Thursday, May 07, 2015

கம்பன் கழகம்.. சிங்கள பெளத்த பேரினவாத எடுபிடி அரசியல் பிக்காலிக் கழகம் - சுயநாமம் கம்பவாருதி சுயபிரகடனம்.


அண்மையில் தமிழின இனப்படுகொலை சிறீலங்கா சிங்கள அரசில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவை (தற்போதைய சிறீலங்காவின் சிங்கள ஜனாதிபதி) கொழும்பு கம்பன் கழக விழாவில் சிம்மாசனம் ஏற்றி மகிழ்ந்த சுயநாமம் கம்ப வாருதி என்ற கொடுங்கொலையாளி டக்கிளஸ் துதிபாடி.. மேற்படி காவிக் குடுமி ஜெயராஜ்.. அந்த நிகழ்வுக்கு எதிர்வினையாற்றிய புலம்பெயர் இனமானத் தமிழர்களை கீழ் கண்டவாறு ஒரு வாங்கு வாங்கி இருக்கிறார்.

அது வருமாறு..

//---------------------
வாரிதியாரின் வசைபாடலுக்கு வருவோம் -

1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.

2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.

3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும். 

4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும். 

5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல. 


- இப்படி ஜே.கே.யிற்கு எழுதிய கடித்தில் தொடர்ந்து புலம்பித்தள்ளியிருக்கிறார் மனுசன். மொத்தத்தில், ஜே.கே.யிற்கான ஒற்றை பதில் கடிதத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் செருப்பால் அடித்திருக்கிறார் வாரிதியார்.

http://malaimaram.blogspot.com.au/2015/05/blog-post_6.html  .......................//

இதற்கான மக்களின் எதிர்வினைகள்..

இந்தக் குடுமிக்கும் அதன் பரிவாரங்களுக்கும்.. கூடிய முக்கியத்துவம் கொடுத்து அதுங்களுக்கு தலைக்கணத்தைக் கூட்டுறோமோன்னு நினைக்கத் தோணுது. இதுங்க திருந்தாதுங்க. அதுங்க..சிங்கள பெளத்த தேசத்தில்.. நல்லா கால் பரப்பிட்டுதுங்க. பிச்சைப் பாத்திரம் நல்லா நிரம்புது. அது நிரம்பும் வரை.. அதுங்க இப்படி தினாவெட்டா பேசத்தான் செய்யுங்க.

கம்பனின் வாரிசு.. ஒரு காலத்தில்.. புலம்பெயர் தமிழ் சிறுமிகளின் அபார உடல் வளர்ச்சி குறித்தும்.. பொங்கி எழுந்திருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவனுங்களுக்கு காவி கம்பன் ஒரு கேடு. அவருக்கு ஒரு சில வர்த்தக முதலைகள் எடுபிடி. (யாழில் இருந்து)


சுயநாமம் கம்பவாருதி எனி இராமாயணத்தை விட்டிட்டு.. அரசியல் பேசுவாராம். ஏனெனில் சிங்களச் சிறீலங்காவில் சன நாய் அகம் பூத்துக் குலுங்குதாம். புலிகள் இருக்கேக்க.. கம்பன் கழகம்.. இலக்கிய கழகம். புலிகள் இல்லாதப்போ.. கம்பன் கழகம்.. கொலைக்காரனை.. இனப்படுகொலையாளரை துதிபாடும் அரசியல் பிக்காலிக் கழகம். இந்தப் பச்சோந்திகளுக்கு காவி வேற. அதுங்களுக்கு வால்பிடிகள் வேற. இனத்தை மொழியை காட்டிக்கொடுத்து.. வித்துப் பிழைக்கும்.. இந்த ஈனப்பிழைப்பை விட... இதுங்க வேறு ஏதேனும் செய்யலாம். (முகநூல்)

==============================

 சரி எல்லாம் இருக்கட்டும்.. கம்பவாருதி குடுமி ஜெயராஜ்.. என்ன கொழும்பிலேயே பிறந்து.. கொழும்பிலேயே வளர்ந்து.. கொழும்பிலேயே படித்து.. கொழும்பிலேயே கம்பன் கழகம் ஆரம்பிச்ச  இலச்சணத்திலா.. புலம்பெயர் தமிழர்களை நோக்கி திட்டுறார். 

இவர் 1995 ரிவிரெச  சிங்கள  ஆக்கிரமிப்பு.. இராணுவ நடவடிக்கையோடு சொந்த ஊரை விட்டு ஓடியந்து கொழும்பில் பதுங்கின போது.. யார் இவர்களுக்கு உதவி நின்றார்கள்.. சிங்களவர்களா..?! அதைப்பற்றி ஏன் மூச்சும் விடல்ல..??! சொந்த மண்ணை விட்டு கொழும்புக்கு.. ஓடியாந்த.. இந்த அகதியே  புலம்பெயர் தமிழர்களைப் பற்றி  அகதின்னும் பார்வையாளரா இருன்னும் கூவ என்ன தகுதி வைச்சிருக்குது..??!

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:12 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

இதில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஸ்டைல் இல் புளுதிவாரிதி ஜெயராஜ் பின்னால் இருந்து கடத்தல், கப்பம் ரவுடி டக்ளசுக்கு கூழைக் கும்பிடு போடுபவர் யார்?

Sat Jun 04, 12:11:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க