Monday, June 22, 2009

அன்று இந்தியா தோற்ற போது கனத்தது... இன்று மகிழ்ந்தது.



வழமையாக எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் இந்திய அணி விளையாடும் போது அதற்கு ஆதரவளிப்பதை தார்மீகக் கடமையாகக் கொண்டிருந்த ஈழத்தமிழ் மனசுகள் பல.. அண்மைய ஐ சி சி யின் 20/20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்ற போது மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆதரித்து ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொண்டன.

போட்டித் தொடரின் ஆரம்பத்தில் இருந்து அரை இறுதி வரை செல்வாக்குச் செய்து வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் பாகிஸ்தானிடம் தோற்ற போதும் மனசுகள் சங்கடப்பட்டுப் போயின.

இறுதிப் போட்டியில் கிரிக்கெட் களத்தில் சிங்களப் பயங்கரவாதிகள் தோற்ற போது மனசுகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்தன.

இதுதான் இன்றைய ஈழத்தமிழர் பலரின் மனங்களில் கிரிக்கெட்டின் நிலை.

இதற்குக் காரணம்.. இப்போட்டியில் செல்வாக்குச் செய்த 4/5 பிரதான அணிகளில் 3 நாடுகளைச் சேர்ந்த அணிகளை ஈழத்தமிழர்கள் ஜென்ம விரோதிகளாகப் பார்க்கும் நிலையை குறித்த நாடுகளின் மனிதாபிமானமற்ற இராணுவ, அரசியல் நிலைப்பாடுகள் ஈழத்தமிழர்களிடத்தில் விதைவிட்டுள்ளமை ஆகும். அது இலகுவில் ஆற்றப்படும் வகையிலும் இல்லை என்றே கூற வேண்டும்.



அந்த 3 நாட்டு அணிகளும் வேறு எவையுமல்ல.. இவை தான் அவை. வாளேந்திய சிங்கத்தோடு சிங்கள ஆதிக்கத்தை அணியில் நிலைநிறுத்தி உலகை வலம் வரும் சிறீலங்கா அணி. பச்சை நிற பின்னணியில் மத அடிப்படையை முன்னிறுத்தி உலகை வலம் வரும் பாகிஸ்தான் அணி. அசோகச் சக்கரத்தில் ஈழத்தமிழன் இரத்தம் வடிய உலகை வலம் வரும் இந்திய அணி.

அப்பாவிகளாய் தமக்கென்றொரு நாடில்லாத போதும் அணி இல்லாத போதும் தமது உறவென ஆதரித்த இந்தியாவை ஈழத்தமிழர்கள் இம்முறை முற்றுமுழுதாகவே கைவிட்டு விட்டனர்.. ஏனிந்த மன மாற்றம். கிரிக்கெட்டிலும் அரசியலா என்று கேள்வி கேட்க மனசுகள் இருந்தாலும்.. நேற்று வரை இந்திய அணிக்காக தார்மீக ஆதரவளித்த உறவுகளை இந்திய அரசின் கொடுங்கோன்மை சிங்களப் பேரினவாதப் பிசாசோடும் பாகிஸ்தானிய மதவாத வெறியோடும் கூட்டுச் சேர்ந்து சாகடித்ததை மறக்க அவர்கள் தயாராக இல்லை என்பதையே இவை காட்டி நிற்கின்றன.

இதில் நியாயம் இருக்கா இல்லையா என்பதிலும்.. மனிதாபிமானம் தொலைத்த ஒரு அயலில் ஈழத்தமிழர்கள் வாழ நேரிட்டுள்ளது என்பதை மட்டும் இது நிதர்சனமாகக் காட்டி நிற்கின்றது. அதையே இந்த மன மாற்றங்களும் எடுத்துச் சொல்கின்றன.



சிந்திப்பார்களா.. இந்த ஆதிக்க சக்திகள்..?! இவர்களால் அண்டை அயலில் ஆதரவுச் சக்திகளான விளங்கிய ஈழத்தமிழரையே அரவணைக்க முடியவில்லை. ஆனால் உலகை ஆளக் கனவு காண்கிறார்களே... இப்படியான அணுகுமுறைகளூடு அது சாத்தியப்படும் விடயம் தானா..??!

விடை தெரியாத கேள்விகளோடு கிரிக்கெட் ரசிகன்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:16 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க