Wednesday, July 31, 2013

ஐநா விசாரணை மேற்கொள்ள சிரியா அனுமதி. ஆனால் நவநீதம் பிள்ளைக்கு சிறீலங்கா கட்டுப்பாடு.

சிரியா இரசாயன ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கான இடங்களில் ஐநா ஆய்வும் விசாரணையும் நடத்த சிரியா அனுமதி அளித்துள்ளது.

ஆனால் ஐநா மூவர் குழு பரிந்துரைக்கு அமைய கூட ஒரு குழுவை அனுப்பி சிறீலங்காவில் அதன் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித இனப்படுகொலைகளை (தமிழினப் படுகொலை), மனித உரிமை மீறல்களை விசாரிக்க..ஐநா இன்னும் பெரிதாக முயற்சிக்கவும் இல்லை. சிறீலங்காவும் அனுமதிப்பதாக இல்லை.

சிரியாவில் மேற்குலக ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள்  போல்.. புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஐநா சிரியா விவகாரத்தில் சிரிய அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கே அதிகம் முக்கியம் கொடுத்து கையாண்டு வருகிறது. ஆனால் சிறீலங்கா விவகாரத்தில் பாங்கி மூன் பாராமுகமாக இருந்து இனப்படுகொலை சிங்கள அரசை பாதுகாத்து வருகிறார்.

இந்த நிலையில் சிறீலங்காவிற்கு அங்கு நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கண்காணிக்க.. விஜயம் செய்யவுள்ள ஐநா மனித உரிமை செயலரான நவநீதம் பிள்ளைக்கும் சிறீலங்கா அரசு பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இருந்தாலும் இவற்றை எல்லாம் மன்னிப்பது போல.. சிறீலங்காவில் பிரிட்டனின் காலணித்துவக் கூட்டமைப்பான பொதுநலவாயக் கூட்டமைப்புக் கூட்டத்தை நடத்த சில மேற்கு நாடுகளும் இந்தியாவும் கங்கணம் கட்டி நிற்பதோடு.. சிறீலங்கா அரசு செய்த மனித உரிமை மீறல்களை காலத்தை இழுத்தடித்து மறக்கச் செய்யும் முயற்சிலும் ஈடுபட்டு வருகின்றன..!

பிரதான செய்தி:

UN chemical weapons inspectors to visit Syrian sites
 
_69052589_damascus_khanalassal_0713.gif
 
Both sides blame each other for the Khan al-Assal attack
 
Syria has agreed to allow UN investigators to visit three sites where chemical weapons have allegedly been used, the UN has said.

The inspectors will go "as soon as possible", a statement from Secretary General Ban Ki-moon's office said.

http://www.bbc.co.uk/news/world-middle-east-23524536

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:04 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க