Wednesday, January 29, 2014

அங்கிரி பேர்ட் முதல் பேஸ்புக் வரை அமெரிக்கா உளவு.

_72599882_spying.png

பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட.. அங்கிரி பேர்ட் என்ற கவர்ச்சிகர.. மற்றும் இலகு ரக விளையாட்டு அப்ஸ் மூலமும்.. பேஸ்புக்.. யுரியுப் போன்ற சமூகவலை.. இணைய வலையமைப்புக்கள் மூலமும்..  அமெரிக்காவும் பிரிட்டனும் உலகையே.. ஒவ்வொரு நபராக.. உளவு பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி கசிந்துள்ளது.

இச்செய்திக் கசிவின் பின்.. இந்த மென்பொருட்கள்.. உண்மையான.. விளையாட்டு.. சமூக மென்பொருட்களா.. வலையமைப்புக்களா.. அல்லது எம்மை அமெரிக்காவும் பிரிட்டனும் உளவுபார்க்கும்.. மென்பொருட்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதோடு.. வெளியில் வராமல்.. இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் இணையம் வழி.. அமெரிக்கா உலகை ஊடுருவி விட்டுள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது அபாயகரமான காட்சிகளே எண்ணத்தில் விரிகின்றன.

_72572454_youtube.jpg

இணையம் என்பதே அமெரிக்க இராணுவத்திற்கு என்று பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று தான். அதன் மூலம் அமெரிக்கா.. இராணுவ நலன்களை பேணி வந்தது. சோவியத் உடைவுக்குப் பின் அமெரிக்காவுக்கு நேரடி எதிரி இல்லை என்றான நிலையில்.. இணையத்தை வர்த்தக மயப்படுத்தல் என்பதன் கீழ்.. உலகெங்கும் வலையாக விரித்து வைத்தது அமெரிக்கா.

உலக மக்களும்.. நவீனத்துவத்தின் ஈர்ப்பில் மயங்கி.. இணையம் என்றால்.. ஏதோ.. அவர்களை இரட்சிக்க வந்த தொழில்நுட்பம் என்று அதன் ஈர்ப்பில்.. கவர்ச்சியில் விழுந்தடித்து அதன் பின் இழுபட்டுச் செல்ல... அதனை தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் உலக உளவாளிகள்.

இன்று உலகில் உள்ள இணையப் பாவனையாளர்கள், நவீன இலத்திரனியல்... கணணி.. ராப்லெட்..மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் பாவிப்பவர்கள் என்று அனைவரையும் இலகுவில் உளவு பார்க்கக் கூடிய வசதியை அமெரிக்கா.. மற்றும் பிரிட்டன் போன்ற ஏகாதபத்திய நாடுகள் கொண்டிருப்பதோடு.. அவற்றினைக் கொண்டு தமக்கு சவாலாக உள்ள வர்த்தகங்களையும் பொருண்மியங்களையும் கட்டுப்படுத்துவதோடு மேலும்.. அரசியல் சார்ந்து தமக்கு ஒவ்வாத நாடுகளையும் அரசுகளையும்.. போராளி அமைப்புக்களையும் நசுக்க.. தங்கள் கட்டுப்பாடுகளை உலகெங்கும் விரிவாக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிக்கின்றன.

இது.. அமெரிக்கா இணைய வழி.. உலகை தன் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்துள்ளதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே.. அங்கிரி பேர்ட்.. அமெரிக்காவிற்காக உளவு பார்த்த செய்தி கசிந்ததை அடுத்து.. அதன் இணையத்தளம் மீது.. சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..!

இன்றைய யுத்தம்.. களத்தில் நாடுகளின் இராணுவங்களிடையே நடைப்பதைக் காட்டிலும்.. இணையத்தில் தான்  மெளனமாக.. எல்லை தாண்டியும் தாண்டாமலும்... தீவிரமாக நடந்து வருகிறது.!

இவ்வளவு உளவு வேலைகள் மத்தியிலும் அமெரிக்காவிற்கு.. சவாலாகவும் இந்த இணையம் மாறி வரும் சூழலும் உள்ளது.

அந்த வகையில்.. இணையமும்.. இதர மென்பொருட்களும்.. இலத்திரனியல் சாதனங்களும்.. அவதானமாக மக்களால் கையாளப்பட வேண்டியதோடு.. போராளிகள்.. அமைப்புக்கள் இணையம் வழி .. கையடக்கத் தொலைபேசிகள் வழி.. தகவல்களை பரிமாறுவது.. சேமிப்பது என்பன ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும்... என்பதை உணர்ந்து கொள்ளல் அவசியம்.

தமிழீழத்தில் வன்னியில்.. தமிழ்செல்வன் அண்ணாவின் இருப்பிடத்தையும் அவர் பாவித்த கையடக்கத்தொலைபேசி மூலமே கண்டறிந்து.. நவீன..ஒக்சிசன் உறிஞ்சி.. தேமோபாரிக் குண்டுகள் வீசி அவரை.. அமெரிக்க.. இஸ்ரேல்.. ஆதரவோடு சிறீலங்கா கொலை செய்து.. தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்த.. அமைதி பேச்சுக்கு முடிவு கட்டி.. பெரும் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது திணித்தார்கள் என்பதும்.. இங்கு நினைவு கூறத்தக்கது.

அதுமட்டுமன்றி துனிசியா.. எகிப்த்.. லிபியா.. சிரியா.. என்று அமெரிக்காவிற்கு வேண்டாத அரசுத் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்களையும் அமெரிக்கா.. பேஸ்புக்.. சமூக வலையமைப்பை பாவித்து முன்னெடுக்க தூண்டியமை இங்கு கவனத்தில் கொள்ளப்படுதல் நன்று.

உசாத்துணை:

Angry Birds website hacked after NSA-GCHQ leaks

http://www.bbc.co.uk/news/technology-25949341

US and British spies 'get personal data from Angry Birds'

http://www.bbc.co.uk/news/world-us-canada-25922569

Snowden leaks: GCHQ 'spied on Facebook and YouTube'

http://www.bbc.co.uk/news/technology-25927844


ஆக்கம்: நெடுக்ஸ்: நன்றி யாழ்.

Labels: , , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:18 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க