and alleged that over 250 were killed.[2][3] It further alleged that this massacre was the "largest bout of slaughter a single town in the island had witnessed in such a short time".

http://en.wikipedia....lmunai_massacre

அதேபோல்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றி ஒரு மனிதாபிமான கண்ணோட்டத்தைக் கூட முஸ்லீம்கள் இதுவரை பதிவு செய்ததில்லை. மாறாக போரால் பாதிக்கப்பட்டு நலிந்து நிற்கும்.. தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க மல்லுக்கட்டி நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு மனநிலை கொண்ட சமூகத்தோடு எந்த நாகரிகமான மனித இனம் கூட்டுச் சேர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது..???! இவர்களோடு எப்படி ஒன்றுசேர்ந்து தமிழ் இலக்கியம் படைக்க முடியும்...??! இது தான் இன்று இலங்கையில் முஸ்லீம்கள் தமிழ் மக்களோடு காட்டி நிற்கும் நேசத்திற்கான அடையாளமாகவும் உள்ளது.

இதற்கு முஸ்லீம் இலக்கியவாதிகள் முஸ்லீம் காங்கிரஸ்வாதிகள் காத்தான்குடி படுகொலை நீலிக்கண்ணீர் வாதிகள்.. யாழ்ப்பாண இடம்பெயர்வு கருசணையாளர்கள்.. பதில் சொல்வார்களா..??!

அடிப்படையில்.. இலக்கியம் என்பது.. காலக் கண்ணாடி. வெறுமனவே 1990 இல் நக்கூரமிட்டு நிற்பது அல்ல. அதுவும் புலிகளைச் சுற்றி மட்டும் பின்னப்படுவதல்ல இலக்கியம்..! மக்களை மக்களின் துயரை நெருக்கடியை வாழ்வியலை நோக்கி பின்னப்படுவதே இலக்கியம். முஸ்லீம்கள் பற்றிப் பேச இலக்கியம் உதவுது என்றால்.. அங்கே ஏன்.. தமிழ் மக்கள் முஸ்லீம்களால் பட்ட அவஸ்தைகளைப் பற்றிப் பேச அந்த இலக்கியங்கள் இடம் கொடுப்பதில்லை...??!

இதில் இருந்து தெரிவது என்ன..???!

சிலர் இனவாதத்திற்கும் உரிமைக் குரலுக்கும் இடையில் வித்தியாசம் அறியாமல்.. தம்மை இலக்கியவாதிகள் என்று சுயபிரகடனம் செய்து திரிகின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.. தமிழ் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக பாதுகாப்புக்காக இருப்பிற்காக முன்னிறுத்தும் குரலை இனவாதம் என்று கூறுவார்களாக இருந்தால்.. அந்த இலக்கியவாதிகள்.. சொந்த இன அழிவிற்கு முண்டுகொடுத்து நிற்கும்.. சுத்தப் பாசிசவாதிகள் என்ற முடிவுக்கு மிக இலகுவாக வரலாம்..!

இலக்கியம் என்பது பக்கச்சார்பானதல்ல. காலத்தின்.. கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது 1990 க்குள் மட்டும் சுழலக் கூடாது. வெறுமனவே புலிகளின்.. தமிழ் மக்களின்..  தவறுகளை மட்டும் பற்றிச் சுழலக் கூடாது. அந்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணிகள் குறித்தும் பேச வேண்டும். அவை.. பதியப்பட வேண்டும். மாற்றங்கள் எல்லா சமூகங்களிடமும் வர வேண்டும். தமிழ் மக்களிடம் மட்டும் அதனை எதிர்பார்க்கக் கூடாது.

புலிகள்.. இன்றிய இந்தக் கால இடைவெளியில்.. ஒட்டுக்குழுக்களும்.. சில முஸ்லீம் மத அடிப்படைவாதிகளும்.. தமது பிரச்சார வடிவமாக இலக்கியத்தை பயன்படுத்த நினைக்கிறார்களே தவிர... இவர்களின் இந்த நிகழ்வுகள் தமிழுக்கும்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆற்றிய காத்திரமான பங்களிப்பு என்பது பூச்சியமாகும்..! :icon_idea: 

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:46 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க