Sunday, September 12, 2010

காதல் வந்ததும் கன்னியின் எம் எஸ் என் குலுங்கும்..!

ஒரு எம் எஸ் என் இனக்கவர்ச்சியை கற்பனையில் வடிச்சுப் போடுறன்.. அதில இருந்து இனக்கவர்ச்சிக்கான தகமைகளை கண்டுக்கோங்க.


கந்தன்: காய்

காயத்திரி: காய்

க: கவ் ஆர் யு

கா: கவ் எபவுட் யு

க: ஐ அம் பைன்

கா: கியர் ரூ

க: எங்க இருந்து வாரீங்க.

கா: எதுக்கு

க: சும்மா

கா: லண்டன்

க: நான் சுவிஸ்.. என்ன வயசு

கா: ஏன் அது உங்களுக்கு.

க: சும்மா தெரிஞ்சுக்கத்தான்.

கா: அதென்ன சும்மா. நீங்க என்ன செய்யுறீங்க.

க: படிக்கிறன்.

கா: ஓ அப்படியா.

க: நீங்க என்ன பண்ணுறீங்க.

கா: சாட் பண்ணுறன்.

க: ரெம்ப தேவை.

கா: :lol:

க: சொல்லுங்க. :lol:

கா: நானும் படிக்கிறன் யுனில.

க: எந்த யுனி

கா: நீங்க எங்க

க: சுவிஸில ஒரு யுனி உங்களுக்கு தெரியுமா சுவிஸ் பற்றி

கா: சரி விடுங்க.. நான் லண்டன் யுனில பி எஸ் சி பிசினஸ் முதலாம் வருடம். (இதில் இருந்து வயசு..படிப்பு.. படிக்கிற இடம் அனைத்தும் வழங்கப்பட்டாயிற்று.)

க: நான் சுவிஸில கொட்டல் மனேஜ்மென்ற் கோஸ்.. கடைசி வருடம். 2008 இல கை ஸ்கூள் முடிச்சுப் போனன். (அவரும் பதிலுக்கு சொல்லிட்டார்.)

கா: நைஸ்

க: தாங்க்ஸ்.

கா: உங்க போட்டோ ஒன்று போடுங்களேன். (போட்டோ பார்க்கும் படலம் ஆரம்பம்.)

க: லேடீஸ் பெஸ்ட்

கா: (எம் எஸ் என்) போட்டோ மாறுகிறது. (ஸ்ரெயிட்னர் போட்ட முடியோட.. மொடேன் ரெஸ்ஸில் அவா.)

க: நல்லா தான் இருக்கீங்க.

கா: ரெம்ப.. தாங்க்ஸ்.

க: :lol:

கா: உங்க போட்டோ

க: நான் போட்டிருக்கிறதே என் போட்டோ தான். (தலை எல்லாம் ஜெல் அடிச்சு மாடு சூப்பின பனங்காய் போல இருக்கு.)

கா: சிமாட்

க: உங்க கிட்ட பேஸ் புக் இருக்கா.

கா:ம்

க: என்னிட்டையும் இருக்கு> இதில போனா பார்க்கலாம்.

கா: ஓ.. சரி இன்வைட் பண்ணுங்க.. அட் பண்ணிக்கிறன்.

க: (மனசுக்க..) ஆகா சிட்டு சிக்கிட்டே.

கா: என்ன பதிலைக் காணம்.

க: இன்வைட் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

கா: ரெம்ப பாஸ்ட் தான்.

க: பின்ன.. இதில பாஸ்டா இல்லாட்டி.. அடுத்த நொடிக்கு என்னாகுமுன்னு யாருக்கு தெரியும்.

கா: வட் யு மீன்.

க: இல்ல இங்க அம்மா பேசுவாங்க சாட் பண்ணுறதை கண்டா அதுதான். (தான் பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கிறன் என்றதைச் சொல்ல.)

கா: இங்க மட்டும் என்னவாம். (பதிலுக்கு அவா.)

க: வேர்க் பண்ணுறனீங்களோ.. ( தகுதிகள் செக் பண்ணினம் ஆளாளுக்கு.)

கா: ம்.. பாட் ரைம். நீங்க..

க: நானும் தான்.. கோட்டல் ஒன்றில..

கா: நைஸ். உங்க கார் படம் ஒன்று போடுங்களேன். (கார் இருக்கோ என்று செக் பண்ணுறா.)

க: (படம் மாறுகிறது.)

கா: நைஸ் பிம் எம் டவுள்யு. ஐ லைக் டாட் கலர் :lol: (நீ வைச்சிருக்கிறது எனக்குப் பிடிக்குது.. உன்னையும் பிடிக்கும் என்றா மறை முகமா.)

க: சொல்லவே இல்ல.

கா: :lol:

க: எனக்கு இப்ப வேலைக்கு ரைம் ஆகுது.. உங்க மொபைல் நம்பர் தருவீங்களா.. (தான் பிசியான சின்ஸியர் ஆள் என்று காட்டுறார்.)

கா: (நம்பர் வருகிறது.)

க: இது தான் எனது. (அவரும் பதிலுக்கு.)

கா: நன்றி. :)

க: (பதிலுக்கு ரெட் ரோஸ் சிமைலி)

கா: (பதிலுக்கு அவாவும்)

க: ( எம் எஸ் என் குலுங்குகிறார்)

கா: :lol: (அவா பதிலுக்கு அவருக்கு எம் எஸ் என் வழி குட்டுகிறார்.)

க: காய் சுவீட் நான் போகனும்.

கா: யு ஆர் சோ சுவீட்.. ஐ நெவர் அலோ யு ரு கோ.

க: ஓகே.. ஓகே.

கா: பிறகு சொல்லுங்கோ..

இப்படியே தொடர்ந்து.. அது பின்னர் போன் வழி ரெக்ஸ்ட்.. மற்றும் நேரடி சம்பாசனையாக மாறி... அது பிறகு எயார் போட்டில சந்திக்கிறதாயும் முடியலாம்.. அல்லது நட்பு என்று பெயர் சூட்டப்பட்டு கதை தொடர்ந்து பின் சலிப்பு வந்ததும் அது அறுந்து போகலாம்.. அல்லது எம் எஸ் என் விண்டோ மூடுப்படுவதோடு சண்டையோடும் முடியலாம்.

ஆனால்.. இப்போ காதல் செய்ய... தப்பு தப்பு.. இனக்கவர்ச்சி செய்ய இவை அவசியம்... அதற்கு இவை தான் அடிப்படை தகுதிகள். :)

யாழில் இருந்து..!

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:12 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க