Monday, April 16, 2012

மீன் வறுவல் செய்வது எப்படி.. எளிமையான செய்முறை

மீனை வாங்கி.. ( முழு மீன் ) ஓரளவு மெல்லிய வட்டம் வட்ட துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்யுங்கோ. (சதுரமுகி வடிவில் துண்டு துண்டாக வெட்ட வேண்டிய மீனாகின் துண்டு துண்டாகவும் வெட்டலாம் (துண்டு மீன்))

Posted Image

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு (தேவையான அளவு).. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த மீனைப் போட்டுப் புரட்டி எடுங்கோ. புரட்டி எடுத்த மீன் துண்டுகளை அப்படியே ஒரு 30 நிமிடம் காக்க வையுங்கோ.
--
அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் (oven) வைத்து பேக் (bake) பண்ணியும் (சராசரியாக 30 - 20 நிமிடங்கள் -மீனின் வகை, துண்டுகளின் பருமனுக்கு ஏற்ப.. உங்களின் தேவைக்கேற்ப நேரம் கூடலாம்.. சரியான பதம் வரும் வரை நீங்கள் நேரத்தை நீட்டிக்கலாம்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் (frying) பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை  ( சராசரியாக 20 - 30 நிமிடங்கள் - மீனின் வகை, துண்டுகளின் பருமனுக்கு ஏற்ப, உங்களின் தேவைக்கேற்ப நேரம் கூடலாம்.. சரியான பதம் வரும் வரை நீங்கள் நேரத்தை நீட்டிக்கலாம்) வாட்டி எடுங்கள். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

இது நான் மீன் வறுவல் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

Posted Image


(படங்கள்: இணையத்தில் இருந்து)

பதிவு: யாழில் இருந்து நெடுக்காலபோவன்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:09 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க