Monday, July 28, 2008

நீதி கேட்கும் நாய் - உண்மைச் சம்பவம்.



Chhotu வும் அதன் எஜமானி அம்மாவான ராஜ்குமாரி தேவி (வலது) யும். சோட்டுக்கு வயது 7. அவன் ஒரு அநாதையாக வீதியில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளான்.

கிழக்கு இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தில் வளர்ப்பு நாயான Chhotu, ஊரில் சிலரைக் கடித்து அமைதியை குலைத்ததற்காகவும் சட்டத்தை மதிக்காமல் நடந்ததற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், விலங்குரிமை அமைப்பினரின் உதவியுடன் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் கீழ் நீதிமன்றில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளது.

Chhotu உண்மையில் பொதுமக்களை கடிக்கவில்லை என்றும்.. அது அதன் எஜமானி அம்மாவின் வீட்டுக்குள் நுழைய முனையும் கள்வர்களைத்தான் கடிக்கின்றது என்றும் கள்வர்களுக்கு உதவும் அயலவர்கள் பொறாமையில் சொல்வது போல அதற்கு விசர் பிடிக்கவில்லை என்றும் Chhotu க்காக வாதாடி வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி ராஜ்குமாரி தேவியின் நிலப்பத்திரங்களைக் கொள்ளையடிக்க என்று கள்வர்கள் அவரின் வீட்டுக் கதவினை உடைக்க முயல்கின்றனர். அவர்களையே சோட்டு கடிக்கிறது என்ற உண்மையையும் வழக்கறிஞர் போட்டுடைத்துள்ளார்.

இதை நிரூபிக்கும் வகையில் நீதிமன்றத்துக்கு வந்த Chhotu வும் நீதிமன்ற விசாரணையின் போது மிகவும் அமைதியாக இருந்ததுடன் யாரையும் பார்த்துக் குரைக்கவோ கடிக்கவோ முயலவில்லை.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக ஆகஸ்ட் 4 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போதும் Chhotu நீதிமன்றில் அவனின் எஜமானி அம்மாவுடன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்திய நீதிமன்றம் ஒன்று கோயில் நிலம் தொடர்பான வழக்கில் கடவுள் இராமருக்கு அழைப்பாணை அனுப்பக் கோரி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

நன்றி: யாழ் இணையம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 3:16 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க