Tuesday, May 19, 2009

பிளாஸ்ரிக் சேர்ஜரி பிரபாகரன் மாண்டார்; தேசிய தலைவருக்கு உயிராபத்து இல்லை.



//சிறீலங்கா சிங்கள அரசு உருவாக்கிக் காட்டிய பிரபாகரன்.//

இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.

அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.



//பிளாஸ்ரிக் சேர்ஜரி மூலம் சோடிக்கப்பட்ட முகம்.//



//உண்மை முகம்.//

(படங்கள்: மற்றும் இது தொடர்பான இன்னொரு ஆக்கம் http://veltharma.blogspot.com)

அதற்கு அமைய பிளாஸ்ரி சேர்ஜரி (plastic surgery) மூலம் தத்துரூபமாக முகமளவில் பிரபாகரனை ஒத்து உருவாக்கப்பட்ட ஒரு உடலை பிரபாகரனின் உடல் என்று வீடியோ எடுத்துக் காட்டி உலகெங்கும் வாழும் மக்களை ஏமாற்றி வருகிறது. இது ஒருவகையில் தமிழ் மக்களை பாதிக்கும் விடயமாக இருப்பினும் இன்னொரு புறத்தில் இறந்தவராக சொல்லப்படுபவர் அப்படியே இறந்ததாக இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு உதவலாம். இந்தியப் படையினர் காலத்தில் இறந்தவர் இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.

தலைவர் பற்றிய காணொளிகள் சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப என்றே வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முகம் போன்ற ஒன்றை உடலம் ஒன்றின் மீது போலியாக பிளாஸ்ரி சேர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும் (சீருடை).. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். இதனை இட்டு மக்கள் குழப்பமடையாமல் எதிரியின் தமிழின அழிப்புத் திட்டத்தை முறியடிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முன் வர வேண்டும். உலகத்தமிழினமும் இதற்காக ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி நேற்று, நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்று (19 -05- 2009) தான் மீட்கப்பட்டதாம் என்று சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளர் நாணயக்கார கூறியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நேற்று பிரபாகரன் இறந்ததாக தாம் (சிறீலங்கா) ஒரு அறிக்கையும் விடவில்லை என்று முழுப் பொய்யைக் கூறியுள்ளார். இந்த எதிரியின் குழப்பமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிரிகள் தேசிய தலைவரின் இழப்பு எத்தகைய பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும், சர்வதேசத்தின் (குறிப்பாக நோர்வே அல்லது மேற்குலக நாடுகள் சிலவற்றின்) தலையீட்டை எப்படித் தடுக்கும் என்பதை கணித்துவிட்டு.. இப்போ திட்டமிட்டு இந்தப் பரப்புரையை செய்கின்றனர். அதற்கு நாணயக்காரவின் இந்த குழப்பம் நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. எமக்கு அது அல்ல இப்போ முக்கியம்.

தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவித் தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவி மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

தமிழீழ விடுதலைப் போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே இன்றைய எமது சிந்தனையில் இருக்க வேண்டிய முக்கிய விடயம்.

நிச்சயம் தேவையான பொழுதில் தேசிய தலைவர் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..!

படம் மற்றும் பிரபாகரன் இறப்புப் பற்றிய செய்தி மூலம்: bbc.co.uk

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:42 AM

19 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்,
தமிழர்களுக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறெதுவும் இல்லை.
தொலைக்காட்சியில் போட்டு நாறடிப்பதை பொறுக்கமுடியவில்லை.
தலைவர் உயிரோடு நலமாக இருக்க வேண்டும்.
இது தான் இப்போது அனைவரது பிரார்த்தனையும்.

Tue May 19, 11:36:00 AM GMT+1  
Blogger கிஷோர் செப்பியவை...

மனதிற்கு இதம் அளிக்கும் பதிவு

Tue May 19, 11:50:00 AM GMT+1  
Blogger மகிழ்நன் செப்பியவை...

http://periyaryouth.blogspot.com/2009/05/15.html


பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்” 15

Tue May 19, 11:59:00 AM GMT+1  
Blogger ஐந்திணை செப்பியவை...

But SL army website http://www.army.lk/ says that DNA test is confirms it is Prabakaran :(

Tue May 19, 12:03:00 PM GMT+1  
Blogger தீப்பெட்டி செப்பியவை...

இதுவே உண்மையாகட்டும்..

Tue May 19, 12:19:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

truly it 's bluff. do you think person in the war will shave every day
sangamithra

Tue May 19, 01:06:00 PM GMT+1  
Blogger அஹோரி செப்பியவை...

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும்

Tue May 19, 01:45:00 PM GMT+1  
Anonymous kavitha செப்பியவை...

முதலில் வாய் திறந்தவாறு உள்ளது.. அடுத்த படத்தில் வாய் மூடியவாறு உள்ளது.

Tue May 19, 02:12:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

appadi poadu arivaalai.yaarukkum kidaikkatha thalaivan namakku kidaiththirukkiraan.ethatku kavalai?pirabakaran oadi olinthuviddaan. than pillaikai velinaadditku anuppividdaan enravarkalin mugathirai kilinthathu,aduththuthalaivan alinthaan enpavarkain mugathirai kiliyum.konjam porungal.

Tue May 19, 02:15:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

http://i39.tinypic.com/2lnjzfm.jpg

Tue May 19, 02:20:00 PM GMT+1  
Anonymous kipo செப்பியவை...

Hey Guys
Look at the finger and compare it with older pictures (here is one: http://tamilaffairs.com/wp-content/uploads/2009/01/ltte_leader_27_11_06_011.jpg) and look how thick they are !!!

Tue May 19, 04:40:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

இலங்கை ராணுவம் வெளியிட்டிருக்கும் படத்தில் இருப்பது பிரபாகரன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உற்றுப் பார்த்தால் இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரபாகரன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியுலகுக்கு தன் முகத்தை காட்டிய பிரபாகரன் மீசையை எடுத்திருந்தார். அதன்பிறகு அவர் மீசை வைப்பததாக தெரியவில்லை. ஐம்பதைக் கடந்ததால் முகம் கொஞ்சம் சுருங்கி இருந்ததையும் கவனித்திருக்கலாம். இலங்கை அரசு இப்போது காட்டியிருக்கும் படத்தில் அவ்வாறாக இல்லாமல் மீசையோடு ஜம்மென்று இளமைக்கால பிரபாகரன் இருக்கிறார். பிரபாகரனின் முகத்தை உற்றுப் பார்ப்பவர்கள் முகவாய்க்கட்டின் கீழே வெட்டு போல இருப்பதை கவனிக்கலாம். இலங்கை அரசு தரும் வீடியோவில் அந்த வெட்டு இருப்பதாக தெரியவில்லை.

இலங்கை அரசு கொடுத்துவரும் தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. ஆம்புலன்ஸில் தப்பிச் சென்றபோது கொன்றோம் என்றார்கள். இப்போது ஒரு நதிக்கரை ஓரத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் உடலை ஏற்றுவது போல காட்டுகிறார்கள். டி.என்.ஏ. சோதனையை இரண்டு மணி நேரத்தில் செய்துவிட முடியுமாவென்ற சந்தேகமும் இருக்கிறது. நேற்று இலங்கை அரசு கொடுத்த சார்லஸ் அன்ரனி படத்தில் இருப்பதும் பிரபாகரன் மகனல்ல என்கிறார்கள்.

இலங்கை அரசு சொன்னதுமாதிரி தப்பிச் செல்பவராக இருந்திருந்தால் க்ளீன் ஷேவ் செய்துக் கொண்டு கிளம்பியிருப்பாரா என்பது சந்தேகம். பிரபாகரனின் அடையாள அட்டையை காண்பித்தார்களே என்று கேட்கிறார்கள். ஒபாமாவின் அடையாள அட்டையை கூட, பாஸ்போர்ட்டை கூட கொஞ்சம் நஞ்சம் போட்டோஷாப் தெரிந்தவர்கள் உருவாக்கமுடியும்.

எதுவாக இருந்தாலும் புலிகள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்கலாம்.

http://www.paristamil.com/tamilnews/?p=9877

Tue May 19, 04:44:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Tamil doubts over rebel leader's death

By Alastair Lawson
BBC News

Picture allegedly showing the body of Tamil Tiger leader Velupillai Prabhakaran
The photos said to show Prabhakaran's body have not convinced everyone

The Sri Lankan military has released pictures of Tamil Tiger leader Velupillai Prabhakaran which it says prove conclusively that he is dead.

State and private stations aired footage of what they said was the body of Prabhakaran, along with what looked like his Tamil Tiger identity card and tag.

The army says his body has been positively identified with DNA testing.

But rebel sympathisers say questions remain about when and how he and other rebel leaders were killed, and over apparently contradictory statements in relation to his reported death.

Some among Sri Lanka's Tamil community and the influential Tamil diaspora doubt whether the rebel leader really is dead.

Ambushed

"The government is eager to present this as its Ceausescu moment - with photographs of the body of the tyrant widely released to give the impression that a defining moment has been reached," one Colombo-based diplomat told the BBC - drawing an analogy with the filmed execution of the Romanian dictator in December 1989.

Poster of President Rajapaksa
The president is ecstatic over the victory on the battlefiled

"But there are questions surrounding Prabhakaran's identity tag. Is it really credible that a man reputed to have numerous lookalike doubles to avoid capture by the army would really carry this around with him?"

The army says Prabhakaran's bullet-ridden body was found on the banks of the Nanthikadal lagoon, his last stronghold in north-east Sri Lanka on Tuesday morning. Earlier it said his body was found on Monday morning.

Army spokesman Brig Udaya Nanayakkara said the rebel leader had been shot in scrubland - probably in fierce fighting.

That statement contradicted an earlier announcement - made on state television but never verified by the army - that Prabhakaran's badly burnt body was discovered on Monday.

It said Prabhakaran had been killed after he was ambushed by commandos as he made a desperate attempt to break through government lines in an ambulance. He had been badly burnt when his vehicle burst into flames, it said.


Our beloved leader Velupillai Prabhakaran is alive and safe
Selvarasa Pathmanathan
Tamil Tiger official

State TV also said the rebel leader's body had been found with those of intelligence chief Pottu Amman and Soosai - the Tamil Tiger naval commander.

But on Tuesday the army said Soosai's death had not been confirmed.

Its version of events was first given by Gen Sarath Fonseka.

"The good news from the war front is that the body of the leader of the terrorist organisation which destroyed the country for the last 30 years, Prabhakaran, have been found by the army. We have identified the body," he said.

Gen Fonseka said the bodies of the rebels would be disposed without any formal funerals as "many of them were in bad shape".

Moments later, the private TV stations Derana and Swarnavahini showed soldiers surrounding what the troops said was Prabhakaran's body, with his distinctive moustache and regulation tiger-stripe camouflage fatigues.

Denial

The government argues that there are perfectly innocent explanations for the differing accounts of Prabhakaran's death - that in war time what is happening on the battlefront can sometimes get confused.

The BBC Tamil section's Jagadheesan Leklapoodi says that following the release of the photographs most Indian Tamil newspapers appear to have accepted that Prabhakaran is dead.

"But the Tamil population around the world will only grudgingly accept that is the case," he said.

"Prabhakaran is revered by some of them as the liberation hero fighting for their cause for over 30 years. Many of them will find it difficult to accept that he is no longer on the scene."

So far the most influential pro-rebel website, TamilNet, has not acknowledged the death.

Speaking before the release of the photos, a rebel official abroad denied Prabhakaran had been killed and said the Tamil Tiger leader was "alive and safe".

"He will continue to lead the quest for dignity and freedom for the Tamil people," Selvarasa Pathmanathan said in a statement posted on the pro-rebel TamilNet Web site on Tuesday.

But he offered no further details or evidence to support the claim, only drawing attention to what he said was Colombo's "treachery" in the killings of senior unarmed Tamil Tiger political wing leaders in the north-east, who he said had been shot as they carried white flags.

While the land fighting between the two sides has finished - the propaganda battle continues undiminished.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8057637.stm

Tue May 19, 05:25:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Will the real Prabhakaran ever come forward?

Very interesting ha….!!

Check this link please:
http://www.srilankaguardian.org/2009/04/will-real-prabhakaran-ever-come-forward.html

- sam - doha

Tue May 19, 09:47:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்: சடலத்தை அடையாளம் காட்டியதாக BBC யிடம் கூறுகிறார் கருணா: இது பிரபாகரன் அல்ல ‐ லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் ‐ எவ்வாறு இறந்தார் என்பதை விபரிக்கப் போவதில்லை பாதுகாப்பு இணையத்தளம் ‐ புலிகளின் பதில் என்ன?

புதிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=9720&cat=1

Wed May 20, 07:27:00 AM GMT+1  
Blogger மகேந்திரன் எட்டப்பராசன் செப்பியவை...

இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

Wed May 20, 11:15:00 AM GMT+1  
Anonymous Hq tamil செப்பியவை...

தலைவர் உயிரோடு நலமாக இருக்க வேண்டும்.தமிழ் மண்ணுக்காகவே வாழ்ந்த தலைவன்

Thu May 21, 10:20:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

Thu May 21, 10:53:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Hello there,

Thanks for sharing this link - but unfortunately it seems to be down? Does anybody here at kundumani.blogspot.com have a mirror or another source?


Cheers,
Peter

Fri Mar 25, 09:47:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க