Monday, June 17, 2013

ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரிக்கு அகவை 80ம்: வாழ் விலாங்கு வாழ வாழ்த்துக்கள்

அகவை 80 இலும்  வாழ் விலாங்கு வாழும்.. ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரியுடன் கேள்வியின் ஒரு செவ்வி..

கேள்வி: வணக்கம் தலைவரே...

சங்கரி: வணக்கம். தலைவர் என்ற இந்த வார்த்தையை உங்களிடம் இருந்து வாங்க கடந்த சில தசாப்தங்களாக.. எத்தினை கடிதம் எழுத வேண்டியதாப் போச்சுது..! இருந்தாலும் அதனை மே 2009 இனை உருவாக்கி.. சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி... தொண்டையை அடைக்கிறது.

கேள்வி: தொண்டையை அடைத்தால்.. நன்றாகச் செருமிக் கொள்ளுங்கள்.  இன்றேல் மூச்சு நின்றுவிடும் சாத்தியம் உண்டு. மேலும்.. அதற்காக நீங்களே பெருமைப்பட்டும் கொள்ளுங்கள். அதுசரி தலைவரே உங்களின் 80 வது அகவை தினத்தில் மலை போல்..மாலைகளும் பொன்னாடைகளும் குவிந்தனவே.. அதைப் பற்றி..

சங்கரி: அது வடக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. இவை சயனைட் குப்பி மாலைகளோ.. எல் எம் ஜி துவக்குகளுக்குப் போடும்.. தோட்டா மாலைகளோ அல்ல. மக்கள் மனதில் நான் குடியிருப்பதன் விளைவாக தோன்றிய அன்பின்பால் பெறப்பட்ட ஜனநாயக மாலைகள்.

கேள்வி: ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி இன்னும் சேடம் இழுத்தபடி.. இன்றோ நாளைக்கோ என்று கிடக்கிறதே.. உங்களோடு அதுவும் செத்துவிடும் என்ற பயம் உங்களுக்கு இல்லையா..??!

சங்கரி: என்ன நான் விரைவில் செத்துவிடுவேன் என்று கேள்வி தம்பி நீர் எதிர்பார்க்கிறீரோ..??! எனது இனத்துக்கு ஒரு முடிவு கட்டாமல் நான் சாகமாட்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணியும் சாகாது.

கேள்வி: எமது இனத்திற்கு ஒரு முடிவு கட்ட இப்போது பலர் புறப்பட்டிருக்கிறார்கள். பொதுபல சேன.. அதுஇதென்று சிங்கள ஆக்களும் சரி.. கடும்போக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளும் குண்டர்களும் சரி.. உங்களுக்கு இன்று மாலைபோட்ட சித்தார்த்தன் போன்றவர்களும் சரி.. உங்களுக்கு 80 அகவை என்று டன் தொலைக்காட்சியில் பறையடிச்ச டக்கிளசும் சரி....! இவர்களோடு எல்லாம்.. நீங்கள் எப்படி போட்டிபோட்டு எமது இனத்திற்கு ஒரு முடிவு கட்டப்போகிறீர்கள்..?!

சங்கரி: ஆயுதம் தூக்காமல்.. சண்டைபிடிக்காமல்.. பிரபாகரனோடவே பகிரங்கமாகப் போட்டி போட்டு வென்றவன் நான். அப்படிப்பட்ட என்னை.. குறைச்சு மதிப்பிடுகிறீர் தம்பி கேள்வி.

கேள்வி: பிரபாகரன் உங்களை எந்த வகையிலும் ஒரு அச்சுறுத்தல் என்று கருதியதில்லையே. ஆனால் நீங்களாக அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு கொழும்பிடம் தஞ்ச அரசியல் செய்ததாகவே மக்கள் நினைக்கினம்..! இப்போ இந்தியா உட்பட்ட வெளிநாடுகளின் உதவியோடு கொழும்பு கண்ட வெற்றியை உங்களின் வெற்றியாக நீங்கள் காட்டுவது மக்களின் நினைப்பை உண்மை என்று எல்லோ ஆக்கிடும்..??!

சங்கரி: புலிகள் தொடர்பில்.. கொழும்புக்கு என்ன ஐநாவுக்கே அறிவுரை சொன்னவன் நான். புலிகளை அழிக்காமல் ஜனநாயகம் மலராது என்று துணிந்து சொன்னவன் நான். அதனை ஆதரித்தும் சிறுவர் போராளிகள் விடயத்தை புட்டு வைச்சு புலிகளுக்கு கொடுத்த சாட்டை அடி உங்களுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால்..  யுனஸ்கோவே அதற்காக எனக்கு விருதும் தந்துள்ளது. அப்படி இருக்க நான் கொழும்பின் வெற்றியில் குளிர் காய்கிறேன் என்பது சுத்த பித்தலாட்டக் கதை. உமது காழ்ப்புணர்ச்சி இது.

கேள்வி: சிறுவர் போராளிகள் தொடர்பில் நீங்கள் காட்டிய கரிசணை என்பதனை ஏன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட.. ஊனமடைந்த.. பெற்றோரை இழந்த எமது ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மீது நீங்கள் காட்டவில்லை..??!

சங்கரி: யுத்தம் தான் முடிந்து விட்டதே. அந்தச் சிறுவர்களை.. கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்.. கெளரவ பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் தத்தெடுத்துவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களின் மனித நேயம் பற்றி நான் நன்கு அறிந்தவன்.

கேள்வி: நீங்கள் ஜனாதிபதி மனித நேயம் மிக்கவர் என்கிறீர்கள்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களோ.. அவரை மனிதப் படுகொலையாளன் என்றெல்லோ சொல்கிறார்கள்.

சங்கரி: எனது குடும்பத்தினர் உறவினர்கள் என்று பலர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் யாரும் அப்படிச் சொல்லவில்லையே. அது ஒரு சில புலம்பெயர் படிக்காத மொக்குகளின் தொலைநோக்கற்ற கருத்து.

கேள்வி: சரி அதைவிடுங்கள். இன்று உங்களுக்கு மாலைபோட்ட ஒருவர் பேசும் போது சொன்னார் நீங்களே இன்றைய நிலையில் தமிழினத்தின் "ஒப்பற்ற தலைவர்" என்று. உங்களை எந்தத் தலைவரோடு ஒப்பிட்டு அவர் அதனைச் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்..??!

சங்கரி: வேறு யார். தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தனோடு ஒப்பிட்டுத்தான்.

கேள்வி: 2000 ஆண்டுகளின் முற்பகுதியில்.. புலிகள் உங்களை அழைத்த போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறாமல் கழன்று கொண்ட நீங்கள்.. இப்போது அதனோடு எப்படி இணைந்து பணியாற்ற முன்வந்தீர்கள்..??!

சங்கரி: முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் விட்ட தவறுகளைத் திருத்த ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற வந்தேன். அதுமட்டுமல்ல.. அன்றிருந்த கூட்டமைப்பு வேறு இன்றிருக்கும் கூட்டமைப்பு வேறு. ஆனாலும் வந்த இடத்தில் எனக்குரிய மரியாதை இன்னும் கிடைக்கவில்லை. இப்படியே போனால் பிரபாகரனுக்குக் காட்டியது போல.. அவர்களுக்கும் சங்கரி என்றால் யார் என்று காட்டுவேன்..!

கேள்வி: புலிகள் இருந்த போது கிளிநொச்சிக்கு போக முடியவில்லை. தேர்தலை சந்திக்க முடியவில்லை... ஜனநாயகத்திற்கு புலிகள் பெரும் தடையாக உள்ளனர் என்று பலவாறு கூப்பாடு போட்டிருக்கிறீர்கள். இன்று நீங்கள் தஞ்சம் அடைந்த கொழும்பின் கைகளில் எல்லா அதிகாரமும் உள்ளது. இந்த நிலையில் ஏன் நீங்கள் வடக்கு முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடவில்லை..??!

சங்கரி: நான் புலிகள் இருந்த போது அப்பப்ப விட்ட சவுண்டை நீர் இன்னும் மறக்கவில்லை. ஆனால் நான் முள்ளிவாய்க்காலோடு அவற்றை மறந்துவிட்டேன் மன்னித்தும்விட்டேன். சுருங்கச் சொன்னால் இப்போது எனக்குப் பதவி ஆசை இல்லை.

கேள்வி: பழம்பெரும் அரசியல்வாதியான நீங்கள் "ஈழத்துக் கருணாநிதி" என்று சொல்லக் கூடிய அளவுக்கு உள்ள நீங்கள்.. உங்களின் அடுத்த வாரிசாக யாரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டு வர நினைத்திருக்கிறீர்கள்...?!

சங்கரி: என்ர மருமக்கள்.. பேரப்பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்கினம். அவர்களோடு கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுப்பேன். இன்னும் அதற்கான காலம் கனியவில்லை.

கேள்வி: சித்தார்த்தன்.. டக்கிளஸ் இவர்களோடு உங்கள் உறவு எப்படி உள்ளது..??!

சங்கரி: என் தம்பிகள் அவர்கள். தங்கக் கம்பிகள்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி.. ஓரிரு வரிகள்..

சங்கரி: தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது.. குண்டூசிகள் மத்தியில் உருளும் காற்றடித்த பலூன்.

கேள்வி: இந்தத் தள்ளாடும் வயதிலும் ஓய்வின்றி தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக உழைக்கும் நீங்கள்.. உங்கள் கட்சியின் முன்னைய தலைவர்கள் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..??!

சங்கரி: அவர்களின் சொத்தையே நான் அனுபவிக்கிறேன் என்று நன்றி உணர்வோடு.. கூறி வைக்க விரும்புகிறேன்.

கேள்வி: சரி தலைவரே. உங்களோடு உங்களின் 80வது அகவையில் பேசியதை இட்டு மிக்க மகிழ்ச்சி. இது குறித்து..

சங்கரி: இந்த வேளையில் மக்களுக்கு ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன். நானும் சுப்பிரமணியம் சுவாமியும் ஒன்று. அவரும் சட்டம் படித்தவர்.. நானும் சட்டம் தெரிந்தவன். அவரும் மெத்தப்படித்தவர். நானும் அப்படியே. சுவாமிக்கு கறுப்புச் சட்டைக்காரர்களைப் பிடிக்காது. எனக்குப் புலிப் பினாமிகளைப் பிடிக்காது. கேள்வி நீர் புலிப் பினாமி மாதிரி இருந்து கேள்வி கேட்டிருந்தாலும்.. என் திறமையை முழுமையாகக் கையாண்டு உமக்கு தக்க பதிலடி தந்திருக்கிறேன். இதுவே எனக்கு நானே வழங்கிய.. நல்ல பிறந்த நாள் வைன் ஆகும்..!!

கேள்வி: அந்த வைனை நன்கு சுவைத்தபடி மப்பில் மமதையில்.. மிதக்க .. வாழ் விலாங்கு வாழ வாழ்த்துகிறேன். நன்றி தலைவரே. :)

சங்கரி: கடைசியில் முதுகில் குத்திவிட்டுப் போகிறீர். போம் போம். எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. நான் பலமுறை செய்ததை நீர் எனக்கே செய்து காட்டுறீர். குட் பாய். :lol:

நன்றி: யாழ் இணையம்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:00 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க