Friday, March 19, 2010

சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?! (இது ஒரு சென்சிற்றிவ் மாற்றர்)

இது உங்கள் வாழ்விலும் பல தடவையோ அல்லது சில தடவையோ வந்து போயிருக்கலாம். இருந்தாலும் யாரும் இதைப் பற்றி பொதுவாகப் பேசுவதில்லை. ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற அடிப்படையில் குருவிகளின் வலைப்பதிவில் இப்பதிவை இடுகிறேன்.

இப்போ நீங்கள் வெளியில் போகும் போதோ பேரூந்தில் போகும் போதோ வேலையிடத்திலோ பள்ளியிலோ மனித ஆணின் இணைப்பாலாரான பெண்களை சாதாரணமாகக் காண்பீர்கள் தானே. அவர்களைக் கண்டால் கண்கள் பார்க்கத்தான் செய்யும்.(என்ன ஒரு ஜொள்ளுப் பார்வை.. கண்ணால் பார்க்காமல் காண முடியாது தானே. அதைத்தான் சொல்ல வந்தன்.)

இப்போ பிரச்சனை பெண்களைப் பார்ப்பதில் அல்ல. பெண்கள் குறிப்பாக (மேலை நாடு, கீழை நாடு என்றில்லாமல்) இந்த விடயத்தில் அவர்கள் யாருக்கும் குறைவைப்பதில்லை. என்னடா விசயத்தைச் சொல்லாம அலட்டிக்கிட்டு இருக்கான் என்று பார்க்கிறீங்களா.. சொல்லக் கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு சொல்லனும் போலவும் இருக்குது.



சரி வேணாம் இந்தப் பீடிகை.. சொல்லிடுவமே.(சொல்ல வேண்டியதில் அரைவாசியை மேலுள்ள படம் சொல்லிடுது.) அதுதாங்க.. வேலையிடத்திலோ.. பள்ளியிலோ.. பொது இடத்திலோ பெண்கள் சிலர் தங்களின் "மார்பு இடைவெளியை" (Cleavage) பெரிதாகக் காட்டிக் கொள்ளும் வகையில் உடையணிந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருக்க.. இந்தக் காட்சியை கண்கள் காணாமல் கண்களை கட்டுப்படுத்துவது என்பது கடினம். இவ்வாறு உடம்பு பாதி ஆடை பாதி என்று வரும் பெண்களிடம் எவ்வாறு ஆண்களின் நல்லெண்ணங்களை தற்காத்துக் கொள்வது.. எப்படி கண்மணியை அலைபாயாது நிலைநிறுத்துவது என்பதுதான் எனக்கு தெரிஞ்சாக வேண்டிய அந்த உண்மை.

சிலவேளைகளில் இவ்வாறு வரும் பெண்களோடு நேர்முகமாக பேச வேண்டிய சூழல்கள் எழுகின்றன. குறிப்பாக வங்கிகளில் வானூர்தி பயண அலுவலங்களில் விடுதிகளில் பிற அலுவலங்களில் வரவேற்பாளர் பீடங்களை அலங்கரிக்கும் பெண்கள் இவ்வாறு உடையணிந்திருப்பது ஏறக்குறைய வழமை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ஒரு இளவயசு மனசும் கண்ணும் இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு இறக்கை கட்டிப் பறப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது..??!

போடா லூசு.. இவனே.. ஏன் அதனைக் கட்டுப்படுத்தனதும் என்று நினைக்கிறா. அவங்களே இலவசமா கடைவிரிக்கும் போது.. சுதந்திரமாக பறக்க விடுறது தானே என்று நீங்கள் பதிலுக்கு கேட்பதும் புரியுது. ஆனால் அங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆண்கள் அவ்வாறு சுதந்திரமாக பறக்க விட்டால் பெண்கள் அவர்களை காவாலி கழிசடை.. உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா என்றெல்லோ மனசுக்குள் திட்டிக்குறாங்க.

அப்படி இருக்க.. இந்த தர்ம சங்கடத்தில் இருந்து எப்படி வெளிவாறது. எப்படி.. இப்படியான பெண்களின் கவனக்கலைப்பான் செயற்பாட்டில் இருந்து அதிரடியாக தப்பித்து காரியத்தை சாதிப்பது..??! இதுதாங்க தெரிய வேண்டிய விடயம்.

சரி அது போக.. இன்னொன்னு... நான் ஆரம்பத்திலேயே கேட்டது போல.. பெண்கள் ஏன் தான் இப்படி கடைவிரிச்சிக்கிட்டு போறாங்க.. கடையையும் விரிச்சிட்டு.. ஆண்களிடம் கண்ணியமும் எதிர்பார்க்கிறதுதாங்க அநியாயமா இருக்குது..!

சரிங்க.. இத்தோடு எனக்கொரு "உண்மை தெரிஞ்சாகனும்" என்ற இந்த பதிவை நிறைவு செய்கிறன். நீங்க தாங்க மனசை திறந்து உண்மையைச் சொல்லனும். என் கண்களின் கண்ணியத்தை காக்கனும்.

நன்றிங்க. குருவியின் வலையில் நெடுக்காலபோனவன்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:32 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க