Monday, August 26, 2013

காதலுக்கு ஆப்படிச்ச தாமினி சேரனுக்கு வாழ்த்துக்கள்.

bleedingheart2nh7.jpg

"காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன்."

தாமினி சேரனின் முடிவை காதல் ஒழிப்பு சங்கத்தின் சார்ப்பில் வரவேற்கிறோம். எனி உங்கள் படிப்பை பார்த்துக் கொண்டு.. அமைதியான வழியில் நல்ல வாழ்வை அமைக்கவும்.. அப்பா அம்மா சொல்லுற வழியில் ஒரு துணையை தேடிக் கொள்ளவும்.. காசுக்கு.. கவர்ச்சிக்கு எடுக்கும்.. யதார்த்தத்திற்கு புறம்பான.. சினிமா பார்த்து கெடாமல் இருக்கவும்.. வாழ்த்துகின்றோம்.

நன்றி.

நெடுக்காலபோவன்.
ஸ்தாபகர், தலைவர், செயலாளர் நாயகம், பொருளாளர், CEO
காதல் ஒழிப்பு சங்கம்.
யாழ்.

ஆதி
நிறுவினர்.
காதல் ஒழிப்பு சங்கம்.
யாழ்.

[ contact detail: http://www.yarl.com/forum3/index.php?showtopic=29602&st=0&p=352365  ]


செய்தி:

சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார். நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி. தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர். தரையில் விழுந்து... அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்," என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சேரனின் இந்த செய்கை, வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

பேஸ்புக்கில்..

முன்னதாக இன்று காலை பேஸ்புக்கில் சேரன் இப்படி எழுதியிருந்தார்: "இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...."


- Thatstamil

Labels: , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:16 AM

3 மறுமொழி:

Blogger Unknown செப்பியவை...

சேரனின் அடுத்த காதல் படத் தலைப்பு ....?
''சேரன் இயக்கத்திலே ஒரு காதல் படம் எடுக்கலாம்னு இருக்கேன் ,பொருத்தமா என்ன டைட்டில் வைக்கலாம் ?''
''தாமினி ,இனி என் பக்கம்னு வைங்க !''
உங்க வாழ்த்தோடு இன்றைய என் பதிவையும் சேர்த்துக்குங்க !

Mon Aug 26, 03:32:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

சேரனும் அவர் கூட்டமும் யாழ் காதல் ஒழிப்பு சங்கத்திற்கு நிதி அள்ளி வழங்குவார்கள்.

Mon Aug 26, 09:18:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

விசிட் அடிச்சதும் இல்லாமல் கருத்தும் சொன்ன Bagawanjee KA மற்றும் அனானிக்கு நன்றி. :)

சேரனும் கூட்டமும் தரும் பங்களிப்பில் எவ்வளவு சதவீதம்.. எதிர்பார்க்கிறீங்க அனானி..??! உங்கள் பங்கு எங்களுக்கு வேணாம். நீங்கள் அதனை காதல் ஒழிப்புக்கு செலவிட்டாலே போதும். :))

(நெடுக்காலபோவன் மற்றும் ஆதி சார்ப்பாக..! - குருவிகள்.)

Mon Aug 26, 09:30:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க