Saturday, August 23, 2008

மனிதத் தாய் கைவிட்டாள் நாய்த் தாய் காப்பாற்றினாள்.



தாய்மையுள்ளம் கொண்ட நாய் La China

14 வயதேயான ஒரு மனிதப் பெண்ணுக்கு பிறந்தது ஒரு ஆண் குழந்தை. சமுதாயத்துக்குப் பயந்தோ என்னவோ பிறந்த குழந்தையை வயல் வெளியில் குப்பை மேட்டில் போட்டுவிட்டு போய்விட்டாள் பெற்ற தாய்.

ஆனால் சில குட்டிகளிற்கு தாயான நாய் ஒன்றோ.. தன் குட்டிகளோடு குட்டியாய் அந்த மனிதக் குழந்தையையும் காப்பாற்றி பராமரித்திருப்பது மனித வர்க்கத்தையே ஒரு கணம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மனிதக் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இருந்து, குறித்த பெண் நாயால் 50 மீற்றர்கள் தொலைவில் இருந்த தனது குட்டிகளின் பராமரிப்பிடத்துக்கு காவிச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் நடந்தது இந்தியாவில் அல்ல தென் அமெரிக்க நாடான அஜென்ரீனாவில்.

8 வயதான அந்த நாய்க்குள்ள தாய்மை உணர்வு மனிதப் பெண்ணுக்கு தொலைந்து போனது ஆச்சரியப்படக் கூடியதாக இருப்பினும்.. இன்றைய பெண்களிடம் அது சாதாரணம் எனலாம்.

எனிப் பெண்களைப் பார்த்து "பிச் (bitch)" என்று கூடச் சொல்லக் கூடாது. பெட்டை நாய்க்குக் கூட தாய்மையின் கடமை புரிகிறது.. ஆனால் பகுத்தறிவுள்ளவற்றுக்கு..???!

முழுவிபரம் இங்கு.

தமிழில் யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:03 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

//எனிப் பெண்களைப் பார்த்து "பிச் (bitch)" என்று கூடச் சொல்லக் கூடாது.//

என்ன தான் இருந்தாலும் இது ரெம்ப ஓவர் பாருங்கோ. :)

Sat Aug 23, 10:50:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க