Thursday, January 20, 2011

வெளிநாடுகளில் தமிழர்களின் பேர்த்டே பாட்டிகள்.வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எங்கட தமிழ் ஆக்கள் பேர்த்டே பாட்டிகள் போன்ற.. உப்படியான நிகழ்வுகளில் தான் தங்கட "உயரிய அந்தஸ்துக்களை" காட்டிறது.

நான் பொதுவா இப்படியான நிகழ்வுகளுக்கு போறதை விரும்பிறதில்ல. இருந்தாலும்.. உறவினர்கள் என்று அழைச்சு தவிர்க்க முடியாமல்.. ஒன்றிரண்டுக்கு போக... நம்மல பாட்டின்னு.. திக்கு முக்காட வைச்சிட்டாங்க..

வெள்ளையளின் பாட்டிக்கு போனால் சாப்பாடு இரண்டாம் பட்சம்.. என்ரரெயிண்ட் மெண்ட் முதல்..!

இவர்களின் பாட்டிக்குப் போனால் சாப்பாடு முதலாம் பட்சம். அதுதான் இவைட பாட்டியே..!

உண்மை சம்பவம் ஒன்றைச் சொல்லுறன் படியுங்கோ..

a to z , ரொம்ரொம்.. மொபைல் நவிகேற்றர் எல்லாம் பாவிச்சு.. சொன்ன நேரத்துக்கு விழுந்தடிச்சு பேட்தே லொக்கேசனுக்கு போனா அது ஒரு சேர்ச்சில் அமைந்திருந்த விழா மண்டபம். பெரிய ஆடம்பரமான சோடனைகள்..! வட்டவட்ட மேசைகள்.. அதைச் சுத்தி நாலு நாற்காலிகள். அதில கோலா போத்தல்.. அப்படி இப்படின்னு அதுகளோட நாலு கிளாஸ் கவுத்து வைச்சிருந்தாங்க. அதோட மஞ்சள்.. சிவப்புண்ணு.. ரிசுக்களை வடிவா மடிச்சு வைச்சிருந்தாங்க.

பாட்டிக்கு போய் உட்காரல்ல... ஒரு புகலிடத்தில் பிறந்த இளம் பொண்ணு நகைகள் அழங்கரிக்க.. வட இந்திய நாகரிகத்தில் முளைத்த உடை அணிந்து கொண்டு வந்து.. ஸ்ராட்டர் என்று பல வகை சிற்றுண்டிகளை நீட்டிச்சுது..

சரி என்று ஒரு புன்னகையோடு அதை வாங்கி.. என்னடா வந்ததும் வராததுமா... சாப்பாடு என்று நினைச்சுக் கொண்டிருக்க...

இன்னொரு ஆன்ரி... கலோ.... ஹாய்.. உங்களுக்கு கொக்கோ.. றிங்ஸோ.. என்று கொண்டு வந்தா...

இதென்னடா அநியாயமா இருக்கு.. வாங்கின சாப்பாட்டை சாப்பிடக் கூட இல்ல.. அதுக்குள்ளாவா...

ஆன்ரியின் மூச்சியைப் பார்த்து..

கோக் என்ற..

அந்த ஆன்ரி போய் ஒரு 5 நிமிசம் கூட ஆகல்ல...

நூடில்ஸ் வேண்டினவைக்கு நூடில்ஸ்.. இடியப்பப் பிரியாணி.. புட்டு பிரியாணி.. மட்டின் பிரியாணி.. சிக்கன் பிரியாணி.. சைவ ஆக்களுக்கு வெயிடபிள் பிரியாணி.. என்று எல்லாம் இருக்குது. கூச்சப்படாமல் நல்ல வடிவா சாப்பிட்டுப் போகலாம்.. ஒருத்தரும் இப்ப வெளிக்கிட வேண்டாம் என்றாங்கள்...

நான்.. தட்டில இருந்த சிற்றுண்டிகளை பார்த்து.. வெறிச்சுப் போட்டு.. இதுகளை சாப்பிட்டா.. பிரியாணிகளை எப்படி.. நிரப்பிறது என்று யோசிச்சுக் கொண்டிருந்தன்...

அப்ப.. அந்த பிறந்த நாளுக்குரிய பிள்ளையின் அப்பா வந்து சொன்னார்... றிங்ஸ் எடுக்கிறவை அங்க இருக்கு எடுங்கோ.. என்று.

அங்க திரும்பி பார்த்தால்.. சிவாஸ்.. வொட்கா.. பக்காடி.. நெப்போலியன்.. ஜக்டானியள்.. என்று ஐரெம் எல்லாம் வெரி கெவியா இருந்திச்சு. நம்மளப் போல ஆக்களுக்கு என்று ஜே2ஓ அப்படி இப்படி என்று ஒன்றிரண்டு சொவ்ட் ஐரங்கள் வேற..!

அதுகளையும் ஒரு பார்வை பார்த்திட்டு.. திரும்பிறன்.. பிறந்த நாளுக்குரிய பிள்ளையின் அம்மா வாறா.. கேக் வெட்டப் போறம். எல்லாரும் வாங்கோ என்று.

சரிடாப்பா.. இப்பவாவது பிறந்த நாள் என்று இதையாவது ஒழுங்க செய்யப் போறாங்களே என்று போய் பார்த்தா.. ஒரு பெரிய மேசையை நிரப்பின.. கேக்.

அதில.. உள்ள காட்டூன் கெரக்டெர்கள்.. பி எஸ் பி.. கேம் கொன்றோலர்.. என்று டிசைன்கள் போட்டிருந்திச்சு. நடுவில பெரிய பாபியை நிற்பாட்டி வைச்சிருந்தாங்க.

அட கடவுளே.. இந்தளவு பெரிய கேக்.. அதுக்கு இவ்வளவு சோடினையா.. இப்படியும் பேர்த்டேக்கு கேக் வெட்டுவாங்களா... கண்றாவிடா.. என்றுபோட்டு.. அதை பிரமிப்போடு.. விடுப்புப் பார்த்திட்டு வந்து உட்காரல்ல...

இன்னொரு இளம் பொண்ணு.. அதே அலங்காரங்களோடு பெரிய கேக் பீசை நீட்டுது..

தாங்க்ஸ் என்று வாங்கி அதை மேசையில் வாங்கி வைச்சிட்டு வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறன்..

அதுக்குள்ள இன்னொரு பெண்...

ஐஸ்கிறீம்.. புரூட் சலாட் என்று இன்னொரு கப் ஐரத்தோட வந்து நிற்குது...

இதென்னடாப்பா என்று.. அதையும் வாங்கி மேசைல அடுக்கி வைச்சிட்டு.. எதையுமே சாப்பிடல்ல....

சரி எல்லாரும் வாங்கோ.. பிள்ளை போட்டோ எடுக்கனுமாம்.. என்டாங்க.

அட கடவுளே.. சாப்பிடக் கூட அவகாசம் இல்லை... போட்டோ... என்று நினைச்சுப் போட்டு..

சரின்னு அங்க நகர்ந்து போனா.. அதில 200 பேர் கியூவில நிக்கிறாங்க.. போட்டோ எடுக்க..! குடும்பமா.. தனியா எண்டு.

(அதுமட்டுமா.. ஆக்களை விட அவை கொண்டு வந்த பிரசண்டுகளை வைச்சு போட்டோ பிடிக்கிறதுதான் அங்க முக்கியமா இருந்திச்சு. அப்ப தானே அடுத்தமுறை அவை அவைக்கு பேர்த்டே வரேக்க.. இந்தப் பிள்ளையின் பெற்றோர் பெரிசா வாங்கிக் கொண்டு போவினம். அதோட பிரசென்றின்ர அளவு பெருக்க பெருக்க.. அந்தஸ்தும் பெருக்குமாமெல்லோ..!)

அதுக்குள்ள.. சாப்பிடுறவை சாப்பிட.. பிரியாணிக்கு கியூவில நிக்கிறவை நிக்க.. மிச்சப் பிரியாணிகளை பொட்டலம் கட்டி வீட்டுக்கு கொண்டு போறவை அதுக்கு ஆயத்தப்படுத்த.. இப்படி கனக்க நடந்துக் கிட்டு இருந்திச்சுது.

நானும் வந்திட்டனே ஒரு போட்டோவை எடுப்பம் என்று என் கமராவை வெளில எடுத்து நீட்டினா.. அது எங்க.. சனம் கமராவுக்கு முன்னால கூடி நின்று கொண்டு மகளுக்கு 24 வயசு. இப்பதான் மெடிசின் முடிச்சு வெளில வந்திருக்கா.. அவாக்கு நல்ல மாப்பிள்ளை பாக்கிறம் என்று.. பேர்தே பாட்டியை.. மெற்றிமெனி சென்ரர் ஆக்கிக்கிட்டு நிற்குதுங்க. அதுவும் குண்டு குண்டு ஆன்ரிங்க.. அவையை தாண்டி கமராவை போக்கஸ் பண்ணுறது எண்டது இமய மலையை நகர்த்தி வைச்சிட்டு பண்ணுறது போல..!

சரி வேண்டாம்.. என்றிட்டு.. அங்கால போனா.. அதுவரை கொஞ்சம் அடக்கமா ஓடிக்கொண்டிருந்த மியுசிக்.. அப்பா.. செவிப்பறை பிளக்க.. ஒலிக்க ஆரம்பிச்சுது. விஜய் குத்தாட்டம்.. போட.. திரிசா குத்த.. நயன் ஓட.. சூரியா துரத்த... இடைக்கிடை இங்கிலீசில தூசணத்தில வந்து ராப் விழ.... அங்க நிக்கவே முடியல்ல. கோலை விட்டு வெளில வந்து ஆகாயத்தை வெறிச்சுப் பார்த்திட்டு நிக்கிறன்.. பொலிஸ் கார் வந்திச்சு.

என்னவாம் என்று கேட்டால்.. அண்டை அயலில் இருந்ததுகள்.. கவுன்சிலுக்கு அடிச்சுச் சொல்ல கவுன்சில் பொலிஸுக்கு அடிச்சுச் சொல்ல.. பொலிஸ் வந்திட்டுது.. சத்தம் போடாமல் 10 மணிக்குள்ள நிகழ்வுகளை முடிச்சிட்டு எல்லாரும் அமைதியா போயிடனும் என்று.

பொலிஸ் வந்ததும்.. வெள்ளைக்காரன் வந்திட்டான் எல்லோ.. உடன ரெண்டு மூன்று பெரிசுங்களும்.. அவைட புகலிடத்தில் பிறந்த வாரிசுகளும்.. பொலிஸோட ஒரே அளவலாவல். சிலர் பொலிஸுக்கு பந்தா பிடிக்க கோலாவை நீட்ட அவன்.. அவள்.. வேண்டாம் என்ற.. அந்தக் கூத்து வேற வெளில அரங்கேறிக் கொண்டிருந்திச்சு.

நான் சரியா மாலை 6 மணிக்கு வந்தனான். 9.45 ஆக.. மண்டபத்தை விட்டு வெளியேறிட்டன். ஏன் என்றால்.. பிறகு 250 பேரும் 10 மணிக்கு ஒன்றா வெளிக்கிடுங்கள்.. கார் அதுஇது என்று அந்தப் பகுதியே ரபிக் ஜாம் ஆகிடும். பொலிஸ்காரன் வேற.. ரபிக் கென்றோல்.. பண்ண.. அற்ககோல்.. கென்றோல் பண்ண வந்திட்டான்.

உண்மையைச் சொல்லுறன்.. யுனில இருக்கிறதால.. வெள்ளையளோடும் பாட்டி அது இதெண்டு போயிருக்கிறன்.. ஒரு நாளும் பொலிஸ் வந்து பாட்டியை கென்றோல் பண்ணினதை அனுபவிச்சதே இல்ல. ஆனால்.. நம்மவர்களின் பாட்டியில தான் பொலிஸ் கொன்றோல்.. வரும் அளவுக்கு பாட்டி.. சாறி.. சாப்பாட்டு பந்தி நடத்தக் கண்டிருக்கிறன்.

இதை குறையாச் சொல்லுறன் என்று புலம்பெயர் தமிழ் மக்கள் என்னில குறை நினைக்கிறதில்ல.. இது எங்கட பெருமை என்று சொல்லுறன்... என்று நினைச்சுக் கொண்டு.. போங்கோ.. ஓகேவா.

யாழில் இருந்து.. நெடுக்காலபோவன் எழுதியது.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:24 AM

10 மறுமொழி:

Blogger ராம்ஜி_யாஹூ செப்பியவை...

உங்களது இலங்கை தமிழை ரசித்தேன், அருமை

Thu Jan 20, 02:25:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி. புரிய கஸ்டப்பட்டிருப்பீங்க என்று நினைக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு தமிழ் நமக்கு நல்லா புரியுமில்ல..! :))

Thu Jan 20, 03:42:00 PM GMT  
Blogger Chandravathanaa செப்பியவை...

பெருமையோ, சிறுமையோ இப்படி இவ்வளவு ஆடம்பரச் செலவுகள் தேவையோ என்று கேட்கப்போய்..
தினுசான பார்வைகளையும், உனக்கென்ன தெரியும்.. என்ற பாவனைகளையும் சந்தித்ததால்.. இப்போதெல்லாம் எதுவும் கேட்பதில்லை. கட்டாயம் போக வேண்டிய நெருங்கிய உறவுகள் என்றால் போய் நிகழ்ச்சியில் கலந்து முடிந்தவரை சந்தோசங்களை எடுத்துக் கொண்டு திரும்பி விடுவேன்.

அதுசரி நீங்கள் இப்போது எழுதிய கட்டுரையா? அல்லது பழசா?
பலகாலமாக பல்கலைக்கழகத்தில் இருக்கிறீர்கள் போலுள்ளது.

Fri Jan 21, 05:43:00 AM GMT  
Blogger வந்தியத்தேவன் செப்பியவை...

உண்மை உண்மை அத்தனையும் உண்மைதான். நம்மவர்களின் பார்ட்டியில் தான் பொலீஸ் வாறது.

வட இந்தியர்களின் பார்ட்டிகளில் நடனத்துக்குத் தான் முன்னுரிமை.

மான், மரை வறுவல்களை விட்டுவிட்டீர்கள்.

Fri Jan 21, 08:21:00 AM GMT  
Anonymous மாசிலா செப்பியவை...

//பேர்தே பாட்டியை.. மெற்றிமெனி சென்ரர் ஆக்கிக்கிட்டு நிற்குதுங்க//இருந்தாலும் இவர்களை அதிகம் குறை சொல்லவும் கூடாது. தாய் நாட்டில் கோயில் குளம் போன்ற இடங்களில் பெரியவர்கள் சந்தித்து இது போன்ற விடயங்களை ஆடம்பரம் இல்லாமல் அலசுவார்கள். அந்நிய நாடுகளில் இதுபோன்ற விழாக்களில் அல்லது கலை கலாச்சார விழாக்களில்தான் இது சாத்யம்.
ஈழத்து கொச்சை தமிழ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.
பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்காலபோவன்.

Fri Jan 21, 09:30:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி சந்திரவதனா அக்கா மற்றும் வந்தியத்தேவன் மற்றும் மாசிலா.

இது நெடுக்காலபோவன் மிகச் சமீபத்தில் யாழில எழுதினது அக்கா.

பல்கலையும் படிப்பும் வாழ்க்கையும் என்றும் பிரியாத விடயங்களாக சிலருக்கு அமைவதுண்டு இல்லையா..! அப்படின்னு சொல்லலாம் போல. :))

மாசிலா.. நிச்சயமாக.. நாங்கள் தமிழக நண்பர்களோடு பேசும் போது ஜாஸ்தி பேசுறா.. கொஞ்சம் மெதுவா பேசு புரியுதுல்லை என்பார்கள்.

கொஞ்சம் சிரமம் தான். அதேபோல் ஆங்கிலப் பதங்களை தமிழில் எழுதும் போது தமிழக எழுத்தாளர்கள் எழுதுவது போலன்றி நாங்கள் நேரடி ஆங்கில உச்சரிப்பை தமிழில் எழுதுவோம். அதுவும் புரியச் சிரமம் அளிக்கக் கூடியது.

மன்னித்து அருள வேண்டும் மாசிலா.

நன்றி.

Fri Jan 21, 10:08:00 AM GMT  
Blogger நந்தா ஆண்டாள்மகன் செப்பியவை...

ஆஹா அருமையான நடை ரசித்து படித்தேன்..

Fri Jan 21, 11:38:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி நந்தா ஆண்டாள்மகன். :)

Fri Jan 21, 11:55:00 AM GMT  
Blogger பொற்கோ செப்பியவை...

தாயகத்தில் மக்கள் படும் துயரம் உணர்வோர் யாரும் இது போன்ற எடுப்புத்தனமான பா(ர்)ட்டிகள் நடத்தவும்,பங்குபற்றவும் தயங்குவர்.

Fri Jan 21, 08:35:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி பொற்கோ தங்கள் தாழ்மையான கருத்திற்கு. :)

Fri Jan 21, 11:37:00 PM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க