Wednesday, November 11, 2015

சுமந்திரன் சம்பந்தனின் சுயநல அரசியலும்.. முண்டுகொடுக்கும் சிங்களப்பேரின ஊடகங்களின் ஊடுருவல் கிளைகளும்.

அவுஸிலும் எழுந்த சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரான கண்டனக் குரல்களை நலிவுபடுத்தப் பாடுபடும் சில தமிழர்களை உள்வாங்கி சிங்கள பேரினத் தேசியத்தின் ஊடுருவல் ஊடகங்கள் சன நாயகப் பூச்சுப் பூசி செய்யும் நாசகார செயற்பாடுகள் பற்றிய எச்சரிக்கைப் பதிவு: இது அந்தக் கட்டுரைக்கான இணைப்பு

இந்தக் காணொளியையும் காணுங்கள்..



தொடர்ந்து வாசியுங்கள்...

மே 2009 க்குப் பின் டெயிலி மிரர் சிங்கள பெருந்தேசியத்தின் ஆணவக் குரலாக விளங்கிய ஆங்கில ஊடகத்தின் கிளையாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டத் தோல்வியோடு கருத்தியல் ரீதியில் நசுக்க நச்சுப் பாய்ச்ச உருவானதே இந்த தமிழ்மிரர் என்ற ஊடகம். (போருக்கு முன்னரும் போரின் போதும் வைக்கப்பட்ட பல சனநாயகக் கருத்துக்களை வெட்டி அகற்றி சிங்களப் பெரிந்தேசிய இனத்தை களிப்பூட்டக் கூடிய சிங்களப் பெரிந்தேசிய இனத்தின் பேரினவாதச் சிந்தனைகளை செயல்வடிவம் பெறத்தக்க கருத்துக்களை அனுமதித்து வந்தது ஆங்கில டெயிலிமிரர். அதன் செயற்பாட்டை நேரடியாகக் கண்டவர்கள் நாங்கள்.)

சுமந்திரனின் 58 ஆயிரம் (கள்ள வாக்கு உட்பட) வாக்குக்கு மாங்கு மாங்கென்று வக்காளத்து வாங்கும் இந்த ஊடகம்.. அவரின் பேச்சுக்கு செயற்பாடுகளுக்கு சனநாயக சாயம் பூச வெளிக்கிடும் இந்த ஊடகம்.. தாயக மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பிரித்தாளும் சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப்பாடுபடும் சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்குவது ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றல்ல.

சுமந்திரனின் அரசியல் தோல்விகள்.. தாயக மக்களாலும்.. அவருக்கு இனங்காட்டப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களாலும் இனங்காணப்பட்டுள்ளது.
சுமந்திரன் பயணிக்கும் பாதை 2009 ஆயுதப் போராட்ட மெளனிப்புக்குப் பின்.. தமிழ் மக்களுக்கு உள்ள அர்ப்ப சொற்ப சந்தர்ப்பங்களையும் இல்லாமல் செய்யும் என்ற பயம்.. தாயக மக்களிடமும் நிறைந்துள்ளது என்பதை அரசியல் போராளிகளின்.. தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில்.. அந்த மக்கள் முன்வைத்து வரும் பகிரங்க கருத்துக்கள் பறைசாற்றி நிற்கின்றன.

சுமந்திரன்.. யாழ் ஆக்கிரமிப்பு காணி விடுவிப்பில் தோல்வி கண்டார்.

சுமந்திரன்.. ஐநா மனித உரிமைகள் அவையில் சிங்கள அரச பயங்கரவாதத்தை கண்டிக்கவும் அதன் இன அழிப்பை இனங்காட்டவும் தவறினார்.

சுமந்திரன்..சம்பூர் மக்களின் பாதுக்காப்பான மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த ஒரு அக்கறையும் இன்றி தேர்தல் பொறுக்கி அரசியலாக சம்பூர் மக்களின் நில விடுவிப்பை பயன்படுத்தி விட்டு அடங்கி விட்டார்.

சுமந்திரன்.. 2002 பிரபா - ஹக்கீம் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் பாதுகாப்பான வெளியேற்றம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பாக இன்றும் பேசித் திரிவது அநாவசியமாக இரண்டு சமூகங்களிடையேயும் பிரிவினையையும் பதட்டத்தையும் அரசியல் ஒத்துவாராமையையும் நீட்டி நிலைப்பிக்க முனையும் சிங்கள பேரின அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களின் பங்களிப்போடு சிங்கள பேரின அரசின் பொருண்மியப் புறக்கணிப்புக்களில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் தாயக மக்களை.. புலம்பெயர் மக்களிடம் இருந்தும் பிரிக்கும் கருத்தியல் என்பது தாயக மக்களை தொடர்ந்து ஆதரவற்ற அநாதைகளாக்கி அதில் அரசியல் குளிர்காய நினைக்கும் நரித்தனமே மிஞ்சி உள்ளது.

இதனையே சிங்கள ஆளும் பேரினவாத அரசியல் சக்திகளும்.. அண்டையில் ஹிந்திய வல்லாதிக்கமும் அமுல்படுத்த விரும்புகின்றன. இதன் மூலம் தாயக தமிழ் மக்களின் அரசியல்.. விடுதலை உணர்வை அடக்கி தமக்குள் அடிமையாக வைச்சிருக்கலாம் என்று இந்த இரண்டு அரசுகளும் கணக்குப் போடுகின்றன.

உணர்ச்சி இன்றி அரசியல் இல்லை. சிங்களப் பேரின பேரினவாத தேச உணர்ச்சி அரசியலை கண்டிக்க வக்கில்லாத தமிழ்மிரர் சிங்கள பேரின அரசின் கொடுமைகளை இன்றும் சந்தித்து இடம்பெயர்ந்து நிற்கும் தமிழ் மக்களிடம் எப்படியான அரசியலை எதிர்பார்க்கிறது. கைகட்டி நிற்கும் அரசியலையா..??!

சனநாயகம் என்ற போர்வையில்.. சிங்களப் பேரினவாத சிந்தனைகளை தமிழர் தேசம் எங்கும் விதைத்து அதனை சிங்கள தேசமாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவ உதயமானதே இந்த தமிழ்மிரர். இதில் வரும் ஆக்கங்கள் கட்டுரைகளை உன்னிப்பாக நோக்கின் அதன் வரவு இருப்பு செயற்பாடு எவ்வளவு நாசுக்காக இதனை செய்து வருகிறது என்பதை இட்டு தெளிவூட்டம் பெறலாம்.

சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல்.. சமூக.. பொருண்மிய.. நில உரிமைகளையும் வழங்கப் போவதில்லை. இந்த அடிப்படையில் இருந்து தான் தமிழ் அரசியல் கைதிகளின் பொதுமன்னிப்பும் அணுக்கப்படுகிறது. இதே சிங்கள அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த ஜே வி பி குழுவினருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுகிறது.

சிங்களப் பேரினவாத அரசுக்கு முண்டுகொடுக்கக் கூடிய தமிழ் ஆயுக்குழுக்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது. சிங்கள பேரினவாத அரசுக்கு சேவகம் செய்யக் கூடிய முன்னாள் புலிக் காட்டிக்கொடுப்பாளர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால்.. அப்பாவி தமிழ் மக்களுக்கும்.. அரசியல் கைதிகளுக்கும் அது சாத்தியமில்லை என்று முழங்குகிறது. அதுவும் ஐநா அவர்களின் விடுதலை தொடர்பில் சுட்டிக்காட்டிய பின்னும்.

சுமந்திரன்.. போலி வாக்குறுதிகளை தந்து இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வரும் சிங்களப் பேரின அரசுக்கு முண்டுகொடுப்பது ஏன்..??! அதன் செயற்பாடுகளை சர்வதே அரங்கில் மறைத்து நிற்பது ஏன்..?!

சுமந்திரன் ஒரு பக்கம் போலி வாக்குறுதிகளை வழங்க.. அதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பக்கம் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. கறுப்பு தீபாவளி கொண்டாடுகிறது. இந்த முரண்பாடுகளுக்கு சுமந்திரனின் பதில் என்ன..??! தமிழ்மிரர் என்ற ஒற்றர் ஊடகத்தின் சனநாயக நிலைப்பாடு என்ன..?!

சுமந்திரன் தொடர்ந்தும் தாயக தமிழ் பேசும் மக்களையும் புலம்பெயர் தமிழ் பேசும் மக்களையும் துருவமயப்படுத்தும் செயலை செய்து கொண்டிருக்க அனுமதிக்கப்படுவதானது எதிர்காலத்தில் தாயக தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்களப் பேரினவாத அரசியல் நிரல்படுத்தப்பட்ட ஒன்றாகி தமிழ் மக்கள் எந்த வித அரசியல் உரிமைகளும் நில உரிமைகளும் அற்று சிங்களவர்களால் சூழப்பட்ட ஒரு பயங்கர சூழலில் வாழும் நிலைக்கே கொண்டு செல்லும். இந்த அடிமை வாழ்வில் இருந்து கொண்டு தமிழர்களால் உண்மையான சனநாயகத்தை ஒருபோதும் சுகிக்க முடியாத நிலையே தோன்றும்.

அப்போது அவர்களுக்கு குரல்கொடுக்க தமிழ்மிரர் ஆட்டுக்குட்டிமிரர்கள் இருக்கா. அவற்றின் இன்றைய இருப்பின் நோக்கமே தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்கி மொத்த தீவையும் சிங்கள சிறீலங்கா ஆக்குவதுதான். அதற்கு சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாத சுயநலமிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுமந்திரனின் தமிழர் விரோத செயற்பாடுகள்.. புகலிடத்தில் இருந்து வரும் எச்சரிக்கைகளூடு இனங்காணப்படுவதை தடுக்க சிங்களப் பேரினத் தேசிய ஊடகங்கள் முக்கி முழங்குவதில் இருந்து.. அவரின் செயற்பாடுகள் சிங்களப் பெரிந்தேசிய இனத்தின் பேரினவாத நிலைப்பாடுகளை பாதுக்காகவும் தக்க வைக்கவும் எவ்வளவு உபயோகம் ஆகிறது என்பதை விளங்கிக் கொண்டு.. புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இந்த ஆபத்துக்களில் இருந்து தாயக தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து ஒதுங்காமல் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்.

58 ஆயிரம் வாக்குப் பெற்ற சுமந்திரனுக்காக அழும்.. தமிழ்மிரர் ஒரு இலட்சம் வாக்குப் பெற்ற விக்கிக்காக அழாது. 80 ஆயிரம் வாக்குப் பெற்ற அனந்திக்காக அழாது. 70 ஆயிரம் வாக்குப் பெற்ற சிறீதரனுக்காக அழாது. ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களின் இதயத்தில் உள்ளதை முன்வைத்து அரசியல் செய்ய முனைகிறார்கள். சுமந்திரன்.. தமிழ் மக்களின் இதயத்தை சிங்களவர்களுக்காக சிதைக்கும் அரசியலை முன்னெடுக்கிறார். இதில் இருந்து சுமந்திரனின் 58 ஆயிரம் வாக்கும் வெற்றியும் இப்போ சந்தேகத்தையே கிளப்புகிறது. இந்த வாக்குப் பின்னும் வெற்றிக்குப் பின்னும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் நிழல் கரங்கள் செயற்பட்டுள்ளதை இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது என்றால் அது மிகையல்ல.

சுமந்திரன் சம்பந்தன் தொடர்பில் எல்லா தமிழ் மக்களும் மிகவும் அவதானமாக எச்சரிக்கையாக இருந்து அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தொடர் வாக்குறுதித் தோல்விகளை சந்தித்து வரும் இவ்விருவரும்.. தமிழ் மக்களின் தாயக அரசியலை தொடர்ந்து நலினப்படுத்தும் சிங்களப் பெரிந்தேசிய பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கும் ஹிந்திய வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கும் பாதுகாப்பும் நுழைவு அனுமதியும் ஒத்துழைப்புமே நல்கி வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால்... தமிழ் மக்களுக்கு சொந்தமாக ஒரு அரசியலே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும். அதன் பின் அங்கு சனநாயகம் என்பதே தமிழ் மக்களுக்கு இருக்காது. அதனை நோக்கி கொண்டு செல்வது தான் தமிழ்மிரர் போன்ற போருக்கும் பின் உதயமான சிங்களப் பெருந்தேசிய பேரினவாத ஊடக ஊதுகுழல்களின் கிளை விரிவாக்கமாகும். சிங்களப் பேரினவாத சிந்தனைகளை தமிழ்மக்களிடம் நாசூக்காக விதைக்கவே இவை உருவாக்கப்பட்டுள்ளன என்ற எச்சரிக்கையும் அவதானிப்பும் தமிழ் மக்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:36 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க