Friday, April 08, 2011

குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்?பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுகிறது... ஒருவர் எழும்பிப் பேசுகிறார்.. பெண்களின் தலையெடுப்புக்களால் உயர் தொழில்களில் ஆண்களின் பங்களிப்பு வீழ்ச்சி கண்டு கொண்டு வருகிறது. குறிப்பாக உயர்கல்விக்குள்ளும்.. பிரதமை தொழில்களுக்குள்ளும் பெண்களின் ஆதிக்கம் கூடி இருக்கிறது. இதனால் ஆண்களிற்கான சம வாய்ப்பு இழக்கப்படுகிறது அல்லது அதற்கு தடை ஏற்படுகிறது. இதனை நான் சொல்வதால் நான் பெண்களை அவர்களின் முன்னேற்றத்தை எதிர்க்கிறேன் என்பதல்ல பொருள். ஆண்கள் சம வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறி அமர்ந்தார். அவர் வேறு யாருமல்ல பிரித்தானிய ஆளுங்கட்சி அமைச்சர். இது சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்.

எனி நாங்கள்.. பெண்களை ஆண்களை மதிக்காததற்கு உள்ள காரணங்கள் சிலவற்றை பார்ப்போம்..

1. பெண்களை இந்த சமூகம் ஆண்களுக்கு சரியாக இனங்காட்டுவதில்லை. பதுமைகள்.. மென்மைகள்.. கிலுகிலுப்பூட்டிகள்.. எல்லாம் நல்லதாகச் செய்யக் கூடிய திறமைசாலிகள்.. பொறுமைசாலிகள்.. குடும்பப் பொறுப்புள்ளவர்கள்.. என்று சொல்லி அதற்கேற்பத்தான் இந்த வியாபார உலகத்தில் அவர்கள் இனங்காட்டப்படுகின்றனர். பெண்கள் சக மனிதர்கள் என்ற வகையில் அவர்களின் இயல்பான குணங்கள் அம்சங்கள் தொடர்பில் ஆண்கள் சரியாக அறிந்து கொள்ளாமை அல்லது அறியச் செய்யபடாமை பெண்கள் ஆண்கள் மீது அதிகம் செல்வாக்குச் செய்ய கூடிய ஏது நிலையை உருவாக்குகிறது.

உதாரணத்திற்கு: இன்றைய நிலையில் ஒரு பெண் ஒரு ஆணை அடிக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.. அவன் எங்க கையை வைச்சானோ.. என்ன துணிச்சலான பெண்.. பெண் விடுதலைக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு.. பெண் ஆணிற்கு சமன்... பெண்கள் இன்று எதையும் செய்ய துணிந்துவிட்டார்கள் இப்படித்தான் அதிகம் பேசப்படும். ஆனால் உண்மையில் அவள் ஒரு குடிகாரியாக.. போதைக்கு அடிமைப்பட்டவாளாக இருப்பாள். கணவனின் காசைத் திருடப் போய் அவன் அதை தடுக்கப் போய் அங்கு நடந்த கைகலப்பாக கூட அது இருக்கலாம்.

2. பெண்களின் குடும்பப் பங்களிப்பு குழந்தை கணவன் வீடு பராமரிப்பு என்ற நிலைக்கு அப்பால் பொருண்மியத்திலும் அமைத்துவிட்டுள்ளதோடு அநேக நாடுகளில் குழந்தைகளின் பாராமரிப்பில் கல்வியில் பெண்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக எம்மவர் மத்தியில் ஆண்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளின் நாளாந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலை. இது ஒரு மோசமான நிலை. அந்தத் தந்தை கல்வியியல் பராமரிப்பியல் ரீதியில் குடும்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல். அவருக்கு வேலைக்குப் போறது மட்டும் தான் வேலை. இது மனைவிகள் இலகுவாக பிள்ளைகளிடம் தந்தை தொடர்பான தவறான எண்ணத்தை ஏற்படுத்த அநேக இடங்களில் பாவிக்கப்படுகிறது. இது ஒரு நாள் அந்த குழந்தைகளோடு அவளும் கணவனை வெறுக்க தண்டிக்க வகை செய்யும். அண்மையில் தாயை தந்தை பேசிட்டார் என்று மகன் தந்தைக்கு அடித்து.. பொலிஸ் வந்த சம்பவங்கள் கூட புலம்பெயர் நாடுகளில் நம்மவர்களால் பதிவிடப்பட்டுள்ளது.

உ+ம்: உங்கப்பாக்கு எதுவும் தெரியாது. நான் தான் பேரண்ஸ் மீற்றிங்குக்கு வரணும்.

3. ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் வழங்கப்படும் அறிவியல் ரீதியில் ஆராயப்படாத பெண்கள் பற்றிய "கொசிப்" செய்திகள். இந்த யாழ் இணைய களத்திலையே பாருங்கள்.. ஏன் இன்றைய தமிழ் இணைய ஊடகங்களைப் பாருங்கள்.. அவற்றில் எல்லாம்.. பெண்களை தாஜா பண்ண இத்தனை வழிமுறைகள்... பெண்களுக்கு கூஜா தூக்க இத்தனை வழிமுறைகள்.. பெண்களை கட்டிலில்.. சுகப்படுத்த இத்தனை வழிமுறைகள்.. இப்படி பெண்களை நீ ஏதாவது செய்து சந்தோசப்படுத்தினால் தான் நீ அந்த சில அற்ப சந்தோசங்களை வாழ்க்கையில் பெண்களிடத்தில் அனுபவிக்க முடியும்.. என்பதான சமூகப் பாடம் எடுத்தல்கள்.

இது ஆண்கள் பெண்களின் முன் கோமாளிகளாக போய் நிற்க வழிவகுக்கிறது. வீணாக வழியும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இதனை பெண்கள் தங்கள் பலமாக ஆண்களின் பலவீனமாக இனங்கண்டு ஆண்களை மிக மோசமாக நடத்த தூண்டப்படுகின்றனர்.

4. சமூகச் சட்டங்கள்.. சமூக நடைமுறைகள் பெண்களுக்கு அளிக்கும் அநியாய முன்னுரிமைகள்.

ஒரு கணவன் ஒரு மனைவியை அடிக்கிறான் என்றால் அதை காட்டி அந்தப் பெண் இந்த உலகையே உலுப்ப முடியும். ஒரு ஆணை பெண் வன்முறைக்கு உள்ளாக்கினா கேட்க நாதியில்ல என்ற நிலை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணோடு கட்டிலைப் பகிர்ந்துவிட்டு அவனை ஆட்டிப்படைக்க முடியும். (உ+ம்: கிலிங்கடனும் மோனிக்காவும்.. டக்கிளசும் - மகேஸ்வரியும்) ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கட்டிலை பகிர்ந்துவிட்டு சட்டத்தூடு எதனையும் செய்ய முடியாது. உடனே நீ தான் அவள் கணவன்... அவள் பிள்ளைக்கு அப்பா என்று கட்டுப்போட்டு விடுவார்கள்.

5. எதற்கும் ஆண்கள் மீது குற்றத்தை சுமத்தும்.. சமூக நடைமுறைகள். ஒரு பெண் மற்றவர்கள் அறியாமல் பல ஆண்களோடும் தொடர்வு வைச்சிட்டு.. மற்றவர்கள் அறிய ஒரு ஆணோடு வாழ்க்கை நடத்தினால்.. அவள் உத்தமி...! அங்கு அவளை சந்தேகிக்க மாட்டாது இந்த உலகம். ஆனால் ஒரு ஆண் ஒரு இரண்டு வருசம் வெளிநாட்டில இருந்திட்டு வாறான் என்று வையுங்களேன்.. உடன.. தம்பி எப்படியாம்.. பழக்க வழக்கங்கள் எப்படியாம்.. என்ற சந்தேகப் பார்வை தான் கேள்விகளாக முளைக்கும். அவை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். இது பெண்கள் களவாக பிற ஆண்களோடும் வாழ்க்கை நடத்த உதவுவதால்.. கணவன்.. காதலன் என்று ஒருவர் மீது அன்பு செய்ய வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை இல்லாமல் செய்கிறது. தாலிக்கு ஒருத்தன்.. வேலிக்க இன்னொருத்தன்.. இப்படித்தான் இன்றைய பெண்களின் வாழ்க்கை நிலை. இவர்கள் எப்படி கணவனை மனிசனா மதிப்பினம்.

6. பெண்கள் தொடர்பான சரியான அறிவியல் அறிவை ஆண்கள் பெறாமை. இது முக்கியமான விடயம். பெண்கள் தொடர்பான உடற்கூற்றியல்... நடத்தையியல்.. உளவியல் பற்றிய சரியான அறிதல் ஆண்களிடம் இல்லை. அவளை இவனால அடக்க முடியல்ல. அவள் ஊரெல்லாம் மேஞ்சு கொண்டு திரியுறாள்.. இப்படி ஊரில் பெரிசுகள் கதைக்குங்கள். அதென்ன அடக்க முடியவில்லை.. என்றால்... அவளின் உடல் தேவைகளை அடக்க முடியவில்லையாம். அதுமட்டுமல்ல.. அவளின் உடுப்புத் தேவைகளையும் நகைத் தேவைகளையும் தானாம். இது அக்கால பெண்களுக்கு என்றால் இக்கால பெண்களுக்கோ.. தேவைகள் பல. வேலை இடத்தில் இருந்து நைட் அவுட்.. கிளப்பிங்.. பப்பிங்.. அது போக.. கொலிடே மேக்கிங்.. அப்படி இப்படின்னு.. காசை கொட்டி உடலை வருத்தி பெண்களுக்கு சதா சேவகம் செய்து கொண்டிருக்கனும். அப்பதான் அவை அவரோட இருப்பினம். இல்ல இன்னொருத்தரட்ட போயிடுவா. உண்மையில்.. இங்கு அறியாமைகளும்.. சமூக அழுத்தங்களுமே அந்த ஆணை அவனின் சுதந்திரத்திற்கு அப்பால் அவளோடு கட்டிப் போடுகிறது. பெண்கள் பற்றிய சரியான அறிவியல் அறிவிருந்தால்.. அதனை அவர்களிடத்தில் சரியாக பாவிக்கும் திறனிருந்தால்.. இப்படியான ஏய்ப்புகளை இட்டு ஆண்கள் கலங்கத் தேவை இல்லை.

7. அவள் பொம்பிளை என்ற ஒரு இரக்கப் பார்வையை உலகம் ஊட்டி உள்ளமை. (காதல்.. அது இதென்றும் கூட). இவை ஆண்களை பெண்களோடு கட்டிப்போடுகின்றன். பெண்கள் மீது அளவு கடந்த அன்பை கொட்ட வைக்கின்றன. அவையே பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்தும் முதன்மைக் காரணியுமாகின்றன. எதுவும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம்ம பெரியவங்க சொன்னது பெண்கள் விடயத்தில் ஆண்களுக்கு நன்கு பொருந்தும்.

8. அந்தஸ்து.. தகுதி.. கல்வி நிலை. இன்று அநேக பெண்களின் கல்வி மற்றும் தொழில் அந்தஸ்து.. அரசியல் அந்தஸ்து அவர்களின் கணவர்களை விட உயர்வாக உள்ளனர். குறிப்பாக புலம்பெயர் நாடுகளுக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு அவர்களை கலியாணம் செய்துள்ள பெண்களில் பலர் கல்வியில் தொழிலில் கணவனை விட உயர்வான நிலையில் இருக்கின்றனர். விசாவுக்காக அமையும் இந்த வாழ்கைகள்.. விசா அமைந்த பின்.. செளகரிகத்துக்காக பிற தகுதியான ஆண்களை தேடும். இதை நம் கண் முன்னால் பல இடங்களில் காண முடிகிறது. திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல.. பெற்றோரோடு கூடி ஊரில் இருந்து வரும் பெண்கள் கூட.. முதல் ஓரிரண்டு ஆண்டுகள்.. ஆங்கிலமும் பேச வராம.. இருக்குங்கள். அப்புறம் பள்ளியில் சேர்ந்து கோட் சூட் போட்ட உடன.. அவர்களின் நினைப்பு.. அளவு கடந்து போவதோடு.. தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கள்.. பெரிய இடத்து தொடர்புகள்.. என்று எங்கையோ போயிடினம். இவையை தப்பித் தவறி பெற்றோர் ஒரு சாதாரண ஆணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் என்னாகும்..????! (இந்த நிலை குறிப்பாக ஊரில் இருந்து வரும் ஏழை நடுத்தர வர்க்கப் பெண்களிடம் அதிகம் உள்ளது.)

9. குடும்ப அறிவற்ற ஆண்கள். பல ஆண்களுக்கு திருமணம் செய்வது ஏன் என்ற சரியான விளக்கம் இல்லை. சிலர் அதை விளங்க முடியாத வயதில் கூட திருமணம் செய்கின்றனர். திருமணம் மட்டுமல்ல.. காதலித்தலும் கூட. வெறுமனவே இரண்டு ஆண்டுக்கு ஒருக்கா குட்டி போடவல்ல.. திருமணம் என்பது.

குடும்பம் என்பது ஒரு நிறுவனம் போன்றது. அங்கு அன்பை முதலீட்டாக்கி.. இலாபத்தில் அதனை பன்மடங்கு பெருக்க வேண்டும். இடையில் அந்த நிறுவனம்.. சமூகத்திற்கும்.. தமக்கும் சேவையும் செய்தாக வேண்டும். கணவன்.. தலைமை நிர்வாகி என்றால் மனைவி தலைமை முகாமையாளர். இல்ல மாறியும் இருக்கலாம். பிரச்சனை பதவியல்ல. றோல். யார் எதை எப்ப எங்க செய்யனும் என்ற முடிவும்.. அதை செய்யும் நிலையும்.. சாத்தியப்பாடும். நிறுவனத்தில் ஒரு முதன்மை அதிகாரி தவறிழைத்தால்.. சரியான காரணங்கள் இருப்பின் அவரை தூக்கி எறியலாம். குடும்பத்தில் அது நல்லதா என்றால்.. நிச்சயமா.. ஆணோ பெண்ணோ.. குடும்ப நிறுவனத்தின் பொதுவான சட்டதிட்டத்திற்கு அமைய வில்லையோ தூக்கி வெளில போட்டிட வேண்டியதுதான். அதன் பின் நிறுவனத்தை மறுவடிவமைத்து அதன் பணியை.. அதாவது எங்கள் வாழ்க்கையை சமூகத்துக்கும் எமக்கும் மகிழ்ச்சி தரவல்லதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரின் தவறுக்காக வாழ்க்கை என்ற அந்த நிறுவன அடித்தளத்தை தகர்க்கக் கூடாது.

எனவே ஆண்களே,, பெண்களுக்கு அஞ்சி வாழும் நிலை களைந்து கெஞ்சி வாழும் நிலை போக்கி.. மிஞ்சி போகும் நிலை தவிர்த்து வஞ்சி இசைந்தால் இசைந்து.. இசையவில்லை என்றால் தனிச்சோ.. எப்படியோ.. ஒழுக்கம் பேணி.. மகிழ்ச்சியோட.. நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை இந்தப் பூமிப்பந்தில் அமைவது அபூர்வம். அதை பெண்களுக்காக என்று வீணடிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவும் நல்ல குடும்பமாவும் சமூகமாவும் சாதிக்க பல இருக்குது.

நன்றி. (யாழ் இணையம்.)

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:15 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க