Tuesday, October 21, 2014

ஹலோவின் (Halloween) Vs தீபாவளி (Deepavali - Diwali)



மேற்குநாடுகளில் கொண்டாடப்படும்.. இருள் (பேய்) விலக்கும் பண்டிகையான ஹலோவினின் (Halloween)  இன்னொரு கீழத்தேய வடிவம் தான் தீப ஒளித் திருநாள். இரண்டும் ஒரே மாதத்தில்.. இருள் அதிகம் கவ்வும் மார்கழிக் (கார்) காலங்களில் வருவதும் இங்கு கூர்ந்து நோக்கப்பட வேண்டியது ஆகும்.

அந்த இருள் நீங்க.. ஒளி ஏற்றும் தீப ஒளித் திருநாளே.. தீப ஒளி.. தீபாவளி என்று மருவி வந்திருக்க வேண்டும்.



அதனை பிற்காலத்தில்.. தமிழர் விரோத ஆக்கிரமிப்புச் சக்திகள்.. உலகாண்ட தமிழர்களை எல்லாம் அரக்கர்களாக சித்தரித்து அவர்களை போரில் வென்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் விசேட தினங்களில் காரணம் சொல்லி.. இன்று அவை எல்லாம்.. இப்படி திருநாள் ஆகியுள்ளது. நாமே நம்மினத்தின் அழிவை அதன் உட்பொருள் அறியாது..மகிழ்ச்சியோடு அசுரக் கதை பேசி.. கொண்டாடிக் கொண்டும் இருக்கிறோம்.

இன்று சிங்களவர்கள் முன்னெடுக்கும்.. முள்ளிவாய்க்கால் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் கூட காலப்போக்கில்.. மே திருநாள் என்று எம்மவராலேயே கொண்டாட்டப்படும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!!

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:35 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க