Tuesday, January 24, 2012

2012 இல் உலகப் பொருளாதாரம் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.


ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம்  மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா தலைமையில் நாடுகள் போர் அச்ச சூழல் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. அதுமட்டுமன்றி ஈரான் மீது புதிய பொருண்மிய  தடைகளையும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விதித்துள்ளன.

இது ஈரானின் எரிபொருளை நம்பி பொருண்மியம் வளர்க்கும் சீனா.. இந்தியா போன்ற ஆசிய பொருண்மிய சக்திகளுக்கு இரட்டிப்பு நெருக்கடியை வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.

இத்தனை சவால் மிகு சூழலை உலகப் பொருண்மியம் எப்படி சந்திக்கப் போகிறதோ என்ற அச்ச நிலை ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம்.. ஆபிரிக்க தேசங்களோ வறட்சி.. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையும் தொடர்கிறது.

உலகப் பொருண்மியத்தின் இந்த நெருக்கடி நிலை.. மூன்றால் உலக நாடுகளை.. பணக்கார நாடுகளின் உதவியை எதிர்பார்த்திருக்கும் நாடுகளை.. அதிகம் பாதிக்க செய்யும் என்பதிலும் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

இதனை உலக சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ.. என்ற பெரிய அச்சம் சூழ்ந்துள்ள நிலையில்.... Doomsday (21-12-2012) உலக அழிவு நாள் பற்றிய பீதியும்  2012 இல் கிளம்பித் திரிகிறது. இவ்வகையான அச்ச சூழல்களின் மத்தியில் உள்ள உலக மக்களுக்கு.. லண்டன் ஒலிம்பிக் மட்டுமே..  கொஞ்சம் ஆறுதலான விடயமாக இருக்கும்..!

மேலதிக விபரங்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:59 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க