Thursday, May 21, 2009

ராஜபக்சவுடன் விருந்துண்டு தமிழர்களின் இன அழிவைக் கொண்டாடிய இந்தியத் தூதுவர்கள்.



ஈழத்தமிழர்களுக்கு எதிரான மற்றும் விடுதலைப்புலிகளுடனான இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் முடிவடைந்ததை அடுத்து சிறீலங்காவுக்கு சோனியா காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளா சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சிறீலங்கா சிங்கள இனவாதித் தலைவன் மகிந்த ராஜபக்சவை அவனின் இல்லத்தில் சந்தித்து அவனிட்ட அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்ததுடன் தமிழர்களை போரில் அழித்ததற்கு பாராட்டும் பத்திரமும் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி விருந்தின் போது ஊடகங்களுக்கு காட்ட கொசிப்பாக தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கல்.. சுயாட்சி போன்ற விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதை ராஜபக்ச வலக் காதால் கேட்டு இடக் காதால் வெளிவிட்டுவிட வேண்டும் என்றும் இந்திய தூதர்கள் வினயமாகக் கேட்டுக் கொண்டனராம்.

மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்த இந்த விருந்துபசாரத்தின் போது சிறீலங்கா அரசின் பரிசாக பிரபாகரனின் மரணச்சான்றிதழை இந்திய பிராந்திய வல்லரசிடம் தர உத்தியோகபூர்வமாகக் கேட்கப்பட்டுள்ளதாம்.

செய்தி மூலம்:

ராஜபக்சே-நாராயணன் பேச்சு: பிரபாகரன் மரண சான்றிதழ் கேட்கும் இந்தியா

கொழும்பு: கொழும்பு வந்த இந்தியத் தூதர்களான எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே காலை விருந்தளித்து உபசரித்தார். அவருடன், இந்தியத் தூதர்கள் தமிழர்களின் மறு வாழ்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், வெளியுறவுத்துறை செயலாளர் மேனனும் கொழும்பு சென்றுள்ளனர்.

இன்று காலை அவர்கள் இருவரும் அதிபர்[^] ராஜபக்சேவை அவரது வீட்டிற்கு செனறு சந்தித்தனர். அப்போது ராஜபக்சே இரு இந்தியத் தூதர்களுக்கும் விருந்தளித்தார்.

பின்னர் தமிழர்களின் புனர்வாழ்வு, அதிகாரப்பகிர்வு, சுயாட்சி உள்ளிட்டவை குறித்து விருந்து சாப்பிட்டபடியே மேனனும், நாராயணனும், ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினர்.

அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும், பாதுகாப்பு[^] நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார்கள்.

இந்தியா ரூ. 500 கோடி நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளது. அவற்றை தமிழர்களுக்கு வினியோகிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்களாம்.

இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மறு சீரமைப்புக்காக தரும் பெரும் நிதியுதவிக்கும், பிற உதவிகளுக்கும் தாங்கள் நன்றிக் கடன் பட்டிருப்பதாக ராஜபக்சே, நாராயணன், மேனனிடம் தெரிவித்தார்.

மரணச் சான்றிதழ் கேட்கும் இந்தியா:

அதேபோல பிரபாகரன் மரணம் குறித்த மரணச் சான்றிதழ் (டெத் சர்டிபிகேட்) ஒன்றைத் தருமாறும் ராஜபக்சேவிடம் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த சான்றிதழ் தேவைப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளதாம்.

thatstamil.com

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:44 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க