Tuesday, March 26, 2013

கெஞ்சலும் கொஞ்சலும்...

alone-sad-boy-bench-lack.jpg


சாரி டார்லிங் கொஞ்சம் லேட்டாயிட்டு..... அவன் கெஞ்சிக் கொண்டே நின்றான்.

டிலோ.. பார்க்கின் பெஞ்சில்.. கோபத்தின் உச்சியில் இருந்து கொண்டிருந்தாள்.

என்ன.. வழமையா டார்லிங் என்றாள் கூலாகி குலாவுவாளே.. இன்றைக்கு என்ன காறாரா இருக்கிறாள்... என்று நினைத்த நிலோசன்..

அவளை நெருங்கி.. என்ர செல்லமெல்லே.. பப்புச்சுக்குட்டியில்ல.... என் கூட என்னம்மா கோவம்.. என்று வானத்தை அங்கலாய்த்திருந்தவளின் முகத்தை தொட்டு.. தன்னை நோக்கி திருப்ப முயல.. கோபத்தில் அவன் கையை தட்டிவிட்டாள் டிலோ.

என்ன பண்ணுறது.. இன்றைக்கென்று கடுப்பேத்திறாளே.. ம்ம்.. கொஞ்சம் மெளனமா இருப்பம். அடங்கிடுவாள். வீட்டில அம்மா அப்பா முன்னாடி நான் தான் ராஜா.. இவ முன்னாடி இப்படி ஜீரோவா இருக்க வேண்டி இருக்கே.. என்று தன்னைத் தானே நொந்து கொண்ட நிலோசன்.. பொறுமைக்கு இடமில்லாம..

டார்லிங்.. டிலோ.... பிளீஸ்.. பேசு டார்லிங்.. அப்படி என்னதான் தப்பு பண்ணினேன்.. உனக்கு..! சொன்னாத் தானே தெரியும்.. இப்படியே உம் என்றுகிட்டு இருந்தா ஒண்ணும் ஆகப்போறதில்ல.. என்று கொண்டே அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவளின் சட்டையில்... முகத்தை துடைக்க முனைந்த போது...

அதனை சற்றும் விரும்பாத டிலோ.. கெட் அப்.. கெட் லொஸ்ட்... என்று திட்டிக் கொண்டு எழுந்து எதிர் முனையில் நடக்க ஆரம்பித்தாள். நிலோசன் அவளைப் பின் தொடர்ந்து.. டிலோ.. வட் இஸ் திஸ்.. வட் கப்பின் ரு யு.. என்று கெஞ்சல்களோடு அவளைப் பின் தொடர்ந்தான்.

எனி.. என்ன நடக்க இருக்குது.. ஒண்ணுமே இல்ல. நீங்க இங்க இருந்து..போயிடுங்க. எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக்கத் தெரியும்... என்றாள் டிலோ காட்டமாக.

என்ன டிலோ இப்படிச் சொல்லுறா. நேற்று நல்லாத் தானே இருந்தா. அதுக்குள்ள என்னாச்சுது. உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சது முதல்.. உன்னை சந்தோசமாத்தானே வைச்சிருக்கிறன்.. என்ன குறை வைச்சன்... வை திஸ் கொலைவெறி... பிளீஸ் டிலோ...

அதுதான் சொல்லிட்டீங்களில்ல.. சந்தோசமா வைச்சிருந்தீங்கன்னு. குறையே வைக்கல்லைன்னு. இது தான் நீங்க எனக்கு அளிக்கிற சந்தோசமன்னா.. அது எனக்குச் சரிப்பட்டு வராது. சோ.. நீங்க போயிடுங்க. நான் என் வழியில போயிடுறன்.

வாட்.. என்ன பிரேக் அப் முடிவோட வந்திருக்கிறீர் போல டிலோ.

ஓம் அப்படி என்று தான் வைச்சுக் கொள்ளுங்களேன். என்னால.. உங்களோட சந்தோசமா வாழ முடியுமுன்னு நினைக்க முடில்ல...அவ்வளவு தான்.

ஏன் எதுக்கு அப்படிச் சொல்லுறீர் டிலோ...

உங்க ஆம்பிளையளிட புத்தி இருக்கே.. அது சுயநலம் பிடிச்சது. நீங்க நினைக்கிறது தான் எங்களுக்கு சந்தோசம்.. என்ற கற்பனை உங்க ஆம்பிளையளுக்க நிறைஞ்சு போய் கிடக்குது. எங்கட சந்தோசம் என்னென்னு.. உங்களுக்கு அறிய அக்கறையும் இல்லை.. நேரமும் இல்லை. அப்படி இருக்கிறப்போ.. பிரேக் அப்.. எவ்வளவோ மேல். பிளீஸ்.. லீவ் மீ... எல்லாம் போதும்... என்றாள் கண்டிப்பான குரலில்.

என்ன டிலோ சொல்லுறீர். கட்டினா உங்களைத்தான் கட்டுவன். உங்களோட மட்டும் தான் வாழுவன்.. நீங்கள் தான் எனக்கு எல்லாம்.. எண்டீர். இப்ப என்னடான்னா.. திடீர் என்று ஆம்பிளை.. பொம்பிளை என்றீர்.. என்னாச்சுது உமக்கு...

எனக்கு இப்ப தான்.. ஆம்பிளையளைப் புரிய முடிஞ்சிருக்குது. அது தான். இவ்வளவு நாளும் அது முடியல்ல.. அதால உங்களை லவ் பண்ணித் தொலைச்சிட்டன். எனி அந்த தப்பைச் செய்யமாட்டன்.

அவள்... இப்படித் திட்டிக்கொண்டிருக்க.. நிலோசனின்.. ஐபோன் சிணுங்கியது.. அந்தச் சூடான சூழலிலும்... அழைப்பை ஏற்று..காதில் வைத்தவன்.. எதிர் முனையில்.. காய்(Hi) படி(buddy).. தமிழ்நாடு கைஸுக்கு சப்போட்டா ஒரு புரட்டஸ்ட் செய்யப் போறம்.. வாறியா என்ற குரலைக் கேட்டதும்.. டோண்ட் வொறி படி..இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க நிற்பன் என்றபடி.. வாழ்த்துச் சொல்லி போனைக் கட் பண்ணினான் நிலோசன்.

டிலோ.. ஐ டோன்ட் அண்டஸ்ராண்ட் யு நவ். எனக்கு இப்படி ஒரே.. லவ் லவ் என்று உம்மோட மட்டும் ரைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்க முடியாது. எனக்கும் சொந்தக் கடமை.. வீட்டுக் கடமை.. தேசக் கடமை இருக்குது. அவற்றையும் செய்யனும். கவனிக்கனும். நான் இப்படித்தான். உமக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இதுக்கு மேல உம்மோட நின்று கதைச்சுக்கிட்டு இருக்க எனக்கு நேரமில்ல. இப்ப புரட்டஸ்டுக்குப் போகப் போறன். நம்ம பிரச்சனையை விட்டிட்டு.. நாட்டுப் பிரச்சனையில அக்கறை இருந்தா என் கூட வாரும். இல்லைன்னா உம் முடிவோட நீர் இரும். ஐ  டோண்ட் கெயர் என்றான் அதுவரை அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவன்.. கொஞ்சம் கோபமா.

இவற்றை அமைதியாக கேட்டிக் கொண்டிருந்த.. டிலோ... தொடர்ந்து அமைதியாக நின்று கொண்டிருந்தாள்..

டிலோ.. நான் போகப் போறன். என்ன முடிவெடுத்திருக்கிறீர் சொல்லும் கெதியா... என்று அவசரப்படுத்தினான் நிலோசன்.

நான்.. கொஞ்சம் தனிய இருக்க விரும்பிறன்... நீங்க போக வேண்டிய இடத்துக்கு போகலாம் என்றாள் டிலோ.. காட்டமாக.

ஓகே.. பாய். என்று விட்டு வீறோடு நடந்தான் நிலோசன் பார்க்கை விட்டு.

++++++++

புரட்டஸ்ட்டில்.. கலந்து கொண்டிருந்த போது.. நிலோசனின் ஐபோனின் வாட்ஸ்அப் மெசேஞ்சர்.. குலுங்கியது..

எங்க நிற்கிறீங்கள்.. நான்.. இங்க புரட்டஸ்டில தான் நிற்கிறன். நீங்கள் எங்க நிற்கிறீங்கள்.. என்ற மெசேச்.. டிலோவிடம் இருந்து வந்திருந்தது.

அதைப் பார்த்ததும்.. உள்ளம் முழுக்க.. பெருமிதம் பொங்க.. சி இஸ் மை டியர்... என்ற முணுமுணுப்போடு.... தான் நிற்கின்ற இடத்தை டிலோவுக்கு ரெக்ஸ்ட் பண்ணிவிட்டு புரட்டஸ்டில்.. தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான் நிலோசன்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:21 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க