Sunday, July 14, 2013

நளனும் நளவெண்பாவும் படிச்சுக் கிழிச்ச வரலாறு.

மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா.

அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..!

மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்..

அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்...

அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல..

மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன்.

அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா.

மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்...

அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அப்பா வரவிட்டு சொல்லிக் கொடுத்து அடிதான் வாங்கித் தருவன்.

மகன்: அன்னம் எப்படி இருக்குமென்று கேட்டால் அடிவாங்கித் தாறன் என்றாங்களே. இதில பாட்டுக்கு வேற நயமும் படிக்கனுமாமில்ல... என்று நினைச்சுக் கொண்டு..

அம்மா.. நயம் என்றால் என்னம்மா...

அம்மா: அங்க பொழிப்புரையில போட்டிருக்கும் பார்த்துப் படி...

மகன்: நயம் என்றால்..பொழிப்புரையில் பார்த்துப் படி என்று அர்த்தமாம்மா...

அம்மா: உனக்கு கொழுப்புக் கூடிப் போச்சுது. கொப்பர் வரட்டும்.

மகன்: அன்னம் என்னென்று கேட்டால் அடிவாங்கித் தாறாவாம். நயம் என்னென்று கேட்டால் கொழுப்புக் கூடிப் போச்சாம்.. அப்படின்னா.. எதுக்கு இந்த நளவெண்பாவைப் படிக்கனும்...??! படிச்சா மட்டும் கொழுப்பு குறைஞ்சிடுமா என்ன... என்று யோசிச்சுக் கொண்டே.. இருக்க..

அம்மா: என்னடா.. பாட்டும் பொருளும் படிச்சிட்டியா..

மகன்: படிச்சிட்டேம்மா.

அம்மா: எங்க ஒரு பாட்டிற்கு..பொருள் சொல்லு பார்ப்பம்..

மகன்: அன்னம் வந்து நளனின் ரோமான்ஸ் செய்தியை தமயந்திக்குச் சொல்ல அதை கேட்டு.. தமயந்தி கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடந்து கொண்டு.. காதல் மயக்கதில் விண்ணைத் தாண்டி வருவாயா படப்பாடலை..முணுமுணுங்க.. அதைக் கண்ட அவங்க அப்பா.. பொம்பிளைப் பிள்ளைன்னும் பார்க்காம.. முதுகில ஒரு போடு போட.. சத்தம் கேட்டு..  ஓடி வந்த...அவங்க அம்மா..என்னடி உனக்கு கொழுப்புக் கூடிப்போச்சாடி.. காதலாம் காதல்.. படிக்கிற வயசில.. யுனிக்குப் போற வயசில மாப்பிள்ளை கேட்குதாடி.. என்று கத்த...



அம்மா: அட இடிவிழுந்தவனே.. இதையாடா இவ்வளவு நேரம் படிச்சா..

மகன்: இது வேற.. இடிவிழுந்தவனே... அதென்னம்மா இடிவிழுந்தவனேன்னா..

அம்மா: ஏண்டா சண்டாளா  என்ர உயிரை வாங்கிறாய்..

மகன்: அதென்னெம்மா சண்டாளா என்றா...

அம்மா: மூதேவி மூதேவி.. நீ திருந்த மாட்டா.. கொப்பர் வரட்டும். என்னால உன்னோட மல்லுக்கட்ட முடியாது.

மகன்: அட இதுவேறையா..... மூதேவின்னு இன்னொன்று..

அம்மா நீங்க நளவெண்பா படிச்சனீங்களா..

அம்மா: ஆமாடா முண்டம். அது சரி இதையெல்லாம் எங்க இருந்து பொறுக்கினனி..

மகன்: எல்லாம் நளனும் நந்தினியும் பட சீனில இருந்து தாம்மா. அது தான் இவ்வளவு நேரமும்.. ஐபாட்டில பார்த்துக்கிட்டு இருந்தன். அதிலையும்.. நளவெண்பாவைத்தான் உல்டா பண்ணி இருக்காங்க.. தமயந்திக்கு பதில நந்தினின்னு போட்டிருக்காங்கன்னு நினைச்சிட்டேம்மா.

அம்மா: எங்க.. எனக்கும் ஒருக்கா போட்டுக் காட்டேண்டா...!

மகன்: (மனசுக்குள்) அடப்பாவி அம்மாவே. நீயுமா..!

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:26 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க