Monday, February 14, 2011

புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களை நாடி வரும் சிறீலங்கா அரசு சார்ந்து நிற்கும் செயற்பாட்டாளர்களிடம் ஒரு வேண்டுகோள்.



கே பி (குமரன் பத்மநாதன் - செல்வராசா பத்மநாதன்) மற்றும் அவரின் அமைப்புக்கள் மற்றும் சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னாள் இன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வு தொடர்பில் அக்கறை கொண்டு செயற்படுவதாகச் சொல்வோரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

உங்கள் செயற்பாடுகளை நீங்கள் காலத்தின்.. உங்களின் தேவை கருதி சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறீர்கள். அதன் மூலம் மக்களும் போராளிகளும் நன்மை அடைவது உறுதி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமன்றி உங்களின் செயற்பாடுகள் மக்கள் மற்றும் போராளிகளின் நலன் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர எதிரிக்கு போராட்டத்தை அதன் சக்திகளை காட்டிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது.

அதுமட்டுமன்றி நீங்கள் புலம்பெயர் மக்களை நோக்கி ஓடி வர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு அரசு சார்ந்து நின்று செயற்படுகிறீர்கள். அந்த அரசை இந்த உலகம் அங்கீகரித்து நிற்கிறது. அந்த அரசுக்கு யுத்தம் செய்ய இந்த உலகம் பல வழிகளில் உதவி இருக்கிறது. அந்த வகையில் அந்த உலகம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் போரால் பாதிக்கப்பட்டு வாழ்க்கைகளை தொலைத்துள்ள போராளிகள் தொடர்பிலும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பிலும் அக்கறை செய்ய வேண்டியது கட்டாயம். கோடிக்கணக்கில் வாராவாரம் ஆயுதங்களை அனுப்பி யுத்தத்தை நடத்தியவர்கள்.. அதே கோடிகளை வாரா வாரம்.. அனுப்பி யுத்த அழிவுகளையும் புனர்நிர்மானம் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு அரசோடு சார்ந்து இயங்கும் நீங்கள் எல்லோரும் சர்வதேச உதவிகளை நாடிச் சென்று அவற்றின் மூலம் மக்களின் போராளிகளின் மீட்சிக்கு உதவி செய்வதோடு போரால் சிதைந்து போயுள்ள தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

அதைவிடுத்து புலம்பெயர் தமிழ் மக்கள் குறிவைத்து சிங்கள அரசின் கபட நோக்கங்களுக்காக காய் நகர்த்தும் ஏஜெண்டுகளாக செயற்படுவதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் இந்தப் புலம்பெயர் மக்கள் நோக்கிய கூக்குரல்களே நீங்கள் இதய சுத்தியோடு மக்களை போராளிகளை நோக்கி வேலைத்திட்டங்களை செய்கிறீர்களா என்று சந்தேகிக்க வைக்கிறது. உங்களின் நோக்கம் நிறைவேற வேண்டின் நீங்கள் நாட வேண்டிய இடம் சர்வதேச சமூகம். இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா.. பாகிஸ்தான்.. சீனா.. தாய்லாந்து.. மலேசியா.. நோர்வே.. ரஷ்சியா என்று பல. இவர்கள் எல்லோரும் சேர்ந்து யுத்தத்தை முன்னெடுக்க முடியும் என்றால் ஏன் அந்த யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை மனித இடர்களை போக்க அவர்களை நீங்கள் நாட முடியாது..???!

விடுதலைப்புலிகளின் அழிவோடு புலம்பெயர் மக்களின் தாயகப் பங்களிப்பு தீர்ந்து போய்விட்டது. புலிகளை அழித்தவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் தான் எனி போரின் விளைவுகளில் இருந்தான மீட்சிக்கும் உதவ வேண்டும். புலம்பெயர் மக்களால் அந்த அழிவுகளை மீட்சிப்படுத்தக் கூடிய அளவுக்கு நிதி உதவிகள் செய்ய முடியாது. ஏனெனில் உலக நாடுகள் சேர்ந்து செய்த பல கோடி டொலர்களை கொட்டி செய்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள அழிவுகளை அந்த டொலர்களைக் கொண்டு தான் ஈடு செய்ய வேண்டும். அதையும் புலம்பெயர் மக்களிடமே புடுங்க நினைப்பது.. உங்களின் செயற்பாட்டு இதய சுத்தியை கேள்விக் குறியாக்கி நிற்கிறது.

நன்றி.

(யாழ் இணையம்.)

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:35 AM

1 மறுமொழி:

Anonymous YOGA.S.Fr செப்பியவை...

சாட்டை!!!!!!!!!!!!!!!!!!!!!வெல் செட்!!!!!!!!

Tue Feb 15, 11:26:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க