Thursday, October 07, 2010

கார்த்திகைச் செடிகள் வளர்ப்போம்.. மாவீரர்களை நினைவு கூறுவோம்..!அத்தியடிக் குத்தியரும்
ஆனந்த சங்கரியரும்
சிங்களக் குகையினில்
கூடு கட்டி வாழ்ந்து கொண்டு
விட்ட அறிக்கைகள்
மறக்கவில்லை.

குத்தியன் சொன்னான்
கொடுத்திடுவேன்
வடக்கும் கிழக்கும் இணைந்த
மாநிலம்..
மத்தியில் அங்கும்
கூட்டாட்சி என்று.

சங்கரியன் சொன்னான்...
சம உரிமையோடு
தமிழருக்கும் அங்கு ஓர் வாழ்வு
இந்திய பாணியில்
ஒரு மாநில சுயாட்சி என்று.

இவர் தம் மூதாதை
இந்தியப் பேயரசின்
எச்சம்..
வரதராஜப் பெருமாளும்
ஒரிசா
ராஜஸ்தான்
டெல்லி என்று
பதுங்கிக் கிடந்து
பார்த்துச் சொன்னான்
ராஜீவ் - ஜே ஆர்
ஒப்பந்தமே நல்ல தீர்வென்று.

சித்துகளின் மன்னன்
வவுனியாவின் சிற்றரசன்
சித்தார்த்தனும் சொன்னான்
13ம் திருத்தம்
அமுலுக்கு வந்தால்
அமைவது நிச்சயம் தமிழீழம் என்று.

கூட்டமைப்பு என்று
கூடிக் கூத்தடித்த
சிலரும் சொன்னார்
மகிந்தவிடம் மண்டியிட்டால்
கிடைக்கும்
ஒரு பிடி மண்ணாவது
ஏட்டிக்கு போட்டி
நமக்கு ஒத்துவராது என்று.

கரிகாலன் சேனையின்
முன்னாள் திலகங்கள்
திமிலங்களாகி
தமிழரை கொன்று தின்று சொல்லின..
ஆளும் கட்சியில்
சிங்களச் சேனையில்
இணைவதே
தமிழருக்கு சுபீட்சம் என்று.

அண்டையில்
1986 இல் இருந்து
சட்ட சபை தோறும்
ஈழத்தமிழருக்கு...
தமிழீழமே தீர்வு
தீர்மானம் கொண்டு வந்து
ஈழத் துயரில் அரசில் செய்த
திருந்தாத முட்டாள்கள் கழகம்
கறுப்பாடு சொன்னது...
அது சகோதர யுத்தத்தால்
பாழ்பட்டுப் போச்சு
என் மகள்
கூனியாகி
கூடிப் பேசி
பொன்னாடை போர்த்தி..
மகிந்தவின் மனம் குளிர்வித்து
வாங்குவாள்
மகிமை மிகு
பரிசு
ஈழத்தமிழருக்கு என்று.

அட போங்கடா
வெட்டிப் பசங்களா..
மகிந்தவும் சொன்னான்
கோத்தாவும் சொன்னான்
பொன்சேகாவும் சொன்னான்
போதாக்குறைக்கு
ரணிலும் சொல்லிட்டான்
புலிகளோடு
பிரபாகரனோடு
அழிந்தது
இனப்பிரச்சனை..!
தமிழருக்கு...
இங்கு போல்
உலகில் வேறு எங்கும்
வாழ்வில்
வசந்தம் இல்லை என்று.

அடேய் பாழாய் போனவங்களே
அண்ணனின் பாதையில் தான்
நிற்க மறுத்தீர்கள்..
அண்ணனின் வழியை தான்
நியூயோர் லண்டன் என்று
போய்
பயங்கர வாதம் என்று காட்டினீர்கள்..
இப்போ..
நீங்களும்...
கூனிக் குறுகி
கூஜா தூக்கி
தாஜா அரசியல்
செய்கிறீர்கள்...
இதுதான்
உங்களின் தாகம்
என்று
அப்பவே.. என்ன..
இப்பவாவது
தேசங்களில்
ஓசியில
எழுதித் தொலையுங்கோடா.
வட்டிக் கடைக்கு
வரியும்
சீட்டுக் கடைக்கு
பற்றுச் சீட்டும்
இருக்கோ என்று
ஆராய்ச்சி பண்ணுறதே
உங்களின் ஜனநாயம் என்று.
இது பேச
உங்களுக்கு ஒரு
தேசமாம்....
அதில
ஒரு மாற்றுக் கருத்து ஜனநாயகமாம்.

வீணாப் போனவங்களே..
உங்களின் காழ்புணர்ச்சியால்..
வீணடித்தீர்களேடா
எங்கள்
அன்புச் செல்வங்கள்
மாவீரர்களின்
மகத்தான
தியாகங்களை.

ஓர் நாள்
எம் மாவீரரின்
கல்லறைக் கற்கள்
அதிரும்
அதில்
உதிரும்..
உங்கள் வேசங்கள் மட்டுமல்ல..
எதிரிகளின் வீரங்களும்...!

வெல்லும்
எம் தேசம்..
தமிழீழம்..
மாவீரர் கனவு
அன்று
பலிக்கும்
இருந்து பாருங்கோடா..!
இளைய தலைமுறை
உங்கள் தலை நரைத்த
வாழ்க்கைக்கு
மொட்டை அடித்து
அதிர வைப்பர்
களத்தை...
அது
அரசியல்.. ஜனநாயகமாக கூட இருக்கலாம்..
இல்ல..
ஆயுதம் என்றால்
அதையும்
தூக்கலாம்.

சிங்களமே
வெற்றிக் களிப்பில்
திளைத்தது போதும்..
60 ஆண்டு கால
பகை இருக்கு..
மறந்திடாதே...!

தமிழர்
எம் தாகம்..
எம் மாவீரரின் தாகம்
தமிழீழமே..
புரிந்து கொள்.

புல்லுருவிகளும்
சில புலித் துரோகிகளும்
உனக்கு நண்பர்கள் ஆகலாம்..
உண்மைத் தமிழன்..
அடங்கமாட்டான்
உன் கொட்டத்தின் முன்
மண்டியிடான்.

நல்லூரும்..
நயினாதீவும்
மங்குஸ்தானும்
ரம்புட்டானும்...
எமக்கு...
நீ தர வேண்டியதில்லை..!
தமிழர்கள் நமக்கு
வேண்டியதெல்லாம்
எம் மாவீரர்களின்
இலட்சிய வெற்றி ஒன்றே.

இருந்து பார்
காலங்கள் மாறும்..
இராஜ தந்திரங்கள்
திசை மாறும்..
அன்று...
தமிழன்
கொண்டாடுவான்..
மாவீரர் தினம்..
சுதந்திர தமிழீழ மண்ணில்..
இது சபதம்..!

அது வரை..
களம் அதிரும்
அதில் ஜனநாயகம்
என்ன
பணநாயகம் இருந்தாலும்..
உதிர்ந்த எம்
மாவீரர்
மடியில்..
அது
மலரும்..
தமிழீழமாய்..!

மாவீரர்களுக்கு
வீர வணக்கம்...
இது சொந்த மண்ணில்
முழங்கும்..
கார்த்திகை பூக்கள்
சிதைந்து போன
கல்லறைகள்
எங்கும் பூக்கும்..!

முடிந்தால்..
ஆட்லறிகள் கொண்டும்
வெள்ளை பொசுபரசு கொண்டும்
மிக்குகள் கிபீருகள்..
மல்ரி பரல்கள்..
கிளஸ்ரர்கள் கொண்டு
குண்டு குண்டாய்
கொட்டிப் பார்
வெட்டிப் பார்.
அவை மலரும்..
மகிந்தா
இருந்து பார்..!

கோத்தா.. நீ..
பீஜிங் டெல்லி
மொஸ்கோ நியூயோர்க்
போய் பிச்சை வேண்டி வா..
கார்த்திகை
செடிகள்..
என்ற பயங்கரவாதம்
சிறீலங்காவுக்கு
சவால் என்று
சொல்லி வா...!

அவர்களும்....
வாய் பிளந்து..
இராணுவ திட்டம் தீட்டி
சற்றலைட்டுகள் ஏவி
உளவு பார்த்து
ரடார்கள் தந்து...
ஆயுதங்களை
அல்லாவின் பெயரால்
அள்ளிக் கொடுத்து
கூட்டமா ஓடி வந்து
தீர்த்து வைப்பர்
உன் எதிர்பார்ப்பு.

இருந்தும்
மலருமடா
எங்கள்
கார்த்திகைச் செடிகள்...
சிங்களமே - நீ
அதை புடுங்கவும் முடியாது.
அவை
எம் மாவீரரின்
கல்லறைகள் மீது
உதிர்வதை
உன்னால்
தடுக்கவும் முடியாது...
சிதைக்கவும் முடியாது.

அங்கும்..
களம் அதிரும்..
கார்த்திகை செடிகள்
அமைத்த
அந்தக் களம்...!
எதிரியே
உன்
பலத்தோடு மோதி
எம்
மாவீரர்களுக்கு
அஞ்சலி
செய்யும்...
அந்தக் கார்த்திகைப் பூக்கள்
முன்
நீ தோற்பது உறுதி..!
அது
கார்த்திகை 26 இல்
நிகழும்..!


நன்றி: யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:38 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க