Tuesday, July 14, 2009

கொடுமைகளின் தாயகம் சிறீலங்காவுக்கு தீர்ப்பெழுதும் நேரம் வந்துவிட்டது - ரெலிகிராப்//Sri Lanka has no foreign enemies. Multi barrel Rockets were used to kill thousands of Tamils in the recent war. img:my.telegraph.co.uk//

சிறீலங்கா சிங்கள அரசு பிற அந்நிய சக்திகளோடு சேர்ந்து அரங்கேற்றிய கொலைகளுக்கு தீர்ப்பு வழங்கும் நேரம் வந்துள்ளதாக பிரித்தானிய ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் தாங்கிய புகைப்படங்களுடன் சிங்களச் சிறீலங்கா அரசிற்கு வெளிநாட்டு எதிரிகள் இல்லாத நிலையில் பெரும் படை வலுவைத் திரட்டி தமிழர்களின் சிவிலியன் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக கனரக மற்றும் இரசாயன ஆயுதப்பாவனை செய்ததற்கான ஆதாரங்கள் சகிதம் மேற்படி கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.//They are let to languish behind barbed wires - img:my.telegraph.co.uk//

சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின இன அழிப்புச் செய்தியை வெளி உலகுக்கு கொணரும்.. ரெலிகிராப் பந்தி எழுத்தாளருக்கு தமிழர்கள் சார்பில் உங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்கள், படங்களுக்கு.. நன்றி தெரிவிக்க.. இங்கு அழுத்தவும்.

---------

சிறீலங்காவில் உண்மையில் என்ன நடந்தது..?! - காடியன்.

What really happened in Sri Lanka?

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:28 AM

8 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

i have just read the article.its well said.he has the full knowledge of our struggle.please comment on the article and thank mr richard dixon.

Tue Jul 14, 03:52:00 PM GMT+1  
Blogger நம்பி.பா. செப்பியவை...

உங்க பதிவில் டெலிகிராப் செய்தியின் தொடுப்பையும் கொடுத்திருக்கலாம்.

Tue Jul 14, 04:50:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

கொடுத்திருக்கிறேனே நம்பி.பா.

நாங்கள் எப்போதும் ஆதரங்களை இணைப்பது வழமை..!

(மேலதிக விபரங்கள், படங்களுக்கு.. நன்றி தெரிவிக்க.. இங்கு அழுத்தவும்.)

இங்கு அழுத்தி நோக்கலாம். பதிவின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

நன்றி உங்கள் மற்றும் அனானியின் கருத்துக்களுக்கு.

Tue Jul 14, 05:44:00 PM GMT+1  
Blogger supersubra செப்பியவை...

எங்க தமிழ் அரசியல் வாதிகளுக்கு இதையெல்லாம் மொழி பெயர்த்து யாராவது சொல்லுங்களேன். அவங்களுக்கெல்லாம் ஹிந்தி தான் தெரியும் தமிழ் ஆங்கிலம் எல்லாம் தெரியாது

Wed Jul 15, 10:10:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

supersubra..

வெட்டிப் பந்தாவுக்கு ஆங்கிலம் பேசுவாங்க.. கதைப்பாங்க.. எழுதுவாங்க.. ஆனால் உண்மைகளை படிக்க அறிய அதைப் பயன்படுத்தத் தயங்குவாங்க.

ஏன்னா உண்மைகள் அவங்க மடியிலையும் கைவைச்சிடுமே..! பதவிகள்.. பெருமைகள்.. பறிபோயிடுமே..!

உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.. supersubra.

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றிகள்.

Wed Jul 15, 10:53:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

What really happened in Sri Lanka?

http://www.guardian.co.uk/commentisfree/2009/jul/16/sri-lanka-conflict-inquiry

Fri Jul 17, 08:03:00 AM GMT+1  
Blogger தமிழ்நதி செப்பியவை...

'மல்டி பரலா... அப்படியென்றால் என்ன?'வென்று கேட்கும் சிறிலங்கா அரசு. அரசுகள்தான் பொய்யுரைப்பதில் புலமைவாய்ந்தவைகளாயிருக்கின்றனவே...

Fri Jul 17, 06:51:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றிகள் தமிழ்நதி தங்கள் ஆதங்கம் நிறைந்த கருத்தையே தமிழ் மக்களில் அநேகரும் கொண்டிருக்கின்றனர். காலம் தான் இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டும். காலத்தைப் பதில் சொல்ல வைக்க நாம் செயற்பட வேண்டும்.

Fri Jul 17, 10:52:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க