Monday, April 08, 2013

தமிழீழப் பிரகடனமும் Exile government உம்..!!

 

நடு நிசி தாண்டி.. நித்திரையின் நடுவே.. கனவில் ஒரே உற்சாகம்.. சில ஐடியாக்கள் கனவில் உதித்திருந்தது... கனவில் கண்டது நனவானால்.. இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பதால்... இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்..

காலனித்துவத்திற்கு முந்திய எமது ஆட்சிய அதிகாரங்களின் இருப்புக்கான ஆதாரங்கள்..

காலனித்துவத்தின் போதான எமது நில ஆக்கிரமிப்புக்கான ஆதாரங்கள்..

காலனித்துவம் கையளித்த அதிகார மையம் சிங்களத்திடம் போய் சேர்ந்ததற்கான ஆதாரங்கள்..

கடந்த காலங்களில்.. சிங்களம் இனப்படுகொலைகள் மூலம்.. கலவரங்கள் மூலம்.. எமது அரசியல் மற்றும் வாழ்வுரிமையை பறித்த துயரம்...

தனிச் சிங்களச் சட்டம்.. சிறீ திணிப்புகள்.

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட அரசியல் சமூக.. பொருண்மியப் புறக்கணிப்புக்கள்.

சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தில் முக்கியம் பெற முடியாத அவர்களின் சம அரசியல்  வாழ்வுரிமையை உறுதிப்படுத்த முடியாத அரசியல் அமைப்பு.

சிங்கள அரசின் நீதித்துறையின்  ஊடாக சிறுபான்மையினருக்கு சரியான நீதி கிடைக்க உத்தரவாதமின்மை.

சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதோடு அவர்களின் வாழ்விடங்களும்... மத
உரிமைகளும்.. மொழி உரிமைகளும் கலாசாரங்களும் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றமை.

அமைதி வழிப் பேச்சுக்களும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டமையும் அமுலாக்கல் இன்றி செத்துப் போனமையும்.

விடுதலைப் போராட்டக் கருக்கொள்ளல்.

தனித் தமிழீழத்திற்கு 1977 இல் மக்கள் வழங்கிய ஜனநாயக தேர்தல் மூலமான அங்கீகாரம்.

விடுதலைப் போராட்டம் தந்த இனங்காட்டிய de facto state இன் எல்லைகளும் மறைமுகமான சர்வதேச அங்கீகாரங்களும்.

வடக்குக் கிழக்கு மாகாண சபை செய்த.. தமிழீழத் தனியரசுக்கான 1990 பிரகடனம்.

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான மக்கள் ஆதரவும் இருப்பும்.

நாடு கடந்த தமிழீழ அரசு கொண்டுள்ள தமிழீழ சாசனம்.

தமிழகத்தில் தனித் தமிழீழத்தை ஆதரிக்கும் சட்டமன்ற தீர்மானங்களும் மக்களும்.

மலேசியாவில் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மக்கள்.

உலக அளவில் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மக்கள்.

தனியான கொடி. தனியான மொழி.

தனியான தேசிய அடையாளங்கள்.

தனியான தேசிய இன உரிமத்துக்கான அடையாளம்.

பூர்வீக நிலத்திற்கான வரலாறுகள்.

தொடரும் திட்டமிட்ட இன அழிப்புகளும்.. போர்க்குற்றங்களும்.. மனிதப் பேரிடர்களும்.

தொடரும் மக்களின் உள்நாட்டு வெளிநாட்டு இடம்பெயர்வுகள்.

தொடரும்.. நில ஆக்கிரமிப்புக்களும் இராணுவ பரிபாலனங்களும்.

தொடரும் சிங்கள பெளத்த பேரினவாத தீவிரவாதமும் அதன் பால் சிறுபான்மையினர் சந்திக்கும் நெருக்கடிகளும்.

தொடரும் அரச ஆதரவு பெரும்பான்மை இன கருத்தியல் திணிப்புக்கள்.

தொடரும் மனித உரிமை மீறல்களும்.. நீதிப் புறக்கணிப்புகளும்.

தொடரும் அரசியல்  உரிமைக்கான புறக்கணிப்புக்கள்.

தொடரும் அரச ஆதரவு துணை இராணுவக்குழுக்கள் சார்ந்த அரசியலும்.. நிர்வாகமும்.

மக்களின் ஜனநாயக உரிமைகள் ஊடக சுதந்திரம் உட்பட ஏனையவை பறிக்கப்பட்டு வருகின்றமை.

தனித் தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடிய நாடுகளின் இருப்பு.

தனித் தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடிய சர்வதேச புகழ்பெற்ற scholars இருப்பு.

தனித் தமிழீழத்தை வேண்டும்.. தமிழ் அரசியல் புத்திசீவிகளின் இருப்பு.

சர்வதேசத்தின் சட்டப் பிரமானங்களுக்கு உட்பட்டு ஒரு ஆட்சி அமைக்கக் கூடிய கடப்பாட்டை உணர்ந்துள்ள மக்கள் இனம்.

கடந்த கால சர்வதேச மத்தியஸ்தங்களுடனான பேச்சுக்களும் அவற்றில் வலியுறுத்தப்பட்ட விடயங்களும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பால் மக்கள் செலுத்திய உயிர் விலைகளும்.. அவர்கள் அதன்பால் தன்னிச்சையாகக் கொண்டிருந்த பற்றுறுதியும்.

இப்படி பல காரணிகளின் அடிப்படையில்..

எமக்குரிய நிலத்துடன் நாம்... சுதந்திரமாக வாழக் கூடிய நிலைக்கு.. ஒரு தீர்வை பெற்றுத்தர சர்வதேசத்திற்கு ஒரு கால அவகாசம் வழங்கி அதற்குள் அது சிறீலங்கா அரசிற்கு வலுவான அழுத்தம் கொடுத்து தமிழ் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய தீர்வை பெற்றுத் தர வேண்டிக் கொள்வது.

அப்படி இல்லாத பட்சத்தில் தனித் தமிழீழ நாட்டைப் பிரகடனம் செய்வதோடு.. அதே நேரத்தில் அதற்கான ஒரு Exile government ஐ அறிவிப்பதும்.. இது நாம் எதிர்காலத்தில் சர்வதேச பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ பரிமானங்களின் மாற்றங்களோடு எமது நிலத்தில் எமக்கான தேசத்தை மீட்க வகை செய்யலாம் இல்லையா..??! இது குறித்து உங்கள் கருத்து என்ன...???! இதில் எவ்வளவு சாத்தியப்பாடுகள் உள்ளன..??!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:42 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க