Tuesday, August 27, 2013

pastii-pizza எங்கள் கண்டுபிடிப்பு. (சுவையான.. ஸ்ரைலான உணவு)


மொத்த சமையல் நேரம்: 1 மணித்தியாலம். (நீங்கள் தொடர்ந்து சமையலறையில் இருக்கனுன்னு அவசியம் இல்லை. இதையே சாட்டு வைச்சு.. ஊரை ஏமாற்றாமல்.. வேறு பயனுள்ள அலுவலையும் கவனிச்சுக் கொண்டு இதனை தயார் செய்யலாம்.) 

தேவையான பொருட்கள்:

12099011_H.jpg?identifier=d53f9d33cac0a2
178933885550e155a537d1a.jpg
Red_Capsicum_2.jpg

Bright_red_tomato_and_cross_section02.jpGluten-free-pasta__1331319a.jpgcheddar-cheese.jpeg
Salt-Chips1.jpg

செய்முறை:

* சுத்தமான பாத்திரத்தில் போதியளவு சுடுநீரை ஊற்றி பாஸ்ராவை வேக வைக்கவும்.

* பாஸ்ரா நன்கு வெந்து வந்த பின்.. மேலதிக நீரை வடித்து அகற்றவும்.

* அதன் பின் வெந்த பாஸ்ராவுக்குள் தேவையான அளவு ( பொதுவாக 4 தொடக்கம் 6 மேலே படத்தில் காட்டியது போன்ற ஒரு பக்கெட் பாஸ்ராவுக்கு மேசைக் கரண்டி.. ) பாஸ்ரா சோசை விட்டு கரண்டியால்..நன்கு கலக்கவும்.

* சிறிதளவு துருவிய சீஸையும் கொட்டி நன்கு கலக்கவும்.

* சுவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்தும் கலக்கிக் கொள்ளவும்.

இவற்றைக் கலக்கி எடுத்துக் கொள்ள முன்.. வெங்காயம்.. குடை மிளகாய்.. தங்காளி இவற்றை வட்டமாகவோ.. நீளமாகவே வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

மேலே சொன்ன செய்முறைகள் முடிந்த கையோடு உங்கள் ஓவன் சரியான முறையின் வேலை செய்யுதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும்.. (அநேக தமிழாக்களின் வீடுகளில் ஓவன் சரியா வேலை செய்யுறதில்ல. கண்டதையும் கண்டபடி...திருகோ திருகென்று திருகி.. விரைவில் பழுதாக்கி விடுகிறார்கள். அல்லது காலாவதியான ஓவனுக்கு வெளியில் துடைத்து பளபளக்க வைச்சுக் கொண்டு.. உள்ள கறள் கட்ட வைத்திருப்பார்கள்.)

ஓவன் வேலை.. செய்தால் மேற்கொண்டு கீழ் வரும் செய்முறையை தொடரவும்.

நீங்கள் மேலே தயாரித்துள்ள பாஸ்டா மிக்ஸ் (பாஸ்டா கலவை) க்கு ஏற்ப கேக் வாட்டும் தட்டை எடுத்து.. அதனுள் ஈயக் கடதாசியை விரித்துக் கொண்ட பின் மேற்படி.. பாஸ்டா மிக்ஸைக் கொட்டவும். அதனை சமனாக தட்டு முழுவதற்கும் என்று பரப்பி எடுக்கவும். [பீட்சா சூடாக்கும் தட்டுள்ளவர்கள் அதில் இதனைச் செய்தால் வரவேற்கப்படும். ஆனால் ஈயக்கடதாசியை போட மறந்திடாதீர்கள். அப்புறம்.. கீழ கரிப்பிடிச்சிட்டு என்று நம்ம வந்து திட்டக் கூடாது. ]

மேற் சொன்னபடி.. பரப்பி.. எடுத்த பின்.. பீட்சாவிற்கு தூவுவது போல.. துருவிய சீஸ்.. மற்றும் வெங்காயம்,பெப்பர், தங்காளி (விரும்பியவர்கள்.. jalapeño உட்பட்ட வேறு மரக்கறிகளும் தூவலாம்.. சிறிய அளவிலான ரிக்கா.. கோழித் துண்டுகளையும் தூவலாம். pepperoni போட விரும்பிறவர்களும் போடலாம். ) போன்றவற்றை பாஸ்டா மிக்ஸின் மேலே பரவலாகத் தூவி எடுக்கவும்.

BE3003021MSS.JPG

அப்புறம் என்ன.. உங்கள் ஓவனை 120 தொடக்கம் 180 பாகைக்குள் ஒன்றில் வைத்து அல்லது... பாகை காட்டி இல்லாதவர்கள் இலக்கம் 5 தொடக்கம் 8 வரை இலக்கங்களுள் ஒன்றைத் தெரிவு செய்து.. 5 நிமிடங்கள்.. முன் சூடு காட்டிய பின்... மேற்படி.. Pastii - pizza கலவையை (மிக்ஸ்) 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை (வேகிற அளவிற்கு ஏற்ப நேரம் கூடலாம்.. குறையலாம்) வாட்டி (வெதுப்பி) மேலே சீஸ் உருகி.. நொதுமல் அற்ற பொன்னிறப் படையாகும் வரை.. வாட்டி எடுக்கவும்.

இப்போ.. உங்கள்.. எங்கள் பாஸ்ரி பீட்சா தயாராகி இருக்கும். தக்காளி சோஸோடு தொட்டும் சாப்பிடலாம். சாப்பிட நிச்சயம் முள்ளுக்கரண்டி பாவிக்கவும்.

இந்தப் pastii-pizza எங்களுக்குரியது. இதனை விளம்பரங்களில்.. உற்பத்திகளில் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்..! கடைகளில் செய்து விற்க விரும்புவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும்.

இறுதித் தயாரிப்பு இப்படி இருக்கும்..............

IMG_20130824_191722.jpg



படைப்பு: நெடுக்ஸ்.

பிரசுரிப்பு: குருவிகள்

சமைத்துப் பார்த்து சுவைத்து உங்கள் கருத்தையும் சொல்லுங்க..!

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:00 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க